நல்லவன்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்சமத்துவ பொங்கல் விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • நல்லவன்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்
    சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
    தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை
    ஊராட்சி செயலாளர் எம்.சுகுமார் வழங்கினார்
    திருவண்ணாமலை, ஜன.16- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை ஊராட்சி செயலாளர் எம்.சுகுமார் வழங்கினார்.
    பாரம்பரிய தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா ஊராட்சி செயலாளர் எம்.சுகுமார் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து இறைவனுக்கு கரும்பு உள்ளிட்ட பொருட்களை படையல் வைத்து விழாவை கொண்டாடினர். தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
    இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்களுக்கு புத்தாடைகளை வழங்கிய ஊராட்சி செயலாளர் எம்.சுகுமார் ஊராட்சி மன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதில் அரசு அலுவலர்கள் தூய்மைப்பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ความคิดเห็น •