Maha Shankaaran
Maha Shankaaran
  • 245
  • 340 327
திருவீழிமிழலை
திருச்சிற்றம்பலம்
நான்காம் திருமுறை
திருவீழிமிழலை
பாடல் எண் : 7
தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி மிழலை யிருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேற் சிவந்ததொர் பாசத்தால் வீசியவெம்
கூற்றங்கண் டும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.
பொழிப்புரை :
இவ்வுலகைப்படைத்த பிரமனுடைய தலை ஒன்றனைக் கொய்தவரே ! தூய வெள்ளிய காளையை வாகனமாகக் கொண்டவரே ! அழகிய வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே ! கோபம் கொண்டு என்மேல் சிவந்ததொரு பாசக் கயிற்றை வீசும் கூற்றுவனைக் கண்டு அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின் .
குறிப்புரை :
தோற்றம் கண்டான் - ` உண்டாக்கும் வண்ணம் கண்டான் ` ( சகல கலாவல்லி மாலை . 1) சிரம் - தலை . ஒன்று - ஐந்தலையுள் ஒன்று . ` ஆதிக்கணான் முகத்தில் ஒன்று ... ... தன்கை வாளால் சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவான் `. ( தி .6 ப .20 பா .1). ` தாமரையோன் சிரம் அரிந்து கையிற் கொண்டார் ` ( தி .6 ப .96 பா .1). தூய வெள்ளெருது :- ` வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பிலேனே ` ( தி .4 ப .84 பா .7). ஏற்றம் - ஏறுந்தொழில் . ஏறு , நாறு , சீறு , மாறு , கூறு முதலியவை ஏற்றம் , நாற்றம் , சீற்றம் , மாற்றம் , கூற்றம் என அம்மீறுற்று நிற்றல் அறிக . தோற்றம் (+ தோன்று + அம் ). எழில் - அழகு . திருவீழிமிழலையில் எழுந்தருளி யிருத்தலையுடையீர் . கூற்றம் சீற்றம் கொண்டு . கொண்டு வீசிய கூற்றம் . சிவந்ததொருபாசம் (- கயிறு ) வெங்கூற்றம் - ` கொடுங்கூற்று `. இறக்கும்பொழுது இறைவனை இறையும் எண்ணுதலியலாது . ` நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் , சாம் அன்றுரைக்கத் தருதி கண்டாய் எங்கள் சங்கரனே `. ( தி .4 ப .103 பா .3).
ஐந்தம் திருமுறை
பொது
பாடல் எண் : 5
மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே.
பொழிப்புரை :
மனிதர்களே! மலையே வந்து விழுந்தாலும் தத்தம் நிலையில் நின்று கலங்காதீர்கள். ஈசன் அடியார்களை ஐம்பொறிகளாகிய யானைகள் கொன்றுவிடுமோ? கொல்லாவாம்.
குறிப்புரை :
மலையே வந்து விழினும் - மலையே புரண்டு விழுந்தாலும். நிலையில் நின்று - இறைவனது அருள் நிலையிலிருந்து. கலங்கப்பெறுதிர் - கலக்கம் அடையாதீர்கள். தமர்களை - அடியவர்களை. கொலைசெய் யானைதான் - கொல்லும் தன்மையையுடைய ஐம்புலன்களாகிய யானைகள். கொன்றிடுகிற்கும் - கொன்றிடும். ஏ - வினா. கொல்லவல்லதோ என்க. தம்மநுபவம் பொதுவாக்கியது.
பாடல் எண் : 7
மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவு மேசற்ற வர்கட்கே.
பொழிப்புரை :
மனிதர்களே! இங்கே வாருங்கள்; ஒன்று சொல்லுவேன்; பழம் தந்தால் பழத்தை உண்ணவும் வல்லமை உடையீரோ? புனிதனும் கழல்கள் அணிந்த இறைவனும் ஆகிய கனி; ஏசற்றவர்களுக்கு மிகவும் இனியது; காண்பீராக.
