Kodai Kaala Kaatre - Panneer Pushpangal Tamil Song - Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @vasudevan1560
    @vasudevan1560 3 ปีที่แล้ว +125

    70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!

    • @hemasomu3787
      @hemasomu3787 11 หลายเดือนก่อน +2

      உண்மையாக நாம் கொடுத்து வைத்தவர்கள்.

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 10 หลายเดือนก่อน +1

      அப்படியேதான் நண்பா என்ன ஒரு பொன்னான காலம்.தாய்தந்தை சகோதர சகோதரிகள் பங்காளிகள் உடன் நாங்கள் 47பேருடன் கூட்டு குடும்பமாக எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்த அந்த காலம் சே என்ன இந்த கால வாழ்க்கை...

    • @Sundarajan-mo6xz
      @Sundarajan-mo6xz 7 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉bro.hats off to u

    • @antonyraj3202
      @antonyraj3202 3 วันที่ผ่านมา

      True

  • @Vignesh22169
    @Vignesh22169 3 ปีที่แล้ว +27

    கமெண்ட்ஸ் படிக்கும் போது, மிக ஏக்கமாகவும், பொறாமை யாகவும் உள்ளது.... இருப்பினும் இந்த அறிய வாய்ப்பில் நானும் கமெண்ட்ஸ் வழியாக 80 களில் பயணிப்பதாக கற்பனை செய்து கொண்டு சந்தோசபடுகிறேன்....

  • @PS2-6079
    @PS2-6079 3 ปีที่แล้ว +87

    1981-ம் ஆண்டு ஹேமசித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பத்மினி தயாரிப்பில் இரட்டையர்கள் பாரதி-வாசு (சந்தானபாரதி, P வாசு) ஆகியோர்கள் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப், வெண்ணிறாடை மூர்த்தி, மாணவன் மனோகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட வெற்றிப் படம் தான் "பன்னீர் புஷ்பங்கள்."
    "வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ
    வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ "
    என்ன ஒரு சுகமான இசையோட்டம் !
    மனதின் அமைதியில் உதடுகளை முனுமுனுக்க வைத்த வரிகள்!
    இளமைக்காலத்து இனக்கவர்ச்சியின்பால் ஏற்படும் ஒருவித மோகவும், தாபமும் எல்லாம் நிலைகொள்ள மறுக்கும் தேரோட்டம் தானே?
    அப்போதெல்லாம் எங்கிருந்து வந்தது அந்த தைரியம் என்று, இன்று யோசித்தால் கூட ஏதோ ஒருவித வெட்கம் நிலைகுலைய வைப்பதின் அழகை சொல்லாமலேயே புரிகிறதல்லவா?
    கனவுத் தோரணங்கள் போர்த்திய பயமறியாத, கள்ளம் கபடமற்றது தானே இளமைக்கால நாட்கள்?
    அப்ப எதுவும் சொல்லிவிட்டு போகல...
    இப்ப நினைத்தாலும் அனைத்தும் சொல்லிமாளாது...
    நிற்க.
    சோமசுந்தரேஷ்வரின் வித்தியாசமான கற்பனை கதைக்கு ஒரு சபாஷ்!
    (கதை சுருக்கம்" பூந்தளிர் ஆட" பாடலின் பின்னூட்டத்தில் பகிர்ந்துள்ளேன்)
    விடலைத்தனமான காதல்கதை என்றாலும் கூட, எங்கேயும் வரம்புமீறின காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இடம்பெறவில்லை என்பதுதான் நிஜம்!
    விடலை பருவத்தில் இனக்கவர்ச்சி மூலம் எழும் காதல் வயப்பட்டு அறியாமையால் ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் ஜோடிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நேரிடையாக பாடம் புகட்டுவது போன்று அமையாமல் மிகவும் யதார்த்தமாக படமாக்கிய விதமும் இப்படம் வெற்றி பெற ஒரு காரணம் என்பது தானே நிதர்சனம்!
    நான் இந்த படத்தை அம்மாவிடம் அனுமதி பெற்று, அப்பாவிற்கு தெரியாமல் நண்பர்களுடன் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இரவு காட்சியாக சென்னை ஈகா தியேட்டரில் கண்டு களித்த பசுமையான நினைவுகள் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் உயிர்த்தெழுந்து வருவதை தடுக்க முடியுமா?
    பாடல்களை பொறுத்தமட்டில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் கற்பனையில் உதயமான வார்த்தை ஜாலங்களை இளையராஜா தன்னுடைய இசையெனும் தேனில் தோய்த்தெடுத்து மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கச் செய்ததை ரசிகர்கள் மனதார ஏற்றுக்கொண்டார்கள் என்பது தான் நிதர்சனம்!
    யார் இந்த மலேசியா வாசுதேவன்?
    அன்றைய ஒருங்கிணைந்த மதராஸ் சமஸ்தானம், கேரளாவிலிருந்து மலேசியாவில் குடியேறிய சாத்து நாயர் - அம்மாளு தம்பதியரின் எட்டாவது மகனான ஆறுமுகம் என்கின்ற வாசுதேவன். வாலிப பருவத்தில் அங்குள்ள நாடகக்குழுவில் நடிகனாகவும், தமிழர் இசைக்குழுவில் மேடைப்பாடகனாகவும் அறிமுகமானார்.
    1970-களில் நற்பதிற்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்தார். தொடர்ந்து "பாவலர் பிரதர்ஸ்" இசைக்குழுவின் மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். அவரது முதல் திரை படப்பாடல் GK வெங்கடேஷின் இசையமைப்பில் உருவாகியிருந்தாலும் இளையராஜா இசையில், "பதினாறு
    வயதினிலே" படத்தில் வரும் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு " எனும் பாடல் தான் அவரை உலகறியச்செய்தது என்று சொன்னால் மிகையல்ல!
    பாரதிராஜா இயக்கத்தில் உருவான "ஒரு கைதியின் டைரி" திரைபடத்தில் வில்லன் வேடம் மூலமாக பிசியான நடிகராகவும் மாறிவிட்டார்!
    சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவன் எண்பத்தைந்து படங்களுக்கு மேல் பலவித வேடங்களில் நடித்தும், நான்கைந்து திரைப்படங்களுக்கு இசை அமைத்தும், திரைப்படம் ஒன்றிற்கு கதை வசனம் படைத்தும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலம் குன்றி தன்னுடைய 67-வது வயதில் அவர் மறைந்துவிட்ட போதிலும் அவரது படைப்புகள் உலகம் உள்ளவரை நினைவுகூறும் என்பதில் சந்தேகமில்லை!
    நட்பிற்காக சம்பளம் பெறாத இளையராஜா, வழக்கமான கிராமத்து பாணியிலிருந்து சற்று விலகிப் போனதை இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறதல்லவா?
    நாற்பதாண்டுகாலம் கடந்துவிட்டபோதிலும், இன்றும் கூட காதில் தேனூறும் விதமாக அமைந்த இந்த அருமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.

