Thalaattu | Naatpadu Theral - 08 | Vairamuthu |NR Raghunanthan | Susheela, Chithra, Harini | Sarann

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @revathimuthukumar4448
    @revathimuthukumar4448 3 ปีที่แล้ว +1373

    எச்சிப் பால் தீர்ந்ததாடா இருந்தவரை ஊட்டி விட்டேன் ...மிச்சப் பால் ஊரும் வரை மின்மினியே கண்ணுறங்கு ❤️ மிண்மினியே கண்ணுறங்கு...மனதை தொட்ட வரிகள்🥺

  • @shifanisulaiman7775
    @shifanisulaiman7775 3 ปีที่แล้ว +12

    ஈர்மூ நிமிடத்துள்...
    இதயம்.....
    இன்பத்தால் சிறகடித்துப் பறந்து....
    இடையில்,
    இன்னலால் இறுக்கிப் பிழிந்து…
    இத்தோடு...
    இமைகள் இரண்டையும் நனைத்து..
    இறுதியில்....
    இப்படி ஒரு திறமையா என
    இயங்கும் இதயத்தை நிறுத்தும் வலிமை உனக்கு மட்டுமே சொந்தம்.
    வாழ்க என் வைரமுத்து!!

  • @KashifKashif-zh7nh
    @KashifKashif-zh7nh 3 ปีที่แล้ว +108

    பாடலின் ஆரம்ப காட்சிகளில் ஆனந்த புன்னகை பூத்த என் இதழ்கள்...
    பாடலின் இறுதியில் என் கண்கள் கலங்கின ஏதோ ஒரு வலியால்....

  • @balajieditzz
    @balajieditzz 3 ปีที่แล้ว +101

    கெட்டி பால் தீர்ந்ததடா.. இருந்த வரை ஊட்டி விட்டேன்.. மிச்ச பால் சுரக்கும் வரை மின்மினியே கண்ணுறங்கு... கணத்த வரிகள்.. 💞💞💞💞💞

    • @periyasamyi7607
      @periyasamyi7607 10 หลายเดือนก่อน +1

      Tapu,😡🤬🤮👎👎

  • @priyasakthivel9126
    @priyasakthivel9126 3 ปีที่แล้ว +6

    3 தலைமுறை 3 வித குடும்ப சூல்நிலைகள்...... இருந்தும் தாய் அன்பில் மாற்றம் இல்லை, அது எப்போதும் பரிசுத்தமானது பரிபூரணமானது... அதேபோல் தான் ஐயாவுக்கும் தமிழுக்குமான உறவு என்பதை எடுத்துரைக்கும் படைப்பு இந்த பாடல்👍🏻🙏🏻 நன்றி ஐயா... கூட்டு குடும்பத்தின் ஏக்கத்தை மனதில் எட்டி பாரக்க வைத்தது முதல் பாதி....

  • @ELSIGA
    @ELSIGA 3 ปีที่แล้ว +7

    தாய் பாடும் தாலாட்டுக்கு ஈடு இணை உலகில் வெறேதும் இல்லை....நன்றி கவிப்பேரரசு அவர்களே

  • @sundarimurugan5248
    @sundarimurugan5248 3 ปีที่แล้ว +3

    நம் குடும்பச் சூழ்நிலைகளையும், சொந்த பந்தங்களின் விருப்பு வெறுப்புக்களையும், இலைமறை காய் போல தாலாட்டு மூலம் பாவிக்கும் திறமை நம் தாய்க்கு மட்டுமே உரித்தான ஒன்று.
    காலங்கள் மாறினாலும், காலத்திற்கேற்ப குடும்பங்கள் சிதறினாலும், என்றுமே மாறாத ஒன்று நம் தாயின் தாலாட்டு மட்டுமே..
    ஆராரோ ஆரிரோ
    ஆணழகே ஆரிரோ!!!
    மூன்று தலைமுறைக்கான தாலாட்டாய் இப்பாடலை மெருகேற்றிய கவிஞரின் சிந்தனைக்கு நன்றிகள் கோடி..
    ஞானசுந்தரி- குயின்மீரா சர்வதேச பள்ளி, மதுரை.

  • @chandrasekaranmahadevan5471
    @chandrasekaranmahadevan5471 3 ปีที่แล้ว +3

    இத்தனை சிறந்த கவிஞர் தடம்மாறிப்போனதாய் குற்றச்சாட்டுக்காளானது வேதனையளிக்கிறது. நடைபிறழாத கவிதைபோல் வாழ்விலும் பிறழாதிருத்தலே ஆண்மைக்கழகு

  • @annalakshmiudaiyan3262
    @annalakshmiudaiyan3262 2 ปีที่แล้ว +55

    இப்பாடலின் வரிகளும் இப்பாடலை பாடிய குரலும் இனிக்குது....இப்பாடலை தினமும் கேட்டுதான் என் மகன் தூங்குகிறார்...

  • @manoharanps4824
    @manoharanps4824 3 ปีที่แล้ว +4

    தாலாட்டு பாடிய
    தாய் தெய்வமாய்
    பல ஆண்டுகள் ஆகிய பின்னும்
    என் நினைவிலும்..
    எப்பதிவிலும்..
    கிடைக்காத...
    அத் தாலாட்டு...
    கவிஞரின்
    முத்தலைமுறைத்
    தாலாட்டு ப்பாடல்களில்
    முதல் தலைமுறைப்பாடல்
    என்னுடையதாய்..
    என் தாய் பாடியதாய்...
    நெஞ்சில் நிறைகிறது......
    ஏழு தலைமுறைப் பாடல்களை
    ஏற்றத்தமிழில்...
    எடுத்துச் சொல்ல..
    என் மனம்
    விண்ணப்பம்
    விடுக்கிறது..
    கவிப்பேரரசு க்கு..
    🙏🏿🙏🏿🙏🏿
    கிட்டாத..
    என் தாய் யின்
    தாலாட்டு...