குறிப்புரை :
இங்கேவம் - இங்கேவாருங்கள். ஒன்று சொல்லுகேன்- பயன் தருவதாய செய்தி ஒன்று சொல்கின்றேன். கனி உண்ணவும் வல்லிரே - கனியை உண்ணும்வல்லமை உடையவர்கள் நீங்கள். புனிதன் - தூயன். பொற்கழல் - அழகிய வீரக்கழலையணிந்த திருவடிகள். ஈசன் எனுங்கனி - ஈசன் என்ற பெயரையுடைய கனி. `கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி` (தி.9 திருவிசைப்பா. 47) முதலிய திருமுறை மேற்கோள்களை எண்ணுக. சாலவும் இனிது - மிகவும் இனியது. ஏசற்றவர்கட்கு - குற்றமற்றவர்கட்கு.
அப்பர் பெருமான் பொற்கழல் போற்றி!
போற்றி!!
www.thevaaram.org
มุมมอง: 1 544

วีดีโอ

திருத்தாண்டகம்
มุมมอง 1K2 ปีที่แล้ว
!!!! சார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லா வற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்!!! திருச்சிற்றம்பலம் ஆறாம் திருமுறை பொது திருத்தாண்டகம் பாடல் எண் : 8 அத்தாவுன் அ...
அவிநாசி
มุมมอง 5742 ปีที่แล้ว
திருப்புக்கொளியூரிலுள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது தொண்டனாகிய நம்பியாரூரன் , ஒரு பயன் கருதிப் பாடிய , இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும் !! முதலை உண்ட பாலனை மீட்டருளல்: திருவாரூர்ப் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளை நினைந்து மலைநாடு செல்லத் திருவுளங்கொண்டார். சோழநாட்டைக் கடந்து...
முத்துவிதான மணிப்பொற்கவரி
มุมมอง 6782 ปีที่แล้ว
திருஞானசம்பந்தர் சந்திப்பு 2 : திருவாரூரிலிருந்து வழியில் பல சிவதலங்களையும் தரிசித்துக் கொண்டே திருப்புகலூருக்கு வந்தார். அப்பொழுது முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரும் அப்பரை எதிர்கொண்டழைத்தார். திருவாரூரில் நிகழ்ந்த சிறப்பினைத் திருஞானசம்பந்தர் வினவத் திருநாவுக்கரசர், ``முத்து விதானம்`` என்று தொடங்கித் திருவாதிரைச் சிறப்பை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட சம்பந்தர் `நான...
எண்ணுகேன் என் சொல்லி
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
சிவமயம் நாயன்மார் வரலாறு நான்காம் ஐந்தாம் ஆறாம் திருமுறைகள் திருநாவுக்கரசர் வரலாறு திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர் வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள் பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.
திருதூங்கானை மாடம்
มุมมอง 1.3K2 ปีที่แล้ว
திருச்சிற்றம்பலம் நான்காம் திருமுறை திருத்தூங்கானைமாடம்(திருப்பெண்ணாகடம் ) பாடல் எண் : 1 பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே. பொழிப்புரை : விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளி...
முடிகொண்டார்
มุมมอง 5362 ปีที่แล้ว
திருச்சிற்றம்பலம் ஆறாம் திருமுறை தனித்திருத்தாண்டகம் பாடல் எண் : 3 முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு மூசுமிள நாகமுட னாகக் கொண்டார் அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார் வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார் மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார் துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார் சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே. பொழிப்புரை : சடையை முடியாகக் கொண்டவரும்...
பரவும் பரிசொன்றும் அறியேன் நான்
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
திருச்சிற்றம்பலம் ஏழாம் திருமுறை திருவையாறு பண் :காந்தார பஞ்சமம் பாடல் எண் : 1 பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான் கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க , தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும் ...
சிவனெனும்
มุมมอง 9212 ปีที่แล้ว
திருச்சிற்றம்பலம் நான்காம் திருமுறை பொது பாடல் எண் : 9 சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான் அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான் பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால் இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே. பொழிப்புரை : சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மேனிப் பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திடுவானாகில் அவனை அடியேன் ` பவன் ` என்னும் தி...
108 கரணங்கள்
มุมมอง 3792 ปีที่แล้ว
திருச்சிற்றம்பலம் நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்பவை சிவபெருமான் பரதநாட்டியத்தின் கரணங்களான 108 கரணங்களையும் ஆடியதாகும். ஆணின் நடனம் தாண்டவம் என்று பெயர் பெறுவதால், இந்தக் கரண நடனங்கள் நூற்றியெட்டு தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நடன கலையில் தலைவனாக இருந்து பரத முனிவருக்கு பரதநாட்டியம் கற்பித்தார் சிவபெருமான். அப்போது ஆனந்த தாண்டவத்திற்கும், பிரளய தாண்டவத்திற்கும் இடையே நூற்றியெட்டு தாண்டவ...