    • @venkatakrishnanraghavan2312
      @venkatakrishnanraghavan2312 2 ปีที่แล้ว +1

      Arumai.... nandri sir....

    • @PS2-6079
      @PS2-6079 2 ปีที่แล้ว

      @@venkatakrishnanraghavan2312 நன்றி ஐயா

    • @sriaravindsriaravind7330
      @sriaravindsriaravind7330 2 ปีที่แล้ว +1

      Arumayana pathivu ayya. Especially Malaysia Vasudevan patriya thagavalgal. Evlav kambeeramana kural sir avaruku. Meendum meendum padika thoondum ungal eluthum rassippum arumai sir

    • @PS2-6079
      @PS2-6079 2 ปีที่แล้ว

      @@sriaravindsriaravind7330 thanks sir

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 2 ปีที่แล้ว +1

      அந்த காலத்திற்கு நீங்களும், எங்களை கொண்டு போய்ட்டீங்க.நன்றி.

  • @sivaforutube
    @sivaforutube 6 ปีที่แล้ว +1586

    Proudly born in the 1970s Proudly childhood in 1980s. Proudly teenage in 1990s. Proudly Professional in 2000s. Proud about Door Darshan.Proud about BW Dynaro TV with Antenna. Proud About Kapil Dev. Proud about Rasna. and many

    • @Saiganesh1699
      @Saiganesh1699 6 ปีที่แล้ว +21

      Siva Canjeevaram semma semma

    • @Hangthegloves
      @Hangthegloves 6 ปีที่แล้ว +26

      Siva Canjeevaram you are not alone mate!!!!

    • @pnair78
      @pnair78 6 ปีที่แล้ว +16

      Beautiful days

    • @navskrishnavskrish8176
      @navskrishnavskrish8176 6 ปีที่แล้ว +20

      Unforgettable cannot be obtained at any cost

    • @padmavathir6029
      @padmavathir6029 6 ปีที่แล้ว +14

      Lucky you !

  • @kanagarajanrajan2672
    @kanagarajanrajan2672 4 ปีที่แล้ว +153

    My College day’s 1980… எதனை முறை 80 களில் இந்த பாடலை ரசித்திருக்கிறேன்.இலங்கை வானொலியில் இனிய தென்றலாக வரும் இளையராஜாவின் இந்த பாடல்கள்………………. அந்த நாட்கள் திரும்ப போவது இல்லை.
    அது ஒரு இனிய காலங்கள்.இனிய தென்றல் காற்றுடன் காற்றினில் கலந்து வந்த பாடல் அந்த நாட்கள் திரும்ப போவது இல்லை. இயற்கையோடும் இசையோடும் இணைந்து வாழ்ந்த ஒரு பொற்காலம் அது.

    • @sureshkumarseenithamby4685
      @sureshkumarseenithamby4685 2 ปีที่แล้ว +1

      True....and I too had the experience

    • @manipk55
      @manipk55 2 ปีที่แล้ว

      Hundred percent true sir. I am born during (1966) those poverty stricken, yet happy era.

    • @sebastianmathew1105
      @sebastianmathew1105 2 ปีที่แล้ว

      Same as mine..I saw this unforgettable film during my first year of BA in 1981 ..I can't remember a film that gone etched in my mind more than this

    • @adnansyed5174
      @adnansyed5174 ปีที่แล้ว

      Laidla school campus super.
      I agree best school,

  • @chitralekha7266
    @chitralekha7266 6 ปีที่แล้ว +406

    every time i hear this song...it really takes me back to my 80's time... life was so simple and straight... parents come back home at 5pm.. playing skipping rope with friends...rushing to finish off homework to see oliyum oliyum ..homemade grandmother's snacks... 30mins drama with a moral....exciting countdown for Deepawali... where did this all go now ??? yevlo yenginalim all these things are forever lost.... i guess

    • @RoadTales
      @RoadTales 5 ปีที่แล้ว +3

      wow very aptly put.. moving

    • @piouskerur
      @piouskerur 4 ปีที่แล้ว +2

      Rightly said chitralekha

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 4 ปีที่แล้ว +15

      Nice to see 80s kids memories,, 90s kids too have part of these old memories, this 2k young generation lost all this natural moments to mobile screen and apps..

    • @sumo375
      @sumo375 4 ปีที่แล้ว +2

      True true

    • @vijaybabu11
      @vijaybabu11 4 ปีที่แล้ว +6

      Correct we have everything now but we are fetching for happiness.

  • @sivamayavan1628
    @sivamayavan1628 3 ปีที่แล้ว +31

    நாங்கள் இளையராஜா வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இளமான்கள்

  • @saravanavisagam
    @saravanavisagam 8 ปีที่แล้ว +536

    பாடலை சென்னையில் கேட்கும்போதே ஊட்டியில் மனம் பயணம் செய்கிறது...இளையராஜாவின் இசை அந்த உணர்வை ஊட்டுகிறது...இளசுகளின் காதல் ஏக்கத்தை இதைவிட அற்புதமாக விவரிக்கமுடியாது....சுகமான பாடல்

    • @jamesdhayalan
      @jamesdhayalan 7 ปีที่แล้ว +3

      Saravanavisagam C.S. @ really a truth. I am experiencing

    • @picatus
      @picatus 6 ปีที่แล้ว +1

      Was studying standard 3

    • @HariHaran-ul1xe
      @HariHaran-ul1xe 5 ปีที่แล้ว +2

      @@jamesdhayalan .santhana.barathi.p.vasu..direct.panna.padam

    • @bascovijay
      @bascovijay 4 ปีที่แล้ว +1

      Same feel

    • @kutraleeswaran1628
      @kutraleeswaran1628 4 ปีที่แล้ว +1

      Same feel bro

  • @sshankar370
    @sshankar370 8 ปีที่แล้ว +508

    தூத்துக்குடியில் எத்தனை முறை அந்த 80 களில் இலங்கை வானொலியில் இந்த பாடலை ரசித்திருக்கிறேன்.அந்த சின்ன கோவில் சாலை,பனிமய மாதா தெரு கிறிஸ்தவ நண்பர்கள்,கீழூர் ரயில் நிலையம்,மேலூர் ரயில் நிலையம் பசுமையான நினைவுகள் இந்த பாடல் மூலம்.

    • @redmaxlive5229
      @redmaxlive5229 7 ปีที่แล้ว +10

      kekum bodhe arumaya iruku br

    • @sshankar370
      @sshankar370 7 ปีที่แล้ว +21

      இளையராசா எனும் இசைகடவுள் படைத்த இசைராகம் இது .......இவ்வுலகம் இருக்கும்வரை ஒலித்துகொண்டே இருக்கும்......நீயும் நானும் மறைந்தாலும் மறையாது....

