Arasanai Kanamal Irupomo I Robin Samuel I Christmas song I Cover I Robin Gospel Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1

  • @RobinGospelVision
    @RobinGospelVision  ปีที่แล้ว +1

    அரசனைக் காணாமல் இருப்போமோ
    நமதாயுளை வீணாகக் கழிப்போமோ
    பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ
    யூதர் பாடனுபவங்களை ஒழிப்போமோ
    யூத அரசனைக் காணாமல் இருப்போமோ
    நமதாயுளை வீணாகக் கழிப்போமோ
    யாக்கோபில் ஓர் வெள்ளி உதிக்குமென்றே
    இஸ்ரேல் ராஜ செங்கோல் எங்கும் கதிக்குமென்றே
    ஆக்கம் இழந்து மறு வாக்குரைத்த பாலாம்
    தீர்க்கன் மொழி பொய்யாத பாக்கியமே
    யூத அரசனைக் காணாமல் இருப்போமோ
    நமதாயுளை வீணாகக் கழிப்போமோ
    தேசோமய தாரகை தோன்றுது பார்
    மேற்குத் திசை வழி காட்டி முன் செல்லுது பார்
    பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே
    அவர் பொன்னடி வணங்குவோம் நடவுமென்றே
    யூத அரசனைக் காணாமல் இருப்போமோ
    நமதாயுளை வீணாகக் கழிப்போமோ
    அலங்கார மனை ஒன்று தோணுது பார்
    அதன் அழகு மனமும் கண்ணும் கவர்ந்தது பார்
    இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்
    நாம் எடுத்த கருமம் சித்தி ஆகிடும் பார்
    யூத அரசனைக் காணாமல் இருப்போமோ
    நமதாயுளை வீணாகக் கழிப்போமோ
    அரண்மனையில் அவரைக் காணோமே
    அதை அகன்று தென் மார்க்கமாய்த் திரும்புவோமே
    மறைந்த உடு அதோ பார் திரும்பினதே
    பெத்லேம் வாசலில் நம்மைக் கொண்டு சேர்க்குது பார்
    யூத அரசனைக் காணாமல் இருப்போமோ
    நமதாயுளை வீணாகக் கழிப்போமோ