திப்பு சுல்தான் காலத்தில் இருந்தே பெயர் பெற்ற அந்தியூர் குதிரை சந்தை | Anthiyur Horse fair

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Gurunathaswamy Festival | cattle fair | Anthiyur Gurunathaswamy Temple Festival 2018 | India's Biggest #Horse and #Cattle Market
    #Anthiyur
    The Annual five day festival of Arulmigu Gurunatha swamy Temple at Anthiyur,Tamilnadu,2018
    is not visited by just devotees but also thousands of cattle are brought to.
    Anthiyur horse market was the very old and famous market which held ever year near erode.Asias largest cattle fair & market.This is one of the traditional and old cattle fair and shandhai in asia.
    ஈரோடு மாவட்டம் அந்தியூர்குருநாதசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் புகழ் பெற்ற கால்நடைச் சந்தை நடைபெறுவது உண்டு. கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் இந்தச் சந்தை ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தொடர்ந்து நடத்தப்படும். இந்தத் திருவிழாவில் அந்தியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாது கர்நாடகம், கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் கால்நடை வளர்ப்போர்கள் வந்து கலந்துகொள்கிறார்கள்.
    திப்பு சுல்தான் காலத்தில் இருந்தே அந்தியூர், குதிரை சந்தைக்கு பெயர் பெற்ற ஊராகும். நம் நாட்டில் மன்னர்கள் ஆட்சி செய்த போது அவர்களுக்கு போக்குவரத்திற்கு பெரிதும் உதவக்கூடிய ஒன்று குதிரைகள். அன்றைய காலத்திலிருந்து குதிரைகளை வாங்கவும் விற்கவும் ஒரு முக்கியமான வணிக இடமாக அந்தியூர் திகழ்ந்தது என்பது பெருமைக்குறிய விசயமாகும்.
    இங்கு குதிரைகள் மற்றுமின்றி காளைகள், மாடுகள், ஆடுகள்,
    நாய்களும் என அனைத்து வகையான கால்நடைகளும் வணிகம் செய்யப்படுகின்றது. இந்த சந்தையில் குதிரைக்கு அடுத்த படியாக நம்மாநிலத்தில் பெயர் பெற்ற காங்கேயம் இன காளைகளும் மாடுகளும் பெரியளவில் வணிகம் செய்யப்படுகின்றது. அங்கு கூடியுள்ள பல கால்நடைகளில் சிறந்த கால்நடைகளை அதன் சுழி,நிறம், தோலின் தன்மை போன்றவற்றை வைத்து தேர்வு செய்வது என்பது ஒரு கலையாகவே கருதப்படுகிறது. அது கால்நடை வளர்ப்பில் பல ஆண்டுகளின் அனுபவத்தால் மட்டுமே கிட்டும்.
    இங்கு காங்கேயம் இனம் மட்டுமல்லாமல் பர்கூர், ஆலம்பாடி,ஓங்கோல் மற்றும் கலப்பு இனங்களும், குதிரைகளில் மார்வாரி, கத்தியவாரி போன்ற இனங்களும் வணிகம் செய்யப்படுகின்றது. இது கால்நடை வளர்ப்போருக்கு வணிகம் செய்யும் இடமாக மட்டும் இல்லாமல் விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு பெரும் சுற்றுலாத் தலம் போலவே இருக்கும்.
    பல ஏக்கர் நில பரப்பில் நடக்கும் குதிரை சந்தையில் ஒரு வார காலத்தில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேலான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். சந்தைக்கு கால்நடை கொண்டு வருபவர் அவரவர் வசதிக்கேற்ப தனக்கென தனி கொட்டகை போன்று அமைத்து அங்கேயே ஒரு வார காலம் தங்கி தன் நண்பர்களுடன் சமைத்து உண்பர்.
    இங்கு ஒரு குதிரையின் விற்பனை நாற்பதாயிரம் முதல் அதன் சிறப்பம்சத்திற்கு ஏற்ப எட்டு லட்சம் வரை விற்பனையாகும். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு காங்கேயம் இன காளைகளும் மாடுகளும் அதிக அளவில் விவசாய பெருமக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. அதனால் கிடாரி கன்றுகளின் விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும் கிடாரி கன்றுகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றனர்.
    ஒரு வார காலம் இங்கு வந்து காட்சி படுத்துவதற்காக தங்களது கால்நடைகளை ஒரு வருட காலம் மிக கவனமாக பாரமரித்து தயார் செய்து, அதனை பார்த்துக் கொள்வதை உரிமையாளர்கள் பெரிய பெருமையாக கருதுகின்றனர். அங்கு வணிகம் செய்யும் நோக்கத்தில் வரவில்லை என்றாலும் தான் தயார் செய்த கால்நடைகளை சபை முன் நிறுத்த வேண்டும் என்பதற்கும், அங்கு வேடிக்கை பார்க்க வரும் மக்களை உற்சாகப் படுத்தும் வகையிலும் பலர் தனது கால்நடைகளை கொண்டு வருகின்றனர்.
    எனவே வருடந்தோறும் ஆடி மாதம் கூடும் அந்தியூர் சந்தை , குதிரை ஆர்வலர்களுக்கும், இயற்கை விவசாயம் செய்ய தேவையான நாட்டு இன பசுக்களை வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கும் சிறந்த இடமாக இருக்கும்.
    தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் இது போன்ற சந்தைகள் நடைபெறும். அதில் குறிப்பிடும் படியாக திருவண்ணாமலையில் கார்திகை தீபத் திருவிழாவின் போது மூன்று நாட்கள் குதிரை சந்தை நடைபெறும், அடுத்து திருப்பூர் மாவட்டம் கண்ணபுரம் அருகே ஓலப்பாளையம் ஊரில் சித்திரை மாதத்திலும் , திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கொம்பையில் ஆனி மாதத்திலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தொப்பம்பட்டியில் ஆடி18 அன்று என பல இடங்களில் இது போன்ற குதிரை மட்டும் மற்ற கால்நடைச் சந்தை நடைபெறும். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இது போன்ற இடங்களை சென்று பார்ப்பது, அவரவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை நிச்சயமாக கொடுக்கும்.
    pc: / ranjithkrishnaphotograp

ความคิดเห็น • 12