    • @magmag9416
      @magmag9416 6 ปีที่แล้ว +1

      S Shankar

    • @ferozmohideensulaiman8913
      @ferozmohideensulaiman8913 6 ปีที่แล้ว +3

      Super browse I am sri lanka

    • @ferozmohideensulaiman8913
      @ferozmohideensulaiman8913 6 ปีที่แล้ว +4

      Now where a you iambic a sri lankan

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 7 ปีที่แล้ว +306

    இதோ இந்த நொடியிலும், ஏன் இன்னும், 30 வருடம் கேட்டாலும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்களில் இதுவும் ஓன்று. 👍👌👏👏

  • @basheerahamed7248
    @basheerahamed7248 5 ปีที่แล้ว +251

    அழியாத அற்புதமான பாடல்...ஊட்டியின் குளிரை தன் குரலில் கொண்டு வந்து விட்டார் மலேசியா...

    • @hariprakash4604
      @hariprakash4604 3 ปีที่แล้ว +8

      மலேசியா வாசுதேவன் ஐயா குரலுக்கு நான் அடிமை 🙏🔥❤🎧

    • @AANBUSELVANK
      @AANBUSELVANK 3 ปีที่แล้ว +1

      @@hariprakash4604
      Cccccvd£dr0
      I
      7

    • @AANBUSELVANK
      @AANBUSELVANK 3 ปีที่แล้ว +1

      Fre.c as
      Uh
      Effa. E
      3
      Bt
      Btyro

    • @vetriventhan3463
      @vetriventhan3463 3 ปีที่แล้ว +2

      ஆமாம் அண்ணா

    • @mayilrmv7096
      @mayilrmv7096 2 ปีที่แล้ว +1

      Nice.nice.bro

  • @pencilsomethingin6908
    @pencilsomethingin6908 6 ปีที่แล้ว +234

    தமிழைப் போல் இந்தப் பாடலுக்கும் அழிவில்லை..

  • @tholkappians6842
    @tholkappians6842 4 ปีที่แล้ว +19

    1965 க்கு பிறகு பிறந்ததன் புண்ணியம் இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . ...

    • @rabiyarabiya2053
      @rabiyarabiya2053 3 ปีที่แล้ว

      உங்களைப் போன்றே நானும் இப்பாடலை ரசிக்கிறேன்.

  • @jnowfalrizwan
    @jnowfalrizwan 7 ปีที่แล้ว +585

    பள்ளி பருவத்தில் மதியம் உணவு உண்டுவிட்டு பள்ளியில் அமர்ந்து இருக்கும் போது இனிய தென்றல் காற்றுடன் காற்றினில் கலந்து வந்த பாடல் அந்த நாட்கள் திரும்ப போவது இல்லை

  • @gkartic
    @gkartic 3 ปีที่แล้ว +45

    அந்த நாட்கள் திரும்ப போவது இல்லை.... where are those golden period. i was kid but still remember this song playing in radio. Oh God, give those days once.....just dropping tears ...silently and alone...

  • @ramyadevi727
    @ramyadevi727 3 ปีที่แล้ว +42

    Everyone praising the vocal and music of the song. But no one talking about lyrics. This was written by Gangai Amaran Sir!!!! Yes this an undeniable truth😊

  • @Gravity-Stories
    @Gravity-Stories 6 ปีที่แล้ว +87

    இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபணத்தின் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் விரும்பி கேட்ட பாடல்கள். பள்ளிப்பருவ நிகழ்வுகள், அப்பாவின் நினைவுகள் என மனதில் ஈரம் ஏற்படுத்தும் இசை நிகழ்வு இது. நன்றி இசைராஜா. மனதை மீட்டி மனிதனாய் எங்களை வாழ வைப்பதற்கு நன்றிகள்

    • @SkhadharM
      @SkhadharM 4 ปีที่แล้ว +1

      அப்பாவின் நினைவுகள்??

    • @Gravity-Stories
      @Gravity-Stories 4 ปีที่แล้ว +1

      @@SkhadharMஆமாம் காதர் பாய், வாழ்வு முழுவதும் நிறைந்திருக்கும் அப்பாவின் வாசனை!! அவர் இல்லாமல் 6 ஆண்டுகள் ஓடிவிட்டது!! ஒவ்வொருவர் வாழ்விலும் நிலையான வானமாய் அப்பா இருக்கிறார்!! அன்பால் இணைவோம் அன்பால் ஒரு உலகம் செய்வோம்!!

    • @dr.nirmalraj3839
      @dr.nirmalraj3839 4 ปีที่แล้ว

      LTTE radio station aa ?

    • @danielevans8944
      @danielevans8944 4 ปีที่แล้ว

      You made me cry brother, I miss my appa alot,2 years back he died, I really miss him

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 9 หลายเดือนก่อน +1

    காலை விண்ணில் கதிரவன் கோலம் பூமி வாழ்த்தூதே❤❤ ஆசை பொங்கும் பூவை உள்ளம் இனிமை சொல்லூதே😊❤😊

  • @Usher8888
    @Usher8888 7 ปีที่แล้ว +199

    கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
    இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
    கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
    வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
    தன் உணர்வுகளை மெல்லிசையாக
    தன் உறவுகளை வந்து கூடாதோ
    இது நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும்
    இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
    கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
    ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
    வெண்மலை அருவி பன்னீர் தூவி
    பொன்மலை அழகின் சுகம் ஏற்றாதோ
    இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
    இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
    கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
    இவைகள் இளமாலை பூக்களே புதுச்சோலை பூக்களே
    கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே

    • @vijaipaul4380
      @vijaipaul4380 7 ปีที่แล้ว +7

      Nanba nandri

    • @sakthiganesh8161
      @sakthiganesh8161 4 ปีที่แล้ว +2

      வாழ்க நீவிர் வாழ்க வளமுடன்

    • @ramsathyathala700
      @ramsathyathala700 4 ปีที่แล้ว +3

      நன்றி ரசிகரே

    • @raajabalaajeps
      @raajabalaajeps 4 ปีที่แล้ว +2

      Thank you so much

    • @madhumvs2695
      @madhumvs2695 4 ปีที่แล้ว +1

      ❤️👍🙏

  • @neeshwar
    @neeshwar 3 หลายเดือนก่อน +40

    Coming here after the Meiyazhagan movie to hear this song

  • @asrini4u
    @asrini4u 8 ปีที่แล้ว +390

    For 40 years Ilayaraja didn't disappoint audience.

    • @zakeermohamedkhan8750
      @zakeermohamedkhan8750 6 ปีที่แล้ว +26

      Srini , He never disappointed and he never will.