  • @VanithaRani-z6r
    @VanithaRani-z6r 3 หลายเดือนก่อน +11

    தாய்மாமான் பொழப்புக்கு தாராவி போய்ட்டாங்க சித்தப்பா எல்லாரு சீமையில் இருக்காங்க உன்போல செல்வந்தன் உலகத்தில் கண்டதில்லை என்போல ஏழை நீ எங்காச்சு கண்டதுண்டா,எங்க குடும்பத்தின் கதை , பாட்டு கேட்டவுடன் கண்கள் அருவி ஆனது 😭😭😭😭😭

  • @Kalamindia
    @Kalamindia 3 ปีที่แล้ว +62

    பாசத்திற்கு
    ஒரு தாலாட்டு
    ஏக்கத்திற்கு
    ஒரு தாலாட்டு
    எதிர்பார்ப்பிற்கு
    ஒரு தாலாட்டென
    மூன்று தலைமுறைகளையும் ஒன்றாக்கி தாலாட்டுகிறது இந்தப் பாட்டு..
    இந்தத் தாலாட்டை கேட்டால் குழந்தைகளோடு சேர்த்து பெரிய குழந்தைகள் கூட தூங்கிவிடுவார்கள் ...✍️
    வாழ்த்துகள் பாடல் குழு 💐💐 & வைரமுத்து ஐயா ❤️❤️❤️
    இயற்கைக்காதலி ரஞ்சினி

  • @வெங்கடேசன்கே
    @வெங்கடேசன்கே 3 ปีที่แล้ว +2

    மூன்று தலைமுறையின் காலங்களை மட்டுமல்ல
    நான்காம் தலைமுறையின் காலத்தையும்
    லண்டன் திருமகளோ
    லாஸ் ஏஞ்சலஸ் மருமகளோ
    பத்திரிகை கொடு மகனே
    படம் பிடித்துவிட்டது.
    வலி மிகுவரிகள் அய்யா

  • @elaiyarajaelaiyaraja9201
    @elaiyarajaelaiyaraja9201 10 หลายเดือนก่อน +103

    நான் கர்பமாக இருக்கும் போது அதிகம் கேட்ட பாடல் இது குழந்தை பிறந்த பிறகு என் மகன் இந்த பாடல் கேட்ட உடனே தூங்கிடுறா நன்றி வைரமுத்து ஐயா

    • @keerthibala5670
      @keerthibala5670 10 หลายเดือนก่อน +2

      Yes

    • @mohansaran8696
      @mohansaran8696 10 หลายเดือนก่อน +7

      Same too you sister...iam 9month pregnant

    • @AriDhash
      @AriDhash 10 หลายเดือนก่อน +6

      Same🙌

    • @chelladevidevi8110
      @chelladevidevi8110 9 หลายเดือนก่อน +1

      Ithe than ennakum

    • @tharshini809
      @tharshini809 8 หลายเดือนก่อน

      .tty

  • @selvamari9066
    @selvamari9066 2 ปีที่แล้ว +7

    நான் சிறு வயதில் கேட்டு ரசித்த பாடல் அனைத்தும் வைரமுத்துவின் வரிகள் என இப்போது தான் தெரிந்து கொண்டேன்...
    எப்படியேனும் ஒரு முறையாவது அவரை காண வேண்டும்...😔

  • @greencladsRathinam
    @greencladsRathinam 3 ปีที่แล้ว +84

    என்னைக்கு பணம் னு ஒன்னு கண்டுபிடிச்சானுங்களோ அன்றைக்கே நம் உறவுகளை இழந்திட்டோம்... தாய் மண் ல தமிழ்பேசி உறவுகளோடு வாழ்றது சொர்க்கம் ❤

    • @chezhi12
      @chezhi12 3 ปีที่แล้ว +2

      எதையாவது பொழம்ப கூடாது

    • @sivaomr3695
      @sivaomr3695 3 ปีที่แล้ว +6

      @@chezhi12 மடபயலே

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 3 ปีที่แล้ว +3

      ஆமாம் 😟

    • @kumarivijayan-lyricst1981
      @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mZScHEXYdFQ/w-d-xo.html கொரோனா காலத் தாலாட்டு please support my channel

    • @kumarivijayan-lyricst1981
      @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mZScHEXYdFQ/w-d-xo.html கொரோனா காலத் தாலாட்டு please support my channel

  • @tamilankathir8424
    @tamilankathir8424 3 ปีที่แล้ว +87

    கவிஞரின் இந்த வரிகள்"ஒற்றையாய் பிறந்தவனே உனக்கு யாரும் துணை இல்லையே" வருங்கால தலைமுறையின் உண்மைநிலை

    • @sasitharyeesan2548
      @sasitharyeesan2548 3 ปีที่แล้ว +1

      Even now in Canada,top politicians, profesionales from other communities have minimum 3 children, our people perceive everything differently.

    • @abishekk2355
      @abishekk2355 3 ปีที่แล้ว +1

      Very nice song

    • @kumarivijayan-lyricst1981
      @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mZScHEXYdFQ/w-d-xo.html கொரோனா காலத் தாலாட்டு please support my channel

  • @harish7768
    @harish7768 3 ปีที่แล้ว +115

    எவ்வளவு வளர்ச்சிபாதைய நோக்கி சென்றாலும் ... அம்மாவின் அன்பு இனிது...

    • @LEMON-ze6ox
      @LEMON-ze6ox 3 ปีที่แล้ว

      Aduvum 3 rd gen anbu pramadham.....

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/1LEEVsHkfxI/w-d-xo.html🥰😍😍💕💚

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/1LEEVsHkfxI/w-d-xo.html🥰😍😍💕💚

  • @ரா.மாரியப்பன்
    @ரா.மாரியப்பன் 3 ปีที่แล้ว +6

    நம் தாத்தா பாட்டி வாழ்ந்த வாழ்க்கை முறையையும் நம் அப்பா அம்மா வாழ்ந்த வாழ்க்கை முறையையும் நாம் வாழ்கிற வாழ போகிற வாழ்க்கை முறையையும் ஆறு நிமிட பாடலில் ஐயா கொடுத்துவிட்டார்❤️❤️❤️❤️❤️

  • @yukthamugi_9976
    @yukthamugi_9976 3 ปีที่แล้ว +191

    முக்கால பெண்களின் வாழ்க்கை முறையை ஒரு தாலாட்டு பாட்டில் உணர்த்தி,மறந்த தாலாட்டு பாடலை மக்களுக்கு நினைவூட்டிய தங்களுக்கு நன்றி,வாழ்க தமிழ்.

  • @thilakskarish8133
    @thilakskarish8133 3 ปีที่แล้ว +2

    நாட்படு தேறல் இன்னமும் ஊறும்!
    தமிழனின் சொத்து இந்த
    வைகை பெற்ற முத்து!
    சிந்தனை சிற்பி
    எத்தனை நாளாச்சு இப்படி
    ஒரு பாடல் என் செவிதனில் விழுந்து!!!