திருவன்பார்த்தான் பணங்காட்டூர்
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
!!புகழ்மிக்க திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள , அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும் அடியவ னாகிய , அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை , அவரவர் ஊரின்கண் உரைசெய்வாரும் சிவ லோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர் .!! திருச்சிற்றம்பலம் ஏழாம் திருமுறை திரு வன்பார்த்தான் பனங்காட்டூர் பண் :சீகாமரம் பாடல் எண் : 1 விடையின்மேல் வருவான...
திருத்தாண்டகம்
มุมมอง 6772 ปีที่แล้ว
திருச்சிற்றம்பலம் ஆறாம் திருமுறை திருத்தாண்டகம் பாடல் எண் : 10 தந்தையார் தாயா ருடன்பி றந்தார் தாரமார் புத்திரரார் தாந்தா மாரே வந்தவா றெங்ஙனே போமா றேதோ மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின் திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி எந்தையார் திருநாமம் நமச்சி வாய என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே பொழிப்புரை : ஒருவருக்குத் தந்தை யார் ? தாய் யார் ? உடன் பிறந்தார் த...
திருவானைக்கா
มุมมอง 7222 ปีที่แล้ว
திருச்சிற்றம்பலம் மூன்றாம் திருமுறை திருவானைக்கா பண் :கௌசிகம் பாடல் எண் : 1 வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத் தேனைக்காவி லின்மொழித் தேவிபாக மாயினான் ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர் ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேத மில்லையே. பொழிப்புரை : வானிலுள்ள இருளைப் போக்கும் வெண்மதியைச் சடையில் தாங்கி , தேன் போன்ற இனிய மொழிபேசும் உமாதேவியைத் தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு , திருஆனைக்காவில் ...
திருக்கழுமலம்
มุมมอง 2402 ปีที่แล้ว
திருச்சிற்றம்பலம் மூன்றாம் திருமுறை திருக்கழுமலம் (சீர்காழி ) பாடல் எண் : 6 மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும் பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே. பொழிப்புரை : நெஞ்சமே ! இறைவனைத் தவிர மற்றோர் பற்று எதுவுமில்லை . நான்கு வேதங்களையும் நன்கு கற்று , கற்றதன்படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில் சிற்றிட...
திருக்கோளிலி
มุมมอง 5422 ปีที่แล้ว
!! அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான் !...
திருவாலங்காடு
มุมมอง 4232 ปีที่แล้ว
திருவாலங்காடு
திருவாவடுதுறை
มุมมอง 2042 ปีที่แล้ว
திருவாவடுதுறை
திருவானைக்கா
มุมมอง 2.6K2 ปีที่แล้ว
திருவானைக்கா
கந்தர் அநுபூதி
มุมมอง 4472 ปีที่แล้ว
கந்தர் அநுபூதி
திருக்கழுமலம்
มุมมอง 6173 ปีที่แล้ว
திருக்கழுமலம்
திருமணஞ்சேரி
มุมมอง 5123 ปีที่แล้ว
திருமணஞ்சேரி
திருப்பள்ளியெழுச்சி 1
มุมมอง 2573 ปีที่แล้ว
திருப்பள்ளியெழுச்சி 1
தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
มุมมอง 3.9K3 ปีที่แล้ว
தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
முன்பனை முனிவரோ டமரர்க ளடிதொழும்இன்பனை யிணையில
มุมมอง 2763 ปีที่แล้ว
முன்பனை முனிவரோ டமரர்க ளடிதொழும்இன்பனை யிணையில
திருச்சிற்றம்பலம், திருநீடூர்
มุมมอง 7503 ปีที่แล้ว
திருச்சிற்றம்பலம், திருநீடூர்
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
มุมมอง 2503 ปีที่แล้ว
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
மரத்தை மறைத்தது மாமத யானை
มุมมอง 4723 ปีที่แล้ว
மரத்தை மறைத்தது மாமத யானை
எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
มุมมอง 1433 ปีที่แล้ว
எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனே
มุมมอง 1.2K3 ปีที่แล้ว
விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனே
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
มุมมอง 1633 ปีที่แล้ว
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்