    • @hariharasudhanj5271
      @hariharasudhanj5271 6 ปีที่แล้ว +15

      What an Epic Comment man!!! Hat's off...

    • @tarzan2857
      @tarzan2857 5 ปีที่แล้ว +11

      He will never

    • @rkselvan5155
      @rkselvan5155 4 ปีที่แล้ว +10

      Well said people we all are blessed by illayaraja the talent

    • @musiclove4887
      @musiclove4887 4 ปีที่แล้ว +13

      Yes it wld hv been awesome if AR Rahman wasnt born...he came n spoiled everything...n all the idiot music directors after him following his style only...really stupid...only Ilaiyaraja music is real music !

  • @sridharcn6135
    @sridharcn6135 4 ปีที่แล้ว +27

    இந்த பாடலில் வரும் நடிகர் சுரேஷை பார்க்கும் போது 80களில் நான் இருந்த தெருவில் இருந்த ஒரு நண்பனின் ஞாபகம் வருகிறது. அந்த பையன் சுரேஷை போலவே இருப்பான். இது போன்ற உணர்வுகள் இளையராஜா பாடலை கேட்கும் போது மட்டுமே ஏற்படும்

  • @advparan
    @advparan 5 ปีที่แล้ว +97

    மேற்கத்திய பாணி இசை கோர்வைகளை அளவாக சேர்த்து நம் தமிழ் சிதைபடாமல் இனிமையான பாடல்கள் கொடுத்தவர் இளையராஜா

    • @thiagumm2911
      @thiagumm2911 4 ปีที่แล้ว +8

      Yes sir... this song definitely has that western classical feel in it.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +21

    இந்த பாடல் எல்லாம் இன்று மட்டுமல்ல இன்னும் பல நூறு ஆண்டுகள் வரை மன அழுத்தம் நீங்க நம் தமிழ் மண்ணில் ஒலிக்கும் 👍👍👍❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏 இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. மலேஷியா வாசு 👍👍👍👍❤️❤️❤️கங்கை அமரன் வரிகள் ❤️❤️👍👍👍😭😭😭😭😭😭 நீங்காத நினைவுகள் 👍

  • @ManiVaas
    @ManiVaas 6 ปีที่แล้ว +332

    Take a Drive from Mettupalayam to Ooty by Car, Just repeat this song watching the Beauty of Nature, When you reach Ooty your heart would be more cold than Body and You feel some spirituality in you .I have experienced it.Try it out, Chorus + Violin +M.Vasudevan and Musical GOD Raja,enough one song for whole life time.

    • @vee2915
      @vee2915 6 ปีที่แล้ว +14

      It was during the journey you menioned that i listened to this song for the FIRST time ever in a college tour.... The elation i felt cannot be described in words...

    • @pnair78
      @pnair78 6 ปีที่แล้ว +7

      What a wonderful song! I am going to take that drive listening to this song in my next visit to Tamil Nadu!

    • @JavaTusker
      @JavaTusker 6 ปีที่แล้ว +8

      Mettupalayam is my town :)

    • @pnair78
      @pnair78 6 ปีที่แล้ว +3

      Prabakaran SK Super!

    • @navskrishnavskrish8176
      @navskrishnavskrish8176 6 ปีที่แล้ว +1

      Me too

  • @ArvindIyengar
    @ArvindIyengar 10 ปีที่แล้ว +120

    I just cannot believe that this Malaysia's voice. Usually a little rustic but this song brings out the lightness in his voice. The magic of Isaignani... melodious beyond words!

    • @kirubakannan8918
      @kirubakannan8918 7 ปีที่แล้ว +6

      Do listen to " Alli thandha boomi" from Nandu. You will change your opinion on Vasudevan's voice. May be a bit rustic, but the diction and pronunciation can never be excelled by anyone else.

    • @ArvindIyengar
      @ArvindIyengar 7 ปีที่แล้ว +3

      Yes I have listened to it and its is one of my favorite songs. Cheers.

    • @an7440
      @an7440 7 ปีที่แล้ว +7

      its a great loss that raja or msv did not use malaysia well.. personally feel that many of raja songs would have been that much better had they been sung by malaysia than spb or kjy...

    • @kmkrishnan08
      @kmkrishnan08 6 ปีที่แล้ว

      @@kirubakannan8918 true bro.. i was about to say.. thats his signature song

    • @madantheboss
      @madantheboss 6 ปีที่แล้ว +4

      Malaysia vasudevan has given greatest gems !!! Just listen to Poove illaya Ppove and get mesmerized!

  • @muthukumaranelumalai6945
    @muthukumaranelumalai6945 7 ปีที่แล้ว +67

    Tamil Cinema survived in 80's only Becoz of Raja sir.....many classics which no one could break it anymore....Tamil movies jeevan is Raja sir...Hats off sir

  • @rameshs4976
    @rameshs4976 2 ปีที่แล้ว +17

    இந்த பாடலை கேட்கும்போது, அந்த நுட்பமான இசையை கேட்கும்போது, எனக்கு தோன்றியது இதுதான். இது போன்ற பாடல்களுக்கு இசை அமைக்கும் முன், எத்தன இரவுகள் இசைஞானி தன் தூக்கத்தை கெடுத்து இது போன்ற இசையை சிந்தித்து இருப்பார்? அன்று அவர் கெடுத்து கொண்ட தூக்கம், அன்றும் இன்றும் பலருக்கு இன்பம் தரும் சொர்க்கம். வாழ்க இசைஞானி என்றென்றும்...

  • @MuthuMuthu-ji7em
    @MuthuMuthu-ji7em 5 ปีที่แล้ว +31

    இசை ராசாங்கம் என்பது இதுவே.... வயது கூடுவது குறித்த கவலை இந்த மாதிரி அருமையான பாடல்களை கேட்கும் போது வருகிறது.... நாட்கள் பின்னோக்கி நகராதோ இறைவா....

  • @premanandselvan5307
    @premanandselvan5307 4 ปีที่แล้ว +61

    Raja sir is actually scientists. He converted and expressed the Hiden human feelings in to music and songs. Raja sir is a special person who sent by God to us. Long live raja sir.

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 4 ปีที่แล้ว +69

    மலேசியா வாசுதேவன் கேரியரில் முக்கியமான பாடல்,இந்த பாடல் முடிந்த உடன் நண்டு திரைப்படதில் உள்ள அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா பாடல் கேளுங்கள் மிக அருமையாக இருக்கும்,,

    • @aarthysanthosh6773
      @aarthysanthosh6773 3 ปีที่แล้ว +1

      வேறு இது போன்ற பாடல்களை பரிந்துரைக்கவும்

    • @jaiganeshram26
      @jaiganeshram26 2 ปีที่แล้ว

      Alli thantha boomi ultimate song

    • @MrTamilselvi90
      @MrTamilselvi90 2 ปีที่แล้ว +1

      @@aarthysanthosh6773 பருவமே புதிய பாடல் பாடு
      படம் நெஞ்சத்தை கிள்ளாதே

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 2 ปีที่แล้ว

      அதுவும் மிக அருமையான பாடல்

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 2 ปีที่แล้ว

      இந்த பாடலும், அள்ளி தந்த பூமி பாடலும் ஒரே ராகம் போல தெரியுதே, உண்மையா.