  • @mithranmithran5830
    @mithranmithran5830 3 ปีที่แล้ว +102

    கடைசி வரி மிக ஆழமானது பத்திரிக்கை கொடு மகனே அழுகை வந்தது ரித்விகா நடிப்பு மிக அருமை

  • @parrotenglish783
    @parrotenglish783 3 ปีที่แล้ว +12

    மூன்று தலைமுறைகள் பற்றி கூறுகிறது. 1960,1980,2010 கால கட்டத்தில் இருக்கிற செயல்பாடுகள் பற்றி விளக்கமாக உள்ளது. I am proud of this song revealed for our traditional.

  • @balaramalingam3899
    @balaramalingam3899 3 ปีที่แล้ว +4

    மூன்று தலைமுறையின் வாழ்வியல்
    முறைகளையும்,
    மூன்று தலைமுறையின்
    தாலாட்டு பாடல்களையும்,
    மூன்று தலைமுறையின் மிகச்சிறந்த பாடகிகளையும் கொண்டு தங்களின் "வைர வரிகளால்" எங்களின் வாழ்வியல் அர்த்தங்களை புரிந்து அறிந்து கொள்ளவும் படக்காட்சிகளால் தெரிந்து கொள்ளவும்,
    எச்சிப்பால் தீந்ததடா
    இருந்தவரை ஊட்டிவிட்டேன்
    மிச்சப்பால் ஊறும்வரை
    மின்மினியே கண்ணுறங்கு என்ற வரிகள் மூலம் தாய்மார்களின் தன்னிலை விளக்கத்தை கூறியது அருமை.

  • @kalpanakarthiksomasekar1998
    @kalpanakarthiksomasekar1998 3 ปีที่แล้ว +2

    அந்தக்காலத்தில் அன்புக்கு பஞ்சமில்லை. இந்தக்காலத்தில் பணத்துக்கு பஞ்சமில்லை.
    தாய்மையின் குழந்தை பற்று என்றும் மாறாதது என்று அழகாக கூட்டுக்குடும்பதிலிருந்து, தனித்த குடும்பத்திலிருந்து, தானாக வளரும் குழந்தை வரை மூன்று நிமிட, ஒரே ஒரு பாடலில் கவிங்கரால் தான் சித்தரிக்க முடியும்! முக்குரலின் சங்கமம் அருமை! இத்தொகுப்பின் கதாநாயகனுக்கு மீண்டும் மீண்டும் எங்களது நன்றிகள்!

  • @kanis2116
    @kanis2116 3 ปีที่แล้ว +210

    இப்படி ஒருதாலாட்டு இதுவரை கேட்ட தில்லை. அர்த்தமுள்ளவரிகள்.
    கூட்டுக்குடும்பம் ஒருவரம். இன்றைய தலைமுறைக்கு பாசத்தைப் பாடல்களில் ஊட்டும் வைரமுத்துவுக்கு என்சல்யூட்

    • @kumarivijayan-lyricst1981
      @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mZScHEXYdFQ/w-d-xo.html கொரோனா காலத் தாலாட்டு please support my channel

    • @ThiripurasundariRamesh
      @ThiripurasundariRamesh 6 หลายเดือนก่อน

      இப்படி ஒரு கூட்டு குடும்பத்தில் தான் என் பிள்ளைகள் வளர்ந்தார்கள் ஆனால் இப்போது தனி மரமாக இருக்கிறது எங்கள் குடும்பம் சித்தப்பாக்கள் இருவர் தாத்தா எல்லாம் வெளியூர் சென்றிருந்தால் சென்று பார்த்து வரலாம் ஆனால் வேறு உலகத்துக்கே சென்றவர்களை எங்கு சென்று பார்ப்பார்கள் என் பிள்ளைகள்

    • @sarans8305
      @sarans8305 3 หลายเดือนก่อน

      Really sad bro

  • @praveenarajan4805
    @praveenarajan4805 3 ปีที่แล้ว +1

    பெண் என்பவள் தனது வீட்டைப் பேணிக் காப்பதோடு மட்டுமின்றி அலுவலகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள்.இன்றைய காலகட்டத்தில் தவறான கண்ணோட்டத்தில் (சில நபர்களால்) பார்க்கக்கூடிய சமுதாயத்தில் மிகவும் மரியாதைக்குரிய நபராக பெண்களை காட்டியுள்ளமை மிகவும் சிறப்பு. எத்தனை மாற்றங்கள் வந்தாலென்ன தாயன்பில் மாற்றமில்லையே. உறவுகளின் உன்னதத்தை உயிர்பபோடு விளக்கி உள்ளார் .

  • @mymusic1279
    @mymusic1279 3 ปีที่แล้ว +24

    இந்த மாதிரி தருணங்களை வந்து இந்த காலத்தில் பார்க்க முடியவில்லை உண்மையில் அந்தக் காலத்து குழந்தைகளும் இளைஞர்களும் நிறைய அதிர்ஷ்டம் செய்தவர்கள் இந்த மாதிரியான தருணங்களை அனுபவித்தவர்கள்

  • @gopikadineshgopikadinesh5828
    @gopikadineshgopikadinesh5828 2 ปีที่แล้ว +2

    இப்பாடலின் வரிகள் அனைத்தும் மனதை உருக்கி விட்டது.... அருமையான பாடல் வரிகள் ❤💙 இன்று பலகுழந்தைகளின் நிலை இது தான்..... முடிந்த வரை குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்......... அவர்கள் நமக்கு எல்லாம் ஓர் பொக்கிஷம் 🤱🤱🤱🤱🤱

  • @nikhilbharadwaj6912
    @nikhilbharadwaj6912 3 ปีที่แล้ว +6

    எத்தனை அழகு இந்த பாடல். ஆஹா!! செவிகளில் தென் பாய்ந்ததை நான் உணர்ந்தேன்!! ஆயிரம் விமர்சனம் வைத்தாலும், ஆயிரம் முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் , அத்தனையும் உடைத்து பொடும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழ். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் வரிகள் பாட படும். தமிழ் தாய் பெற்றெடுத்த கருப்பு வைரம், தமிழர்களின் அழிக்க முடியாத பொக்கிஷம் எங்கள் கவிப்பேரரசு வைரமுத்து!!😍

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 4 หลายเดือนก่อน +1

    பெற்றதாய் தகப்பனுக்கு பத்திரிக்கை கொடு.மகனே என்ற வரியும் எச்சப் பால் இருந்தவரை ஊட்டி விட்டேன் மிச்சப் பால் ஊறும் வரை மின்மினியே கண் உறங்கு என்ற வரியும் மிகவும் ஆழ்மனதை தொடுகிறது நானும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் தான் இந்த வரியைக் கேட்கும் போது மிகவும் பிடித்த வரிகள்

  • @indirajithindirajith2004
    @indirajithindirajith2004 3 ปีที่แล้ว +36

    மிகவும் அருமையாக வரிகள் ஐயா .மூன்று தலைமுறை தாலாட்டு பாடல்களை எங்கள் கண்டு முன் கொண்டு வந்ததற்கு நன்றிகள் ஐயா .இதை போன்று இன்னும் நிறைய பாடல்களை நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம் ஐயா.

