திருவரங்க வாஸியான ஸ்ரீ உ வே பரதன் ஸ்வாமியின் வாயிலாக மூன்றாம் திருவந்தாதி பாசுரங்கள் 38, 39, 40 ஆவது பாசுர வியாக்கியைகளை அநுபவித்தோம். தானே தனக்கு உவமன் பாசுரத்துக்கு, ஒப்பார் மிக்கார் இலையாய மாமாயா என்றபடி ஒப்பிலியப்பனை மேற்கோள் காட்டினார் ஸ்வாமி. அவனுக்கு நிகர் அவனே! உலகிலுள்ள சகல பொருள்களும் அவனுக்கு சரீரமாய் அவன் அதற்கெல்லாம் சரீரியாய், ஆத்மாவாக இருக்கிறான். அடுத்த பாசுரத்தில், அருவிகள் நிறைந்தும் சந்திரமண்டலத்தளவு ஓங்கியுமுள்ள திருவேங்கடமலையில் உள்ள வேங்கடத்தான், அங்கிருந்து வந்து ஆழ்வார் இதயத்தில் வந்து சேர்ந்தான். வேதம் என்பது நம்புபவர்களுக்கு தன்னைக் காட்டிக்கொடுக்கும், நம்பாதவர்களுக்கு மறைந்திருக்கும், என்றபடி மறையாய் மறைப்பொருளாய் விளங்குகிறான், என்று விளக்குகிறார் ஸ்வாமி. 40 ஆவது பாசுர வியாக்கியையில் ஸ்வாமி கூறுகிறார், எம்பெருமான் நம் உள்ளத்தில் தங்க, பாங்கான, நேர்த்தியான உள்ளம் தேவை. தேங்கோத வண்ணன் பாங்காகத் தங்கிட பரம பாங்கான உள்ளம் தேவை; எப்படிப்பட்ட எம்பெருமான்? என்றால், உத்தமனாகிய எம்பெருமான் - பிறருக்கு சந்தோஷத்தை அளித்து அதில் சந்தோஷம் கொள்ளும் உத்தமன் - புருஷோத்தமன் - தனது திருவடியின் ஒரு பாகத்திலே உலகம் ஒடுங்கும்படி அளந்த திரிவிக்கிரமன், விரும்பி உள்ளுவார் நெஞ்சில் விரும்பிப் புகுந்த பின் நமக்கேது குறை! நெஞ்சே நீயும் அவனுடைய இருப்பைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள், என்கிறார். ஸ்வாமியின் விளக்கத்துக்குப் பிறகே தெளிந்தது - "அளந்தமன்" என்பது அளந்த மன்னன் என்று! அற்புதமாக 38, 39, 40 பாசுரங்களின் ஆழ்ந்த பொருளை இனிமையாய் ஈந்த ஸ்ரீ பரதன் ஸ்வாமிக்கு க்ருதக்ஞதைகள் 🙏🌷🌷🙏
Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
திருவரங்க வாஸியான ஸ்ரீ உ வே பரதன் ஸ்வாமியின் வாயிலாக மூன்றாம் திருவந்தாதி பாசுரங்கள் 38, 39, 40 ஆவது பாசுர வியாக்கியைகளை அநுபவித்தோம். தானே தனக்கு உவமன் பாசுரத்துக்கு, ஒப்பார் மிக்கார் இலையாய மாமாயா என்றபடி ஒப்பிலியப்பனை மேற்கோள் காட்டினார் ஸ்வாமி. அவனுக்கு நிகர் அவனே! உலகிலுள்ள சகல பொருள்களும் அவனுக்கு சரீரமாய் அவன் அதற்கெல்லாம் சரீரியாய், ஆத்மாவாக இருக்கிறான். அடுத்த பாசுரத்தில், அருவிகள் நிறைந்தும் சந்திரமண்டலத்தளவு ஓங்கியுமுள்ள திருவேங்கடமலையில் உள்ள வேங்கடத்தான், அங்கிருந்து வந்து ஆழ்வார் இதயத்தில் வந்து சேர்ந்தான். வேதம் என்பது நம்புபவர்களுக்கு தன்னைக் காட்டிக்கொடுக்கும், நம்பாதவர்களுக்கு மறைந்திருக்கும், என்றபடி மறையாய் மறைப்பொருளாய் விளங்குகிறான், என்று விளக்குகிறார் ஸ்வாமி. 40 ஆவது பாசுர வியாக்கியையில் ஸ்வாமி கூறுகிறார், எம்பெருமான் நம் உள்ளத்தில் தங்க, பாங்கான, நேர்த்தியான உள்ளம் தேவை. தேங்கோத வண்ணன் பாங்காகத் தங்கிட பரம பாங்கான உள்ளம் தேவை; எப்படிப்பட்ட எம்பெருமான்? என்றால், உத்தமனாகிய எம்பெருமான் - பிறருக்கு சந்தோஷத்தை அளித்து அதில் சந்தோஷம் கொள்ளும் உத்தமன் - புருஷோத்தமன் - தனது திருவடியின் ஒரு பாகத்திலே உலகம் ஒடுங்கும்படி அளந்த திரிவிக்கிரமன், விரும்பி உள்ளுவார் நெஞ்சில் விரும்பிப் புகுந்த பின் நமக்கேது குறை! நெஞ்சே நீயும் அவனுடைய இருப்பைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள், என்கிறார். ஸ்வாமியின் விளக்கத்துக்குப் பிறகே தெளிந்தது - "அளந்தமன்" என்பது அளந்த மன்னன் என்று!
அற்புதமாக 38, 39, 40 பாசுரங்களின் ஆழ்ந்த பொருளை இனிமையாய் ஈந்த ஸ்ரீ பரதன் ஸ்வாமிக்கு க்ருதக்ஞதைகள்
🙏🌷🌷🙏
தன்யோஸ்மிஸ்வாமிந்
Srimathe ramanujaya namaha. Adiyen dasan swamin