  • @saralleon439
    @saralleon439 หลายเดือนก่อน +7

    This song is equal to more than 1000 Oscar awards.
    Raja is bliss ❤

  • @winstonpraveenkumar4959
    @winstonpraveenkumar4959 10 หลายเดือนก่อน +2

    Remarkable song ,high light music simply good Pratap pothen sir hats off acting and face expression

  • @somusundaram8029
    @somusundaram8029 6 ปีที่แล้ว +60

    நம் பள்ளி காலங்களை அப்படியே அள்ளி கொண்டு வரும் பாடல் எவ்வளவு தான் ஏங்கி தவித்தாலும் திரும்ப கிடைக்காத பொற்காலங்கள்

  • @yeknathy6404
    @yeknathy6404 3 ปีที่แล้ว +20

    ஏதோ ஒன்றை தேடும் நெஞ்சம் இங்கே கண்டேனே. ,🙏🏼🙏🏼🙏🏼
    அந்த காலம் போல வருமா ரசிகர்களே,,😭😭😭😭😭

  • @deepakprabhuarumugam2146
    @deepakprabhuarumugam2146 3 ปีที่แล้ว +44

    In the ending, That gradual rise in tempo with that acoustic and base guitar sound is really a master piece. Undoubtedly 10000% ILLAYARAJA is the music god. !!

    • @reubenabraham2111
      @reubenabraham2111 2 ปีที่แล้ว +5

      No doubt about it.. Lucky to have been born in this generation

    • @saravanankumar335
      @saravanankumar335 ปีที่แล้ว

      Agree with you 💯

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 5 ปีที่แล้ว +57

    1988 ல பொறந்தேன். 90's kid தான். ஆனா வயித்துல இருக்கும் போது இளையராஜா பாட்டு கேட்டதாலோ என்னவோ இந்த மாதிரி பாட்டு மேல தனி மரியாதை!
    இசைதேவன் 🙏🙏🙏

    • @brillit888
      @brillit888 4 ปีที่แล้ว +1

      Nanum sago 👌👌

    • @SGram-qd7ng
      @SGram-qd7ng 4 ปีที่แล้ว

      Same year.same feelings

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 4 ปีที่แล้ว +2

      மலேஷியா வாசுதேவனுக்கு குத்து பாடல்கள் மட்டும் தான் பாடத்தெறியும் பலரும் அதை மாற்றி யாதும் இசைஞானி தான்

    • @karthick5044
      @karthick5044 4 ปีที่แล้ว +1

      Bro Childhood 90s ah இருந்தாலே த் 90s kids தான்... 👍

  • @marimuthu-kv3tg
    @marimuthu-kv3tg 4 ปีที่แล้ว +27

    கோடைகால காற்றை கூட குளிர்கால காற்றாக மாற்றி நம்மை ரசிக்க வைத்தவர் இளையராஜா. அருமையான பாடல்.

  • @janardhanan40
    @janardhanan40 2 ปีที่แล้ว +4

    70 களில் என் மனது காயங்களுக்கு மருந்து தந்தார் 80 களில் தந்தார் 90 களில் தந்தார் 2000 & 2020 யிலும் தந்தார் இப்பவும் தந்து கொண்டே இருக்கிறார் ...பத்து பைசா கூட வாங்காமல் நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் ஐய்யா ...எங்கள் ராஜா இசைகடவுளே..நீவிர் வாழ்க..உங்கள் குலம் வாழ்க...உங்கள் ரசிகர்களும் வாழ்க...

  • @tamilvetri7493
    @tamilvetri7493 2 ปีที่แล้ว +31

    நெஞ்சை விட்டு அகலாத இந்த பாடல் இருக்கும் வரை பிரதாப் போத்தன் நினைவு என்றும் இருக்கும். Rest in peace sir😞

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻

    • @DurgaramProfDhawan
      @DurgaramProfDhawan 2 ปีที่แล้ว

      பிரதாப் அவர்கள் ஆன்மா சாந்தி பெறட்டும் இறைவன் நிழலில்🙏

  • @anbuk8173
    @anbuk8173 3 ปีที่แล้ว +15

    உலகமே அழிந்தாலும் இந்த பாடல் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்..
    உலக இசைகளின் ஒட்டு மொத்த சொந்தகாரர் நம் ராஜா சார் அவர்கள்

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e หลายเดือนก่อน +2

    நான் வானமாய் அந்த நிறங்கள் நோக்க❤❤ நீ என் வாசனை தோட்டத்தின் பூப்பறித்தாய்🎉🎉 அந்த தென்றல் நிலவிலே சுப ஜோதியை நாம் ஏற்போமா❤❤ விடியல் தந்த ஆசை பூவின் மின்னல்களில் மோகமாய் வளர்வோம்❤❤ நீ வா வா அன்பே💘💖💘

  • @shriramr8695
    @shriramr8695 2 ปีที่แล้ว +24

    How can someone give songs like Kodai Kaala katre, Poonthalir aada, Aanandha raagam and Rerecording for free Unless his name is Maestro Ilaiyaraaja. GOD of MUSIC.

  • @frdharish
    @frdharish 5 ปีที่แล้ว +35

    எண்பதுகளில் திருச்சியில் பள்ளி பருவம் ஞாபகம் வருகிறது. பொன்மலையிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வரை குறைந்த பட்சம் 3 அல்லது 4 தடவையாவது இந்த பாடல் ஒலிக்கும்.

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 2 ปีที่แล้ว +19

    How can he even imagine these kind of tunes. The structure of the song, the backing by a variety of instruments, the interludes - ahaa ! Ahaa ! . This man is God's gift

  • @Yogamn2227
    @Yogamn2227 4 ปีที่แล้ว +13

    என்ன ஒரு சுகம்...மனம் அப்படி ஒரு அமைதி கொள்கிறது...💛💛 இளையராஜா பித்தன் நான்

    • @thiruthamizh5563
      @thiruthamizh5563 3 ปีที่แล้ว

      I am also

    • @babuta1310
      @babuta1310 3 ปีที่แล้ว +1

      நாங்க மட்டும் என்னவாம்

  • @austinstunner3601
    @austinstunner3601 5 ปีที่แล้ว +13

    ஆஹா!! மலேஷியா வாசுதேவனின் குரல் 80களின் சிம்ம சொப்பனம், என்றென்றும் ராஜாவின் மிகவும் பிடித்த பாடகர்....