    • @kumarivijayan-lyricst1981
      @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mZScHEXYdFQ/w-d-xo.html கொரோனா காலத் தாலாட்டு please support my channel

  • @revathirengarajan2012
    @revathirengarajan2012 3 ปีที่แล้ว +5

    மன்னர் காலத் தாலாட்டுப் பாணியில துவங்கிய பாட்டு எங்கு நவீன காலம் தொட்டு முடிந்தது என்ற வியப்பு விரிவடைவதற்குள் கூட்டுக்குடும்பங்கள் குடை சாயும் வேதனையில் உள்ளம் சரிகிறது.ஊமையான ஒரு வலியை உள்ளமெங்கும் ஏற்படுத்தும் பாடல்.வாழ்க உங்கள் நல் உள்ளத்து உணர்வுகள்

  • @TodayHealth_information
    @TodayHealth_information 3 ปีที่แล้ว +42

    உம் வார்த்தை அழகு இருக்கே! ஐயோ, சொல்லவா வேண்ணும், ஐயா நன்றி.

  • @thangarajp166
    @thangarajp166 5 หลายเดือนก่อน +4

    மூன்று தலைமுறை யையும ஒன்றாக ஒரே பாடலில் காட்டுவதற்கு வைரமுத்துபோன்ற கவிஞரால் மட்டுமே முடியும்
    ❤❤காலத்தால் அழியாத பாடல் ❤❤
    இதை கேட்கும் போது என் மனதின் கணம் தெரிகிறது ஏனெனில் எனக்கும் ஒரே மகன் தான் ❤❤

  • @lovechaneel3242
    @lovechaneel3242 3 ปีที่แล้ว +8

    நம்ம குழந்தாய இருக்கும் போது இந்தப் பாடல்கள் எவ்வளவு உணர்ச்சி அடி மனசு பொங்குகிறது

  • @PBAHARISHR
    @PBAHARISHR ปีที่แล้ว +35

    கண்ணீர் கசியாமல் கடக்க முடியாது இந்த பாடலை

  • @sushmoandhanapal
    @sushmoandhanapal 3 ปีที่แล้ว +4

    எதிர்பார்ப்புகளை நிச்சயம் ஏமாற்றிடவில்லை ஐயா.....
    அழகான வரிகளுக்கு அருமையான இசைச்சேர்ந்துள்ளது... அதற்கேற்ப பாடகர்கள் குரல் மகுடம் சேர்த்துள்ளது...

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 3 ปีที่แล้ว +1

    உம்மைப் போல் இனி ஒரு கவிஞனைப் பெற்றெடுக்க இந்த நாடு எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டுமோ!..

  • @vanithathangaraj9363
    @vanithathangaraj9363 3 ปีที่แล้ว +11

    இவ்வுலகில் தாயன்பிற்க்கு ஈடு ஒன்றுமில்லை காலத்தின் பரிணாமங்கள் மாறினாலும் ஒரு அழும் குழந்தைக்கு மருந்து தாலாட்டு தான் என்பதை உணர்த்தி விட்ட அழகான வரிகள்.இனிமையா குரல்வளத்தாளும்,இசையாளும், உணர்வுபூர்வமான வரிகளாலும் சங்கமிக்கும் பாடல்களுக்காக காத்திருக்கும் குழந்தைகளாக மாறிபோனோம்........நாட்படு தேறலுக்காக....

  • @bennywithangel6794
    @bennywithangel6794 3 ปีที่แล้ว +2

    enna songs enna padal varikal. .....realavey kannula irrunthu kannir varukirathu. ......koottu kudumpamah irrukkurathu evolo periya vishamnnu intha paattu sollukirathu. ....vairamuthu iyya kku kodanah kodi nanri

  • @dkarthick343
    @dkarthick343 3 ปีที่แล้ว +6

    மூன்று தலைமுறை தாலாட்டை, முத்தமிழில் கேட்கும்பொழுது, இதயத்தில் இன்பம் சேர்கிறது...
    நன்றி கவிஞரே...

  • @m.sudharsudhar7675
    @m.sudharsudhar7675 3 ปีที่แล้ว

    தமிழ் தாலாட்டு பாட்டு என்றால் இதுவே நம் திரு தாய்நாட்டின் குடும்ப ஒற்றுமையும் பாரம்பரியத்தையும் குறிப்பிட்டு திரு வைரமுத்து ஐயா அவர்கள் எழுதிய பாடலும் சுசீலாம்மா குரலும் கேட்க கேட்க இனிமையாகவும் மிக எழுச்சியாகவும் ஒரு கூட்டு குடும்பத்தை பற்றி தாலாட்டுப் பாடல்களில் அருமையாக எடுத்துரைத்து இருக்கிறார்கள் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @mashaainshaa973
    @mashaainshaa973 3 ปีที่แล้ว +9

    அசந்துவிட்டேன்👌👌அற்புதம்...ஆயிரம் அர்த்தமுள்ள பாட்டு ..காலத்தின் மாற்றம்

  • @gdurgadevi9396
    @gdurgadevi9396 3 ปีที่แล้ว +104

    Riythvika acting excellent..... பெத்த தாய் தகப்பனுக்கு பத்திரிக்கை கொடு மகனே வரிகளை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது

    • @UmaRani-cr5vp
      @UmaRani-cr5vp ปีที่แล้ว +1

      என்னுடைய வாழ்வில் இதுதான் நடந்தது

    • @UmaRani-cr5vp
      @UmaRani-cr5vp ปีที่แล้ว +1

      என்னுடைய மகன் எனக்கு பத்திரிக்கை அனுப்புனான்

    • @prabhakaran-ur8ei
      @prabhakaran-ur8ei ปีที่แล้ว

      ஏன் கன்னீர் வந்தது ப்ரோ

    • @paritha4850
      @paritha4850 4 หลายเดือนก่อน

      Love you AMMA ❤❤❤❤❤❤💕💕

  • @thivakaran76
    @thivakaran76 3 ปีที่แล้ว +18

    வாழ்வியலில் மாற்றத்தை ஒரு தாலாட்டு பாடலில் வைரம் என்றும் வைரம்தான். இதுவரை வந்த எட்டுமுத்தில் மதல்முத்து
    #

  • @pushpanandhini270
    @pushpanandhini270 3 ปีที่แล้ว +1

    பார்க்க பார்க்க பாடல் வரிகள் மெய்சிலிர்க்கவைகிறது.தாயின்கருவறையில்,குழந்தை பிறந்து ஒலிக்கும் முதல் ஒலி,ஆனந்தமோ ஆனந்தம்.

