இரவு
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
- 1) கிராமங்களை துடிப்பான வளர்ச்சி மையங்களாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம் - ஊரக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் கிராமப்புற பாரத திருவிழாவை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
2) மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் மறைவு - இந்திய அணுசக்தி திட்டத்தின் முக்கிய தூணாக திகழ்ந்தவர் என பிரதமர் நரேந்திர மோதி புகழஞ்சலி.
3)விரைவில் பாதுகாப்பு நடவடிக்கைளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி.
4) விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையேயான இடைவெளியை பூர்த்தி செய்வதற்காக விளைபொருட்களின் போக்குவரத்து செலவை அரசே ஏற்கும் - மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் தகவல்.
5) ஆராய்ச்சி, மேம்பாட்டில் மகளிரை மையப்படுத்திய நிகழ்ச்சிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது - மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
6) ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு - அரசின் பேரிடர் மேலாண்மை துறையின் அரசிதழில் வெளியீடு.
7) சொந்த ஊருக்கு செல்வோர் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக ஜனவரி 17 ஆம் தேதியும் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
8) அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்த பாஜக மகளிர் அணியினர் வலியுறுத்தல்.
9) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலைவெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு
10) அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - வழக்கை தொடக்கம் முதலே காவல்துறை திசைதிருப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.