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 ปีที่แล้ว +19

    அருமையான பாடல். அந்த காலத்துக்கு மனது போகிறது. மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்றும். 👏 👏 👏 👏 👏 👏

  • @rajrajan51
    @rajrajan51 4 ปีที่แล้ว +48

    Malaysia the underrated legend.
    He deserves more

    • @kamleshtm
      @kamleshtm 3 ปีที่แล้ว +3

      He is not Underated boss..

  • @guitarjohnson1969
    @guitarjohnson1969 11 ปีที่แล้ว +66

    i am listening this 150 th time,,,,,what a lovely musical arrangement...thanks raja sir...

  • @vijaym8216
    @vijaym8216 5 ปีที่แล้ว +55

    ஒரு சமீபத்திய பேட்டியில் வாசு சார் சொன்னது "இது இவரோட முதல் படம் பட்ஜெட் 5 லட்சம் ராஜா சாரோடசம்பளம் 1 லட்சம், இவங்க எவ்வளவு தூரம் கேட்டும் ராஜா சார் கடைசியில் சொல்ரனு சொல்லிட்டாராம் படத்தோட பாடல் முடிஞ்சு ரீரெகாடிங் அப்பதன் இவங்க ரொம்ப தயங்கி தயங்கி எவ்வளவு சம்பளம் சார்னு கேட்டாங்களாம், அப்ப தான் ராஜா சார் முதல் படம் பண்றீங்க அதனால ப்ரீ சொன்னாராம்

    • @kuralarasuvenkataraman7324
      @kuralarasuvenkataraman7324 4 ปีที่แล้ว +4

      இளையராஜா இவ்வளவு நல்லவரா

    • @gobinathansubramaniam6827
      @gobinathansubramaniam6827 4 ปีที่แล้ว

      Enaku puriyile bro. Yaaravathu explain pannungelen.

    • @muruganc2370
      @muruganc2370 4 ปีที่แล้ว +1

      @@gobinathansubramaniam6827 yes அவர் கெட்டவர் இல்லை.

    • @dhananjeyanmadhana4378
      @dhananjeyanmadhana4378 4 ปีที่แล้ว

      Rajnikaga vasu ready panna character rajini vasuvidam ithu directer padamaga varanumnu anba nadikka marutthapadam apram pradhappothan naditthar

    • @tamilsamy2525
      @tamilsamy2525 4 ปีที่แล้ว

      yes it s true sir

  • @RAVICHANDRAN-di5lb
    @RAVICHANDRAN-di5lb 5 ปีที่แล้ว +70

    Who noticed base guitar ,what a perfect rhythm .

    • @KausikKumaar
      @KausikKumaar 5 ปีที่แล้ว +4

      bass melody is highlight of raja

    • @rajendrannair7581
      @rajendrannair7581 3 หลายเดือนก่อน

      Main attraction is the base Guitar.... My favorite

    • @rajendrannair7581
      @rajendrannair7581 3 หลายเดือนก่อน

      When i was in the army, i used to sing this song in the gatherings in our unit.... One of my favorite song

  • @nayanavinston399
    @nayanavinston399 7 ปีที่แล้ว +37

    என்ன பாட்டுடா 😍😍😍😍 எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்ல ❤❤ இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் எங்கோ ஒரு புது உலகத்திற்குள் பயணம் போவது போன்று இனம் புரியாத விவரிக்க முடியாத ஓர் அழகிய உணர்வு❤😍😍 சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாடலின் அழகை வருணிக்க ஆஹா.....❤❤

  • @sivaforutube
    @sivaforutube 6 ปีที่แล้ว +401

    Anybody in 2018? Anybody in 2019? Anybody in 2020? Anybody in 2021? Anybody in 2022? Anybody in 2023?
    இந்த எலேச்டின் டைம் ல செவுத்துல எழுதுவான் பார்
    ALL RESERVED DMK 2018 அந்த மாதிரி இருக்கு . Proudly born in the 1970s Produly childhood in 1980s. Proudly teenage in 1990s. Proudly Professional in 2000s

    • @RoadTales
      @RoadTales 5 ปีที่แล้ว +8

      appa kadasila namma aalu oruthar.. cheers

    • @sathishk8249
      @sathishk8249 5 ปีที่แล้ว

      Good

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 5 ปีที่แล้ว +1

      உள்ளேன் ஐயா 🙋

    • @arunkumaar6039
      @arunkumaar6039 5 ปีที่แล้ว +4

      I am from 2050. Trust me, still this song is too good.

    • @anandansps2386
      @anandansps2386 5 ปีที่แล้ว +1

      till death ...

  • @ashokstrm
    @ashokstrm 3 ปีที่แล้ว +22

    Most beautiful combination of memorable music, poignant emotions, breezy Ooty, pristine teen love, all in the frame of friendly, caring teacher, school in the hills, presented on Ilayaraja's cool masterpiece. Always calming to to wind down the day. Thank you 80s.

  • @sasikumar3936
    @sasikumar3936 8 ปีที่แล้ว +57

    இந்த படம் பன்னீர் புஷ்பங்கள் அலைகள் ஒய்வதில்லை வந்த பொழுது அப்போது இந்த படமும் வெளிவந்தது. இருந்த போதும் படம் இப்படத்தின் பாடல்களுக்காகவே பல நாட்கள் திரையில் ஒடியது.

    • @mohan1771
      @mohan1771 5 ปีที่แล้ว +1

      இரு படங்களும் வெள்ளி விழா படங்கள்

    • @ferozkhan8182
      @ferozkhan8182 5 ปีที่แล้ว

      Hi Sasi, the song is amazing but the Movie was Outstanding and is relevant even now!!!

  • @Vinothkr-zr4hs
    @Vinothkr-zr4hs 3 ปีที่แล้ว +4

    இந்த பொக்கு வாயன எல்லாம் நாம பார்க்கிறோம் என்றால் அது ராஜா இசையின் இனிமை தான்...

  • @Vishu95100
    @Vishu95100 2 ปีที่แล้ว +55

    Paying deep tributes to the memories of Pratap Pothen sir, who died suddenly today (15-07-2022)...

  • @pradeepb232
    @pradeepb232 7 ปีที่แล้ว +85

    Im a big fan of ar.rahman sir, still not able to resist myself listening to raja sir's melodies before sleep

    • @MPJANA
      @MPJANA 6 ปีที่แล้ว +12

      அது தான் ராஜாவின் இசையின் மகத்துவம்.மற்றவர் இசைக்கும் ராஜாவின் இசைக்கும் உள்ள வித்தியாசம்.

    • @SSS999zyz
      @SSS999zyz 5 ปีที่แล้ว +11

      Yes, Iam also ARR fan..but after hearing many of IR's songs ...I realised IR is a great legend and oozes brilliance...

