திருக்குறள் | அதிகாரம் 9 | விருந்தோம்பல் | குறள் 84 | Thirukkural In Tamil | Thirukkural
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
- அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each with aphoristic teachings on virtue (aram, dharma), wealth (porul, artha) and love (inbam, kama).Considered one of the greatest works on ethics and morality, it is known for its universality and secular nature.Its authorship is traditionally attributed to Valluvar, also known in full as Thiruvalluvar. The text has been dated variously from 300 BCE to 5th century CE. The traditional accounts describe it as the last work of the third Sangam, but linguistic analysis suggests a later date of 450 to 500 CE and that it was composed after the Sangam period.
This thikkural in tamil is mostly teached for kids to learn the values and principles of life from their small age to life a good life. It is incorporated in there school education as thirukkural is considered to be the most important element for life.
Thirukkural in tamil is written by Thiruvalluvar.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது, புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவரான திருவள்ளுவர், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.திருக்குறள், சங்க இலக்கிய வகைப்பாட்டில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள், தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும்; அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும்; பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு.