2.002 திருவலஞ்சுழி -. THIRU-VALAN-CHUZHIபண் : இந்தளம் - வினாஉரை பதிகத் தொடர் எண்: 137

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • திருத்தல வரலாறு பிலத்தினுள் சென்றுவிட்ட காவிரி வெளிப்படும் பொருட்டு ஏரண்ட முனிவர் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து வலமாகச் சுழித்துக் கொண்டு சென்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது. இது கும்பகோணம் - தஞ்சாவூர் தொடர்வண்டிப் பாதையில், சுவாமிமலை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 25ஆவது தலம் ஆகும். கும்பகோணம் - தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. இறைவர் கற்பகநாதேசுரர். இறைவியார் பெரியநாயகி. தீர்த்தம் காவிரி. அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது பூசித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இங்குக் கொண்டு வந்து எழுந்தருளுவித்து வழிபட்டான். வெள்ளைப் பிள்ளையார் கோயில் மிகவும் வேலைப்பாடுடையது. இக்கோயிலில் ஏரண்ட முனிவரின் பிரதிமையும், பக்கத்தில் வலஞ்சுழி நாதர் என்னும் சிவலிங்கத் திருமேனியும் இருக்கின்றன. இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.பதிக வரலாறு முத்தமிழ் விரகர், மாதவத்து முதிரும் அன்பர்கள் எதிர்கொள, வலஞ்சுழிப் பெருமான் கோயில் வந்து எய்திக் கோபுரம் இறைஞ்சி, உள்புகுந்து, வலங்கொண்டு, உச்சிமேல் அஞ்சலியினராய்ப் பெருகும் ஆதரவுடன் பணிந்தெழுந்து ஊனமில் இசையுடன் விளங்கிய இத்திருப்பதிகத்தைப்பாடி வினாவியருளினார். திருச்சிற்றம்பலம்

ความคิดเห็น • 2

  • @bhaskerramadoss7712
    @bhaskerramadoss7712 6 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 8 วันที่ผ่านมา

    திருத்தல வரலாறு பற்றியும் குறிப்பு தந்தது சிறப்பு.