ஆருத்ரா தரிசனம்-திருக்கார்த்திகை தீப மை நடராஜ பெருமானுக்கு சாற்றப்பட்டது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • அண்ணாமலையார் திருக்கோவிலில் சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம்-திருக்கார்த்திகை தீப மை நடராஜ பெருமானுக்கு சாற்றப்பட்டது-ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்-மாடவீதிகளில் வலம் வந்த சிவகாமி சமேத நடராஜ சுவாமிகள்-பக்தா்கள் சாமி தரிசனம்.
    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று சிவகாமி சமேத நடராச பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கார்த்திகை தீபமை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள மாதங்களில் மார்கழி மாதத்தினை ஆன்மீக மாதம் என்று கூறுவர். இந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று நடைபெற்றது. அதன்படி நேற்று இரவு திருக்கோவிலில் உள்ள 1000 கால் மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜ பொருமான் எழுந்தருளினர்.
    இன்று காலை சிவகாமி சமேத நடராச பெருமானுக்கு அரிசி மாவு, சீயக்காய்த்தூள், மஞ்சள், பஞ்சாமிரதம், தேன், பால், பன்னீர், இளநீர், அபிஷேகத்தூள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. டிசம்பர் 13ஆம் தேதி திருக்கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலையின் மீது ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீப கொப்பரையிலிருந்து தீபமை கொண்டு வரப்பட்டு அதற்கு திருக்கோவிலின் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆருத்தரா தரிசனம் போது சிவகாமி சமேத நடராச பெருமானுக்கு தீபமை நெற்றியில் வைக்கப்பட்டது.
    இதனை தொடர்ந்து சிவகாமி சமேத நடராச பெருமான் 1000 கால் மண்டபத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருமஞ்சன கோபுர வாயில் வழியாக திருக்கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். குறிப்பாக ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய 2 தினங்கள் மட்டும் திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராச பெருமான் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
    திருகார்த்திகை தீபத்திருவிழாவின் போது நெய்க்காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீப மையானது இன்று முதல் பிரசாதமாக வழங்கப்படும். மாடவீதிகளில் சிவகாமி சமேத நடராஜ பெருமானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்துச் சென்றனர்.

ความคิดเห็น •