    • @SSS999zyz
      @SSS999zyz 4 ปีที่แล้ว +4

      @: Human Monster : Thats a great defence of Raja Sir indeed. Ofcourse, after hearing many of his songs in recent years, I do agree Ilayaraja Sir is a great legend and also bordering on being a musical GOD indeed....

    • @prasannaleo002
      @prasannaleo002 3 ปีที่แล้ว +3

      Iam also fan of shri. Rahman but shri. Illayaraja is hundred steps ahead of composer In India....

  • @jayanthibalaraman5288
    @jayanthibalaraman5288 3 ปีที่แล้ว +3

    கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
    அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
    இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
    கோடை கால ...
    வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
    வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
    தன் உணர்வுகளை மெல்லிசையாக
    நம் உறவுகளை வந்து கூடாதோ
    திரு நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆளட்டும்
    இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
    கோடை கால ...
    ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
    ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
    பெண் மலையருவி பன்னீர் தூவி
    பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
    இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
    இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
    கோடை கால ...

  • @aktharsai
    @aktharsai 4 ปีที่แล้ว +50

    Anybody in 2020 longing for a trip with friends with a song like this after the corona pandemic is over..

  • @ജീവചിത്രം
    @ജീവചിത്രം 4 ปีที่แล้ว +17

    For those listening in 3030. I was so blessed to have lived in an age with this magic

  • @zerosandones7719
    @zerosandones7719 6 ปีที่แล้ว +42

    I don't have music knowledge. But I think illayaraja sir had best used western music that is so divinely melody.
    The genius illayaraja sir is TRULY INTERNATIONAL before the Great RAHMAN SIR.

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 3 ปีที่แล้ว +3

    என்ன தான் நான் இக்கால கட்டத்தில் வரும் இசையை கேட்டாலும். இளையராஜா ஐயா பாடலே திருப்தி தருகிறது. இக்கால பாடல் உணவு என்றால் இளையராஜா ஐயா பாடல் குடிநீர் போன்றது. நீரின்றி அமையாது உலகு. 🔥

  • @shameemshahul323
    @shameemshahul323 4 ปีที่แล้ว +7

    மலேசியா வாசுதேவன் sir பாடல் என்று தோணுகிறது குரல் வளத்தில் பாடல் இனிமை

  • @aravindanr7872
    @aravindanr7872 2 ปีที่แล้ว +3

    உலகம் தமிழ் இருக்கும் வரை இசைக்கடவுளின் பாடல்கள் இசைக்கும்

  • @pnair78
    @pnair78 5 ปีที่แล้ว +25

    What a composition! As a Malaysian I am super happy that Malaysia Vasudevan was given an opportunity to sing this masterpiece song!

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 5 ปีที่แล้ว +2

      He has sung so many masterpieces like this.. The most versatile singer 😍

  • @1230abcxyz
    @1230abcxyz 9 ปีที่แล้ว +93

    Can die for this song :-) Heavenly, reminds me of my high school...those were the best days of my life...

    • @marshallislandsg5630
      @marshallislandsg5630 8 ปีที่แล้ว +5

      Take it easy. People say these things on the internet all the time.

    • @kirubakannan8918
      @kirubakannan8918 7 ปีที่แล้ว +2

      just shut up and behave in a public forum

    • @jackknife6637
      @jackknife6637 7 ปีที่แล้ว +1

      Wat a song soul capturing song u are bless by vidya vani man i dont know wat to say no music director can win u but can copy your tunes and can make music that is wat they can do miss that 80s era gifted to be born as tamilian and proud to be rajas fan

  • @BooksReview90
    @BooksReview90 4 ปีที่แล้ว +11

    I'm 1998 bron but i love Malasiya Vasudevan sir voice addicted i love 80s song's

  • @manivignesh2878
    @manivignesh2878 ปีที่แล้ว +2

    கடவுளே திரும்ப அந்த 80S நாட்களை திரும்ப கொடு. இந்த 40 ஆண்டுகளில் மறைந்த எங்கள் நண்பர்களையும் நாங்கள் வாழ்ந்த வாழ்கையும் திரும்ப கொடு 😢😢😢

  • @746naga
    @746naga 6 ปีที่แล้ว +10

    அருமையான பாடல் அரசு பள்ளி வேப்பமரத்தடி வானொலியில் வலம் வரும் போது கிடைக்கும் ஆனந்தம் .அருமை பசுமை நினைவுகளை அள்ளி தருகின்றன

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 10 หลายเดือนก่อน +2

    Magician of Tamil cinema music.mass yar

  • @tsbalaji1993
    @tsbalaji1993 5 ปีที่แล้ว +7

    எப்பிட்ரா இப்படி சூப்பர் கம்போஸிங் பண்ண முடியுது. செம. செம.

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 5 ปีที่แล้ว +1

      Athan Raja ✌

  • @RoadTales
    @RoadTales 5 ปีที่แล้ว +4

    பள்ளி கால கிருஷ் வகைப்படும் காதலை மிக துல்லியமாக சொன்ன படம். சந்தானபாரதி மற்றும் பி வாசு இணைந்து இயக்கிய இந்த கல்ட் படத்திற்கு உயிர்நாடி ஞானியின் இசை, பாடல்கள் மற்று பின்னணி வேற லெவல்.

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan6090 11 ปีที่แล้ว +62

    Listen to that soul touching instrument ( comes and goes) along with the lines...."mellisayale" in 1st sharana and "malaiaruvi" in 2nd sharanam! Just comes and goes and leaves a lasting impact! and voice of Malaysia Vasudevan sir ! The song is delivered in a "Ujjayaini swaasa", the combination of throat , nose and abdomen! so effortless! beyond times! everlasting!

    • @ArvindIyengar
      @ArvindIyengar 10 ปีที่แล้ว +2

      beautiful description!

    • @Rajendranization
      @Rajendranization 9 ปีที่แล้ว +7

      Karthi Karthikeyan Thanks for the description..I noted that point..Excellent..Raja gave importance to all sort of instruments..You should know where and when to use..Exceptional! Great musician ahead of time!

    • @palarasanrajendran6273
      @palarasanrajendran6273 6 ปีที่แล้ว +1

      Lol

  • @sureshinba8914
    @sureshinba8914 5 ปีที่แล้ว +2

    நான் பள்ளிக்கூடம் போகும் போது என் தந்தை என்னிடம் சொன்னதை நான் என் மகனிடம் சொன்னேன் நான் இறக்கும் போதும் இந்த பாடலை இராஜ இசையை நுகர்ந்தவாரே மரிக்கவேண்டும்

  • @suthakar7657
    @suthakar7657 7 ปีที่แล้ว +58

    குயிலினும் இனிமை வாசுதேவன்.😘😘😘

  • @venkatesanarun7054
    @venkatesanarun7054 3 ปีที่แล้ว +4

    பாடல்......😍😍😍 ஊட்டி பனி காற்றினிலே என் மனம் கனக்கிறது...

