1214.Shaitan Ko Kisne Gumrah Kiya?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1214
    (Shaitan Ko Kisne Gumrah Kiya?)
    ஷைத்தானை வழிகெடுத்தது யார்?
    ஷா கமால் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள், "ஜின் ஷைத்தான் என்னை தீய காரியங்களை செய்ய தூண்டுவது, வழிகெடுப்பது என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல. ஏனென்றால், ஷைத்தான் பகிரங்க எதிரியாக இருக்கின்றான். ஆனால், நஃப்ஸே அம்மாரா என்னுடையதாக இருந்து கொண்டே, என்னுடைய உஜூதின் ஒரு அங்கமாக இருந்து கொண்டே என்னுடன் பகைமை கொள்கிறது. இது ஷைத்தானைக் காட்டிலும் என்னை அதிகமாக அல்லவா வழிகெடுக்கின்றது".
    ஒரு வேளை நஃப்ஸே அம்மாரா நம்மில் இல்லாமல் இருந்தால், எந்தவொரு மனிதனும் குஃப்ர் செய்யமாட்டான். ஒரு வேளை எந்தவொரு மனிதனுக்குள்ளும் நஃப்ஸே அம்மாரா இல்லாமல் இருந்திருந்தால், எந்தவொரு மனிதனும் மது அருந்தமாட்டான், விபச்சாரம் செய்யமாட்டான், திருடமாட்டான். மனிதன் பாவம் செய்கின்றான் என்றால் அவன் எதனால் செய்கின்றான்?. நஃப்ஸே அம்மாராவின் தூண்டுதலினால் மனிதன் பாவம் செய்கின்றான்.
    2. நஃப்ஸே அம்மாராவை ஷைத்தான் வழிகெடுக்கத் தூண்டுகிறது. மேலும் நஃப்ஸே அம்மாரா நம்மை வழிகெடுக்கின்றது. ஒரு வேளை நஃப்ஸே அம்மாரா நம்மில் இல்லாமல் இருந்திருந்தால், ஷைத்தான் பாவமான காரியங்களை செய்யும்படி நம்மை தீண்டுவதில்லை. இதனை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நான் இதனை பல முறை கூறியிருக்கின்றேன். பாவம் செய்யும்படி ஷைத்தான் நம்மை தூண்டுகின்றான், வழிகெடுக்கின்றான் அல்லவா!. ஷைத்தானை யார் வழிகெடுக்கின்றார்?.
    وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّاۤ اِبْلِيْسَ اَبٰى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
    பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) "ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.
    (அல்குர்ஆன் : 2:34)
    3. அல்லாஹு தஆலா ஹழ்ரத் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஸஜ்தா செய்யும்படி மலக்குகளுக்கும், ஷைத்தானுக்கும் கட்டளையிட்ட போது மலக்குகள் ஸஜ்தா செய்தார்கள். ஆனால் ஷைத்தான் ஸஜ்தா செய்யவில்லை. ஏன் ஷைத்தான் ஸஜ்தா செய்யவில்லை?. வேறு எதுவும் ஷைத்தான், ஷைத்தானை வழிகெடுத்ததா என்ன!. அவனோ ஷைத்தான்களுக்கெல்லாம் சர்தாராக இருந்தான். அவனுக்குள் ஷைத்தான் இல்லை. அவனே ஷைத்தானாக இருந்தான். ஹழ்ரத் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஸஜ்தா செய்வதை விட்டும் ஷைத்தானை தடுத்தது வேறு எதுவும் ஷைத்தான் இல்லை. அவனுக்குள் இருந்த நஃப்ஸே அம்மாரா அவனை ஸஜ்தா செய்வதை விட்டும் தடுத்தது. நஃப்ஸின் பேச்சைக் கேட்டு, ஷைத்தான் நாசமாகினான், சபிக்கப்பட்டவனாக ஆகினான்.
    4. இந்த நஃப்ஸே அம்மாராவானது இரண்டு (z)ஜாத்தில் உள்ளது. நஃப்ஸே அம்மாரா மனிதர்களிலும், ஜின்களிலும் இருக்கின்றது. நஃப்ஸே அம்மாரா மலக்குகளில் இருப்பதில்லை. மனிதர்களிலும், ஜின்களிலும் ஆகிய இரண்டு (z)ஜாத்தில் மட்டுமே நஃப்ஸே அம்மாரா உள்ளது. இந்த இரண்டு (z)ஜாத்தையுமே அல்லாஹு தஆலா தனக்கு இபாதத் செய்யும்படி கட்டளையிட்டிருக்கின்றான்.
    وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏
    ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.
    (அல்குர்ஆன் : 51:56)
    நமக்குள் நஃப்ஸே அம்மாராவை வைத்து இபாதத் செய்யும்படி கட்டளையிட்டிருக்கின்றான், அல்லாஹ்விற்கு கீழ்படிந்து நடக்கும்படி கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே சோதனையாகும், பரிட்சையாகும். ஒரு புறம் நஃப்ஸ் அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதை விட்டும் தடுக்கும். ஆனால் நஃப்ஸ் கூறுவதைக் கேட்காதீர்கள். ரப்பு கூறுவதைக் கேளுங்கள், ரப்புக்குக் கட்டுப்படுங்கள். ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள், அவர்களுக்குக் கட்டுப்படுங்கள். எனவே இதன் மூலம் அல்லாஹு தஆலா நம்மை சோதிக்கின்றான். அல்லாஹ், ரஸூல் கூறுவதைக் கேட்டு நடக்கின்றீர்களா? அல்லது நஃப்ஸ், ஷைத்தான் கூறுவதைக் கேட்டு நடக்கின்றீர்களா? என்பதை சோதிக்கின்றான்.
    (குறிப்பு: சர்க்கார் கூறிய கவிதைக்கு மட்டும் மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை)
    அல்லாமா பெஹ்ருல் உலூம் மு(f)பஸ்ஸிரே குர்ஆன், ஷாரிஹே மஸ்னவி, அபுல் இஹ்சான், மௌலானா பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் ர(z)ஸாவுல் ஹக் ஆமிர் அலீமி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

ความคิดเห็น • 5

  • @kaleemdildaar5359
    @kaleemdildaar5359 23 วันที่ผ่านมา

    Subhanallah Alhamdulillah ❤

  • @SyedShabeer-s1b
    @SyedShabeer-s1b 20 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @WaseemAhmed-fc1qw
    @WaseemAhmed-fc1qw 8 หลายเดือนก่อน +1

    Ya ameri Piya nazre karamkegeye

  • @naturecoolnaturecool1816
    @naturecoolnaturecool1816 8 หลายเดือนก่อน +1

    Faizan e Aamir Piya zindabad....

  • @mohamedarief49
    @mohamedarief49 หลายเดือนก่อน

    Allah hafiz Baqqi sabur Shakur Baqqi mumin muhaymin Baqqi