சீரடி நாயகனே சாய் அப்பா - நாடுவோர் நலம் காக்கும் சாய் அப்பா
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Music: Deepak Krishna
Singers: Sathesh Ragupathy, Deepak Krishna
Lyrics - K.Sivakumar
வாடி நிற்கும் எளியோரைக்
காக்கும் குரு- எந்த குரு?
வயிற்றுப் பசியைத் தீர்த்து வைத்து
மகிழும் குரு- எந்த குரு?
நாடி வந்தோர் குறைகளெல்லாம்
தீர்க்கும் குரு-எந்த குரு?
கோடி பக்தர் நெஞ்சங்களில்
வாழும் குரு-
சாயி குரு.
ஷீரடி சாயி குரு!
ஷீரடியின் நாயகனே, சாயப்பா!
நாடுவோர் நலம் காக்கும்
சாயப்பா அப்பா!
ஷீரடியின் நாயகனே, சாயப்பா!
"நம்பிக்கை, பொறுமை
கொள்வது இனிமை"
"நம்பிக்கை பொறுமை
கொள்வது இனிமை"
அப்பா உனது அற்புத மந்திரமே!
ஷீரடியின் நாயகனே சாய் அப்பா!
நாடுவோர் நலம் காக்கும்
சாயப்பா அப்பா!
ஷீரடியின் நாயகனே, சாயப்பா!
ஷீரடி ஊரினில்
துவாரகமாய்தனில்
பக்தர்கள் குறை தீர்க்கும்
சாயப்பா ....ஆஆஆ
ஷீரடி ஊரினில்
துவாரகமாய் தனில்
பக்தர்கள் குறை தீர்க்கும்
சாயப்பா ....ஆஆஆ
ஷீரடியின் நாயகனே, சாய் அப்பா!
நாடுவோர் நலம் காக்கும்
சாயப்பா அப்பா!
ஷீரடியின் நாயகனே, சாய் அப்பா!
வேலை என்ன இருந்தாலும்
சாய் உன்னை நான் மறவேன்!
வேண்டுதல் நிறைவேற
வேண்டி தினம்
நான் தொழுவேன்!
நெஞ்சினில் சுமை தீர
நீயென்றும் துணையாக
என் மனக் கோயிலுள்
உன்னை வைத்தேன் சாயப்பா...ஆஆஆ
ஷீரடியின் நாயகனே!
சாயஅப்பா!
சத்திய வடிவினை
தத்துவக் கடலினை
மறவேன்!-
நான் மறவேன்!
அற்புதம்
செய்திடும் உன் பொற்கரம்
பணிந்திட வருவேன்-
நான் வருவேன்!
கருணையின்
திரு உருவே!
கடவுளின்
மறு வடிவே!
ஞாலமெல்லாம் பரவும் புகழ்
அது உனது அருள்.
காலமெல்லாம் எனது மனம்
உன் வசமே!
அருட் கடலே! திருவருளே !
அடியவரின் அருமருந்தே!
கருப் பொருளே!கலி இறையே!
கருணைமிகும் குணநிதியே!
நிலமது,நீரது,
கடலது, காற்றது
சகலமும் உனதொரு குரலுக்கு பணியுது.
அருள்வாய் குருவே சாயப்பா.....ஆஆஆ
ஷீரடியின் நாயகனே, சாய் அப்பா!
நாடுவோர் நலம் காக்கும் சாய் அப்பா....அப்பா...
ஷீரடியின் நாயகனே, சாய் அப்பா!
கோ.சிவகுமார்.
#saibabaaarathi #saibabasongs #stavanamanjari #அற்புதங்கள் #சாய்பாபா #சாய்பாபாவின்அற்புதங்கள் #சாய்மந்திரம் #மந்திரம் #ஸ்தவனமஞ்சரி
Baba ente Appa ❤❤❤❤❤🙌🙏🙏🙏🙏🙏🌹🌿Om Prema moorthaye namaha 🕉️🙌🙏🙏🙏🙏🙏🌹🌿🌺🌷🏵️🌻🌞
கோடி பக்தர்களின் நெஞ்சங்களில் வாழும் எந்தன் குரு ...பாடலின் வரிகள்.. இசை .. பாடும் குரல்... அனைத்தும் மனதிற்கு இதமானத் தென்றல்...❤❤❤❤
❤Tysm
Om sai ram appa thiruvadi saranam 🙏
Om Sai Ram 🙇🏻♂️🙇🙏🙏
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
AUM Sri Sai Ram🕉️🕉️🕉️
ඕම් ශ්රී සායි රාම්❤️❤️❤️
ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா சரணம்🙏🏼🙏🏼🌷🌷❤️❤️🙏🏼🙏🏼
Om Sai Sairam,Thank you so much all, Blessed to be a part in this song ,super Deepak Krishna
🕉️Sairam ❤️🌹🙏🙇♀️
ஓம் சாய் ராம் 🎉🎉🎉 ஜெய் சாய் ராம் 🎉🎉🎉 ஜெய் ஜெய் சாய் ராம் 🎉🎉🎉❤❤❤
Om sai ram jei sai ram
Om Sai Ram 🙏
🙏🏻ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 🙏🏻🙏🏻
Om sai ram
ஓம் சாய் ராம் 🌹🌹🌹🌺🌺🙏
ஓம் சாயி ராம் 🙏
Om Sai appa thanks 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️💛💙🙏💛🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Thank you Sai Ram ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️