புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • செங்கத்தில் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா. எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேற்கு ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    போளூர் சட்டமன்ற உறுப்பினரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
    போளூர் சாலையில் இருந்து அதிமுக தொண்டர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக செங்கம் புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர்.
    பின்பு புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர்.
    செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன் சார்பில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் செங்கம் ஒன்றியத்தை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர்.
    தினமுகம் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக மண்டல தலைமை செய்தியாளர்
    T.குருபரன்

ความคิดเห็น •