  • @siluvairanjith3779
    @siluvairanjith3779 3 ปีที่แล้ว +54

    என்றும் எங்கள் தமிழ் ஆசான்.... "கொல்வோர் கொல்க
    குரைப்போர் குரைக்க"
    உம் புகழ் என்றும் ஓங்கும்

  • @sudhasudharithik7379
    @sudhasudharithik7379 3 ปีที่แล้ว +29

    ஒரே பாட்டுல உலக நடப்பு மொத்தத்தையும் சொல்லிட்டாரு வைரமுத்து அய்யா 👌👌👌

  • @KalpanaKalpana-pb3yt
    @KalpanaKalpana-pb3yt 3 ปีที่แล้ว +225

    சுசீலா அம்மாவின் குரலை மீண்டும் கேட்பது எத்தனை சுகம் ஏக்கம் தீர்த்தத்திற்கு நன்றி🤗

    • @ArunArun-iv4ce
      @ArunArun-iv4ce 3 ปีที่แล้ว +3

      True

    • @tn-24mugilan83
      @tn-24mugilan83 3 ปีที่แล้ว +7

      ஆமாம் மிக சரியாக சொன்னிர்கள்

    • @maheshmalar8981
      @maheshmalar8981 3 ปีที่แล้ว +2

      Yes

    • @kumarivijayan-lyricst1981
      @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว +3

      th-cam.com/video/mZScHEXYdFQ/w-d-xo.html கொரோனா காலத் தாலாட்டு please support my channel

    • @lakshmi.k1432
      @lakshmi.k1432 3 ปีที่แล้ว +2

      Yes

  • @சி.கேசப்பிரியாஇளங்கலைமூன்றாம்ஆ

    கல்யாணம் ஆகாத பொண்ணுங்க கூட இந்தப்பாடலை கேட்டால் ஏதோ ஒரு தாய்மை உணர்வை கொடுக்கிறது

  • @revathivelu5100
    @revathivelu5100 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ஐயா என்ன ஒரு சிறு குறை தம் நாட்படு தேறல் பாடல்களில் பாலு ஐயாவின் குரல் ஒலிக்கவில்லை என்பது மட்டுமே

  • @premalatha7939
    @premalatha7939 3 ปีที่แล้ว +2

    உன்னை போல் செல்வந்தன் உலகத்திலே யாரும் இல்ல,😊 என்னை போல் ஏழையும் நீ எங்காச்சும் கண்டதுண்டா 😔😔

  • @Naruto_XUZUMAKI790
    @Naruto_XUZUMAKI790 3 ปีที่แล้ว +4

    தாலாட்டு கேட்டேன் அய்யா..
    மூன்று தலைமுறைத் தாலாட்டை ஒரே பாடலில் இணைத்தது புதிய சிந்தனை! நல்ல படைப்பாக்கம்!!
    சுசீலா,
    சித்ரா,
    ஹரிணி என
    மூன்று தலைமுறைப்
    பாடகிகளைத் தேர்வு செய்தது செய்நேர்த்தி!
    மூன்று தலைமுறைக் காட்சிகளையும் பாடலின் வழியே பதிவு செய்திருப்பது அற்புதம்! ஒரு திரைப்படம் போலவே வந்திருக்கிறது !!
    உறவுகளையும், குடும்பங்களையும் பற்றி நிறைய சொல்லலாம்.. அவை அனைத்தும் குறியீடுகளாக பாடலில் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது..
    மகிழ்ச்சி..
    இனிமையான தாலாட்டு!!
    கவிஞருக்கு நம் அன்பும், மகிழ்வும் ..👏👏 ❤️❤️

  • @kanis2116
    @kanis2116 3 ปีที่แล้ว +1

    வண்ண வண்ணக் கோமளமே இந்த நூற்றாண்டின் சிறந்ததாலாட்டு யாரும் எழுதாத அழகான தாலாட்டுபாடல்

  • @kamarajvadivel5506
    @kamarajvadivel5506 3 ปีที่แล้ว +5

    என்ன அருமையான குரல் வைரமுத்து கவிக்கு குரலும் முக்கியம் ரொம்ப அருமையான தாலாட்டு

  • @breedersworld6997
    @breedersworld6997 3 ปีที่แล้ว +11

    இந்த பாடலை பார்க்கும் பொழுது என்னுடைய அம்மாவின் நெஞ்சில் தூங்கிய ஞாபகம் வருகிறது..

  • @saranyar5554
    @saranyar5554 3 ปีที่แล้ว +26

    அருமையான பாடல் தாயின் வயிற்றில் கருதெரித்து மீண்டும் பிறந்தது போல ஒரு மயக்கம் இந்த பாடலில் இருக்கு...சித்ரா அம்மா குரல் இனிமை...i love chithramma...😙😙😙😙

  • @VIJAYAKUMAR-cd8er
    @VIJAYAKUMAR-cd8er 3 ปีที่แล้ว +2

    தாலாட்டுப் பாட்டு எந்த வயதினரையும் மயங்க வைக்கும் மருந்து... அருமை கவிஞரே ...
    விஜயகுமார், மலேசியா

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 2 ปีที่แล้ว +20

    எச்சிப்பால் தீந்ததடா…
    இருந்தவரை ஊட்டிவிட்டேன்…
    மிச்சப்பால் ஊறும்வரை…
    மின்மினியே கண்ணுறங்கு…
    மின்மினியே கண்ணுறங்கு this lyrics hit mehard😭🤩😍😻

  • @jancyrani878
    @jancyrani878 3 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் இதை ஒரு தடவ தான் கேட்டேன் அதுக்கு அப்புறம் இந்த பாடலை கேக்கம தூங்க வே மாட்டேன் ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ளத இருக்கு ஒரு கூட்டு குடும்பம் எவ்வளவு முக்கியமுனு இந்த பாடல் கேட்டு தெரிஞ்சுக்குங்க இந்த பாடலை கேக்கும் போது ஒரு தாய் உனர்வ்வு வருகிறது ❤️❤️❤️❤️❤️❤️

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว +5

    வைரமுத்து ஐயா
    சுசிலா அம்மா👏👏👏👏👏👏
    எல்லா காலம் பொருந்தும் பாடல் வரிகள்👏👏👏👏👏

  • @mathialagan8717
    @mathialagan8717 3 ปีที่แล้ว +2

    கருத்தும், உண்மையும் கலந்து கண்ணீரை வரவைக்கும் பாடலுக்கு நன்றி கவிப்பேரரசு அவர்களே.

  • @yogeshwaran51
    @yogeshwaran51 3 ปีที่แล้ว +4

    மீண்டும் கூட்டு குடும்பத்தை நோக்கி இந்த முதலாளித்துவ சமூகம் நம்மை மாற்றி அமைக்கும் இது தான் விதி

  • @sunderm813
    @sunderm813 3 ปีที่แล้ว +2

    புள்ளிமான் கோம்பையில புலிவந்து போகுதின்னு
    பொன்வேல் கை வாங்கிப்புலியெறிய வந்தவனே.
    எங்க ஊருபேர பாட்டுல கேக்குறதுக்கு அழகா இருக்கு எங்க ஊருக்கு இவ்ளோ பெருமையா

  • @kalaik6756
    @kalaik6756 3 ปีที่แล้ว +15

    பி.சுசீலாவின் குரலை நீண்ட நாட்களுக்கு பின் கேட்பது ஆனந்தம். பி.சுசீலாவின் குரல் இப்போதும் இனிமையோ இனிமை.

  • @periyarmurasu2852
    @periyarmurasu2852 2 ปีที่แล้ว +1

    நவீனத்தாலாட்டு நச்சென்று உள்ளது...!
    இதற்கு இச்சொன்று இடுகிறேன்...!

  • @inavihsnehru7821
    @inavihsnehru7821 3 ปีที่แล้ว +49

    ஆகச்சிறந்த வரிகள்...
    கூடு கலைந்தது.. மகிழ்ச்சி தொலைந்தது..
    அய்யா உங்கள் வரிகளோ வரிகள்👏👏

    • @packiarajp6710
      @packiarajp6710 3 ปีที่แล้ว

      அருமையான வரிகள்

  • @mrmrssubbu1434
    @mrmrssubbu1434 3 ปีที่แล้ว +2

    காலமாற்றத்தை காட்சிப்படுத்திய விதம் மிக அருமை
    வைரமுத்து ஐயாவின் வரிகளை சொல்லவா வேண்டும்
    பாடலைக் கேட்டவுடன் மனதில் மகிழ்ச்சி
    கண்களில் கண்ணீர்

  • @ammumalathi5197
    @ammumalathi5197 3 ปีที่แล้ว +18

    Feeling comfortable.. nice song tq susela Amma and chitra Amma And also tq vairamuthu sir

  • @raamilango2339
    @raamilango2339 3 ปีที่แล้ว +2

    petha thaai thagappanukku pathirikai kodu magane.... manasu valikkum vaarthaigal.... great vairamuthu sir......

  • @deivarayanm8472
    @deivarayanm8472 3 ปีที่แล้ว +3

    மூன்று தலைமுறை தாலாட்டு அற்புதம் ஐயா. முதல் தலைமுறையே மனதை கவர்கிறது. மீண்டும் கூட்டு குடும்பங்கள் வர வேண்டும்

  • @josephineannesheebhaarulda4301
    @josephineannesheebhaarulda4301 3 ปีที่แล้ว +2

    ஒரு குழந்தையின் வளர்ப்பு என்பது ஓரு கூட்டுக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியும் பொருப்பும் ஆகும். காலப்போக்கில் அந்த குழந்தைக்கு கிடைப்பது தனிமையே. பெத்த தாய் தகப்பனுக்குப் பத்திரிக்கை கொடுமகனே! என்ற வரி வலிக்கிறது.

  • @viveklaguparan9636
    @viveklaguparan9636 2 ปีที่แล้ว +5

    மிகவும் அழகிய வரிகள்..
    கூட்டுக்குடும்ப பாரம்பரியத்தை பறைசாற்றும் பாடல்

  • @directoracademics9114
    @directoracademics9114 3 ปีที่แล้ว +1

    தலைமுறைகளை தாண்டி ஒலிக்கும் இந்த தாலாட்டு. வாழ்வியல் மாற்றைங்களை நிமிடஙளில் நம் கண் முன் காட்டி நமக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிதுள்ளார் அய்யா. நமது வாழ்க்கை ஒரு இயந்திரமாக மாறாமல் நாம் விழித்துகொள்ள ஒரு வாய்ப்பு. கூட்டு குடும்பத்துக்குள் ஒட்டி கொள்ள மனம் விரும்புகிறது. செல் போனிற்குள் அன்னையின் தாலாட்டு ஒலிக்கயில் குழந்தையின் முகத்தில் மட்டும் வாட்டம் இல்லை நமது மனத்கிற்குள்ளும் தான். எத்தனை மாற்றைங்கள் வந்தாலும் மாறாதது அன்னயின் தாலட்டு மட்டுமே.

  • @Dhanyasworld
    @Dhanyasworld 3 ปีที่แล้ว +180

    ஏனோ இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது.......மிகவும் அருமையான பாடல் 🙂🙂🙂🙂🙂

    • @தமிழ்நேசன்-ப2ண
      @தமிழ்நேசன்-ப2ண 3 ปีที่แล้ว +1

      உண்மை சகோ.

    • @kanagavallis7169
      @kanagavallis7169 3 ปีที่แล้ว +2

      உண்மை எனக்கு எங்க தாத்தா விட்டுல இருந்த நாபகம் 😭😭

    • @Dhanyasworld
      @Dhanyasworld 3 ปีที่แล้ว +1

      Ungaluku virupam irunthal ennudaya channel kum support pannunga

    • @ramyapriya4099
      @ramyapriya4099 3 ปีที่แล้ว

      Yes

    • @rajalakshmiramesh5333
      @rajalakshmiramesh5333 3 ปีที่แล้ว +1

      Enakum than velaikaga namma kulandaikaluku kuduka vendiya pasam kuranchi podhu

  • @விஜிதாம்சன்
    @விஜிதாம்சன் 3 ปีที่แล้ว +2

    அழுது விட்டேன் இப்பாடாலை கேட்க நன்றி எழுதி பாடி இசையமைத்து வெளியிட்ட அனைவருக்கும்

  • @golden7247
    @golden7247 3 ปีที่แล้ว +4

    வலிகள் நிறைந்த வலிமையான வரிகளுடன், முக்கால தாய்மார்களின் பாட்டு இந்த தா லாட்டு...😪🙏🏻

  • @kubendranchokklingam431
    @kubendranchokklingam431 3 ปีที่แล้ว +6

    .
    60களில் பிறந்தவர்களை அழ வைத்த தாலாட்டு.
    குடும்பச் சிதைவில்
    நொருங்கிப்போன
    நெருங்கிய உறவுகளை
    நினைத்து ஏங்கும்
    முதியவர்களுக்கான தாலாட்டு இது.

    ““கருத்தேர்வு” மிகச் சிறப்பு.
    *கிராம வளர்ப்பு..
    நகர வாழ்வு...
    தனிக்குடித்தனம், ...
    ஒரே பிள்ளை...
    இருவருக்கும் வேலை,...
    வீட்டில் ஆயா…என அமைத்துகொண்டவர்கள்
    “தனக்கான வரிகள்” என ஒவ்வொருவரும் உரிமை கோரும்
    வாழ்வியல் பாடல்.
    பிடித்த வரிகள்
    இனம் பெருத்த வம்சத்தில்.. சனம் பெருத்த குடும்பத்தில் -எனக்கான வரி
    (நான் பத்துப்பேருடன் ஐந்தாவது ஆணாய் பிறந்தேன்..)
    ஐத்தமார் வருவாக-என்ற வரி- அட்டா..அதில் “ஐ” எழுத்துக்கு இருக்கிற அழுத்தமான அர்த்தத்தில் அமிழ்ந்துவிட்டேன்.
    கவிஞரே.. கள்ளிக்காடே உங்களை வணங்குது.
    கூட்டுக்குடும்பம் இப்போ கொட சாஞ்சு போனதடா. -இது மனம் வலிக்கும் இலக்கிய விளக்கம்
    மிச்சப்பால் ஊரும் வரை வரியில் -என் மார்பு கனத்தது
    வீடியோ பாத்தபடி.. ஆடியோ கேட்டபடி- இது அண்டை வீடுகளில் அன்றாடக்காட்சி
    வெளி நாட்டு பணம் வருவதால் நீ பணக்காரன்
    உறவுகளில்லாமல் தனியாக இருப்பதனால் நான் ஏழை என்ற பொருள் பட
    “ஓம்போல செல்வந்தன் ஒலகத்தில் கண்டதில்ல
    ஏம்போல ஏழைய நீ எங்கேனும் கண்ட்துண்டா? என்றவரி.- எளிதில் எவரும் புரிய முடியாதது புரிந்தால் அடுத்த வரிக்குப் போக முடியாது.
    நானே திகைத்து நின்றேன்.
    "பெத்த தாய் தகப்பனுக்கு பத்திரிக்கை கொடு மகனே"-வரிகள் வசீகரம்..
    காட்சி -மகனின் பாதத்தை தாய் தன் நெற்றியிலும் மார்பிலும் வைக்கும் போது “ பொசுக்” கென்று கண் நிறைந்தது
    பிடித்த காட்சிகள்
    முக்காலத்திற்கும் சரியான கலைபொருட்கள்- பாராட்டுக்கள்
    ரித்விகா - முகமொழி பொருத்தமானது
    குழந்தை -பாடல் வரிகளுக்குத் தகுந்த பல ரசங்கள். குறிப்பாக
    “ஒத்தையில பிறந்த மகனே
    ஓனக்காரும் துணையில்ல “ என்ற வரியில்.. ஏதோ பொருள் புரிந்தது போல் குழந்தை முகம் சோகமாகும் காட்சி - அபாரம்.
    அம்மா பாடுவதை செல் போனில் குழந்தை பார்ப்பது -புதுமையான காட்சியமைவு.
    சரண்- கவிஞரின் ரசிகர்களெல்லாம் உங்களுக்குச் “சரண்”
    “எட்டாவது பாடல்,வேறு யாருக்கும் எட்டாத பாடல்.”
    முனைவர் .சொ. குபேந்திரன்

  • @PARAVASAM82
    @PARAVASAM82 3 ปีที่แล้ว +3

    கடந்த மூன்று தலைமுறையாய் நம் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு தாய் பாடும் #தாலாட்டு.
    ஒவ்வொரு தலைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்சியாகவும் வரிகளாகவும் மிகவும் அழகாக காண்பிக்கப்பட்டுள்ளது 😍😍
    குறிப்பாக பி.சுசிலா, சித்ரா,ஹரிணி இவர்களின் குரலிலேயே ஒரு தலைமுறையை கண்முன்னே நிறுத்தியது மிகவும் அழகு 😍😍
    "இனம் பெருத்த வம்சத்தில் சனம் பெருத்த குடும்பத்தில் ஆறாம் திருமகனாய் ஆள வந்த சோழ மன்னா"❤️❤️❤️

  • @kanagakanaga3673
    @kanagakanaga3673 3 ปีที่แล้ว +2

    Ennudaiya thambigakalukku pillaigal pirandhal indha paadalai paada vendum .ennudaiya miga periya aasai niraivera kaathirukkiren .

  • @சண்முகம்சுக்குரு
    @சண்முகம்சுக்குரு 3 ปีที่แล้ว +17

    அருமையான ஒளிப்பதிவு ! கால மாற்றத்தை அழகாகக் காட்டியுள்ளார் .

  • @yogalakshmi.s4794
    @yogalakshmi.s4794 2 ปีที่แล้ว +1

    தாய்மை உணர்வை ஏற்படுத்திய திற்கு நன்றி வைரமுத்து அவர்களே 🙏
    வாழ்க தமிழ்! வாழ்க இவ்வையகம்✊🙏

  • @jeyabaljb1600
    @jeyabaljb1600 3 ปีที่แล้ว +13

    தலைமுறைகள் கடந்து நிற்கும் இந்த தாயுமானவர் எழுதிய தாலாட்டு ❤️💕💐

  • @rudramurugesan8885
    @rudramurugesan8885 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஐயா தாலாட்டு பாடல்.கூட்டுக் குடும்பம் பற்றியும் தனிக்குடும்பம் பற்றியும் சிறிய நிமிடங்களில் கூறி விட்டிர்கள் ஐயா. நன்றி நன்றி நன்றி

  • @ajithkumarkavidhai
    @ajithkumarkavidhai 3 ปีที่แล้ว +5

    வைரமுத்து அய்யாவின் வரிகள் என்னை ஆட்கொள்கிறது,
    அம்மையார்களின் குரல்கள் என்னை அடிமை செய்கிறது,
    ஆசை பிறக்கிறது தாயின் கருவறையில் படுத்துரங்கி மீண்டும் பிறந்து தாலாட்டு கேட்க ஆசை பிறக்கிறது,❤️

  • @srinivasan-rk1uf
    @srinivasan-rk1uf 2 ปีที่แล้ว +1

    லண்டம் திருமகளோ லாஸ்என்ஜல்ஸ் மருமகளோ பெற்ற தாய் தகபனுக்கு பத்திரிகை கொடு மகனே..... இதயத்தை கேள்வி கேட்கும் வரிகள்

  • @MrMrajakumaran
    @MrMrajakumaran 3 ปีที่แล้ว +26

    கூட்டுக் குடும்பத்தின் அருமையை, கிராமத்து வாழ்க்கையின் பெருமையை, தற்கால வாழ்க்கையின் நிலமையை... இதைவிட இப்படி அழகாகச் சொல்லிவிட முடியும்..? 60-70-80-90 -களில் பிறந்த நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் போலும்!

  • @saranya8009
    @saranya8009 3 ปีที่แล้ว +1

    சிலர் குடும்பத்தில் இன்றைய நிலை இப்படி தான் பாடல் விரி அருமை தாய்மை உனர்வு ஆதிகம் அன்பு மற்றும் இன்று அனதை

  • @ramakrishnanking
    @ramakrishnanking 3 ปีที่แล้ว +25

    Super mind blowing song with good message. Saluting legends Suseela amma , Vairamuthu sir , Chithra amma Harini mam and Ragunanthan Good Composition. Good Job.

  • @k.rajesh2697
    @k.rajesh2697 3 ปีที่แล้ว +2

    மனதை வருடும் தாலாட்டு இனிமை!! பாடல் வரிகள் அருமை!!வாழ்த்துக்கள் ஐயா! சுசிலா அம்மா குரலை மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி! ரித்விகா, பாடலுக்கு நல்ல தேர்வு. நன்று!

  • @BALASUBRAMANI-zb1or
    @BALASUBRAMANI-zb1or 3 ปีที่แล้ว +56

    முக்காலத்தாலாட்டையும் ஒத்தப் பாட்டில் கொண்டு வந்த உங்களின் பேனாவுக்கும் எங்களின் வாழ்த்துத் தாலாட்டு ❤️❤️❤️

  • @jeevithat-qu6om
    @jeevithat-qu6om ปีที่แล้ว +1

    என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல். தினமும் கேட்டு உறங்கும் பாடல் சிறந்த வரிகள் கண்ணீர் மல்க கேட்கும் பாடல்.

  • @தமிழ்நேசன்-ப2ண
    @தமிழ்நேசன்-ப2ண 3 ปีที่แล้ว +5

    பாடல் வரிகள் ஏதோ செய்கிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கையை இழந்துவிட்ட துக்கம் நெஞ்சை அடைக்கிறது. கண்களில் கண்ணீர் வழிகிறது.90களில் பிறந்த எங்களுக்கே இப்படி இருந்தால் 90களுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும்.உங்கள் அனுபவத்தையும் பகிருங்கள்.

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 3 ปีที่แล้ว +2

    தாலாட்டு அல்ல வாழ்வியல் ஏனோ மனம் வலிக்கிறது உறவுகளை தொலைத்துவிட்டு உதவாகறை சமுகமா மாறி விட்டோம் நினைவுகளோடு பயணிக்கும் வாழ்க்கை முறை.ஒழிக.

  • @vanakampa9222
    @vanakampa9222 3 ปีที่แล้ว +4

    மூன்று தலை முறையை அறிந்த வரால் தான் இப்படி எழுத முடியும். Vairamuthu Sir You are Great.
    ஆறாம் திருமகனாய் ஆளவந்த சோழ மன்னா இப்படிப்பட்டவரிகளை இந்த தமிழ் மன்னர் வைரமுத்து அவர்களை தவிர எழுத ஆள் இல்லை

  • @priyankapriyanka2153
    @priyankapriyanka2153 3 ปีที่แล้ว

    ஒத்தையில பிறந்தவனே உனக்கு யாரும் துணை இல்லை.............🌹🌹 வித்தையெல்லாம் கத்துகிட்டு வெளிநாடு போ மகனே..............💓💓💓😍🤩😍🤩 .................... கண்களை கலங்க வைத்த வரிகள்.........👈👈👈😭

  • @murugeshwari.m8665
    @murugeshwari.m8665 3 ปีที่แล้ว +33

    கவிஞர் அவர்களின் எட்டாம் பாடலான வண்ண வண்ண கோமளமே என்ற பாடல் வரிகள் மூன்று தலைமுறையினரையும் கண்முன்னே நிறுத்தி விட்டது. பாடலின் முதல் பாதியில் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் ,இரண்டாம் பாதியில் கால மாற்றம் மற்றும் பொருளாதார தேவையினால் உறவுகளை பிரிந்து இருப்பதையும், பாடலின் இறுதி வரிகளில் உறவுகளின் முக்கியத்துவத்தினை அனைவரும் உணரும் விதமாக அமைந்த காட்சிகள் அருமை.தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமா அத்தை, பேரக்குழந்தைகள் என்ற கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறையானது மிகவும் இன்பமானது. உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்த பாடல் வரிகளும் பி.சுசீலா அம்மா, சித்ரா அம்மா, ஹரிணி அவர்களுடைய குரல் இனிமையும் பாடல் வரிகளுக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளது.

    • @mthirumalaimthirumalai5716
      @mthirumalaimthirumalai5716 3 ปีที่แล้ว

      நான் தர இருந்த கருத்து பகுதியை தாங்கள் தமிழ் வழியில், சிறு திருத்தம் இன்றி கூறியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் முருகேஸ்வரி அம்மா.

    • @kumarivijayan-lyricst1981
      @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mZScHEXYdFQ/w-d-xo.html கொரோனா காலத் தாலாட்டு please support my channel

  • @Meettudvzz
    @Meettudvzz 3 ปีที่แล้ว +1

    First kamikkira kootukudumba visual um audio um ennamo feel aakuth 😔etheyellamo nama miss panra 🥲 thirumbi varave matta antha kalam.. pullarikkuth intha song😍 hats off

  • @kidsfamily1688
    @kidsfamily1688 3 ปีที่แล้ว +1

    என் மானசீக குரு கவிஞர் அய்யா அவர்களின் எழுத்தை எந்தன் ஏழு தலைமுறை தலையில் ஏந்தி சுமக்கும்.