  • @subramaniammohan7048
    @subramaniammohan7048 11 ปีที่แล้ว +23

    The soft chorus in the background is amazing. Especially the crescendo accompanying "imaigalila malaippookkale" and the gradual tapering down! It takes but an Ilayaraja to visualise this. Quite beyond ordinary mortals!

  • @bobyprasannas3929
    @bobyprasannas3929 2 ปีที่แล้ว +19

    இவ்வளவு அருமையான இசையை கொடுத்த இசைஞானி இந்த படத்திற்கு ஒரு பைசா கூட வாங்காமல் இசை அமைத்துக் கொடுத்து உள்ளார் 😊

    • @sriramv3961
      @sriramv3961 2 ปีที่แล้ว

      is it?

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 2 ปีที่แล้ว

      இளையராஜா இந்த படத்திற்கு சம்பளம் வாங்கினாரா, இல்லையா தெரியல. ஆனால் முதல் மரியாதை படத்துக்கு சம்பளம் வாங்கவில்லை.

    • @MPJANA
      @MPJANA ปีที่แล้ว

      இந்த படத்திற்காக பணம் வாங்கவில்லை என இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான பி.வாசு ஒரு பேட்டியில் கூறினார்.

  • @MrAnbuji369
    @MrAnbuji369 6 ปีที่แล้ว +22

    வாவ்...என்னா பாட்டுடே!! அருமை அருமை...

  • @ravikumargeetha9363
    @ravikumargeetha9363 4 ปีที่แล้ว +9

    என்றும்இனிமை இதுதான் இளையராஜா

  • @kaleeswarank9798
    @kaleeswarank9798 6 ปีที่แล้ว +53

    im 2000 born kid..I love ilayaraaja Songs...😍😍😍

  • @venky652003
    @venky652003 8 ปีที่แล้ว +47

    in illayaraja sir's music silence is also used as an instrument, what a genius !

  • @m.bhavatarini5074
    @m.bhavatarini5074 3 ปีที่แล้ว +6

    Malaysia Vasudevan sir + illairaja sir combo😇💙

  • @vinuvenkatesh1888
    @vinuvenkatesh1888 20 วันที่ผ่านมา

    I would say ilaiyaraja sir when I young as I am too much impressed by his songs even now and ever.
    One time my neighbor asked me y are you saying ilaiyaraja sir? It is a respect I am giving to my school sirs I replied.

  • @lancedenny66
    @lancedenny66 6 ปีที่แล้ว +11

    Underrated song of ilayaraja. I don't know why people don't like this song. But If you are going to any hill stations in a bus hear to this. Or when you are sitting with your friends in rooftop at night at cold climate hear this. Then you will realise

    • @thedam8745
      @thedam8745 2 ปีที่แล้ว

      I don't think ppl don't like this song but it may be underrated n it's true that u get vibe completely as if ur in some hill station even without hitting that place by just listening the tune n lyrics

  • @venkateshwara691
    @venkateshwara691 2 ปีที่แล้ว +1

    இளையராஜா ஐயா இருக்கும் இந்த உலகில் நாம் இப்போது இருப்பதற்கே நாம் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்... வாழும் இசை கடவுள் 🙇🙏

  • @karthick5044
    @karthick5044 7 ปีที่แล้ว +87

    who else have used background humming better than Ilayaraja...
    his songs are so unique... Wonderful creations.

    • @ganalist1pathi695
      @ganalist1pathi695 5 ปีที่แล้ว +3

      மலேசசியவாசுதேவன்குரல்இனிமை

    • @namburikrishna1765
      @namburikrishna1765 5 ปีที่แล้ว +7

      never . . . .no one better than Raja sir

    • @namburikrishna1765
      @namburikrishna1765 5 ปีที่แล้ว +6

      Back ground humming . . . . . .Superrrrrrrr

  • @sktt6023
    @sktt6023 9 ปีที่แล้ว +48

    MV rocks what a male voice. RIP Sir! Ofcoz credits goes to my music god the one and only maestro.

    • @muthukumarappa715
      @muthukumarappa715 6 ปีที่แล้ว +2

      bodily he had gone his golden lives with us

    • @bosscrrrrksh
      @bosscrrrrksh 4 ปีที่แล้ว

      Bad

    • @sktt6023
      @sktt6023 4 ปีที่แล้ว

      @@bosscrrrrksh
      Sure you can do it much better 😜

  • @chitrasuresh2991
    @chitrasuresh2991 3 ปีที่แล้ว +3

    Proud to have watched Martina Navaratilova, Stephy Graph,Margazhi loud speaker songs,walking freely in Luz, happy to have selfless friends,friends add these also

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 2 ปีที่แล้ว

    தமிழில் ஆகச்சிறந்த உச்சரிப்போடு பாடிய ( இசைஞானி இளையராஜா அவர்களின் இசை சாம்ராஜ்யத்தில்...) ஒரே பாடகர் திரு. மலேசியா வாசுதேவன் அவர்கள் மட்டுமே என்பது என் தாழ்மையான தனிப்பட்ட கருத்து....

  • @anandamuralisrinivasapadma4621
    @anandamuralisrinivasapadma4621 10 ปีที่แล้ว +45

    Miss U Malaysia. Isaignani Dhool.

  • @successmedia8160
    @successmedia8160 3 ปีที่แล้ว +1

    தமிழ் உலகம் முழுவதும் பரவ இளையராவக்கே முக்கிய பங்கு, அதற்கு இந்த பாடலே சாட்சி

  • @sudharsensusa5130
    @sudharsensusa5130 4 ปีที่แล้ว +9

    பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : கோடைக்கால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு
    தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே
    குழு : லா…லா….ள….லல லா…..
    ஆண் : சுகம் கோடி காணட்டும்
    குழு : லா…லா….ள….லல லா…..
    ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : புதுச்சோலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
    குழு : லா லால லா….லா….
    லல ல…. லாலால லாலா….
    லலல லா…..லா ….லா…..
    லாலா…..லல லா….லாலா…..லல லா…..
    ஆண் : வானில் போகும் மேகம் இங்கே
    யாரைத் தேடுதோ
    வாசம் வீசும் பூவின் ராகம்
    யாரைப் பாடுதோ
    தன் உணர்வுகளை மெல்லிசையாக
    நம் உறவுகளை வந்து கூடாதோ
    ஆண் : திருநாளும் கூடட்டும்
    சுகம் தேடி ஆடட்டும்
    இவைகள் இளமாலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : புதுச்சோலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    ஆண் : கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
    குழு : லா….லலல….லல….லல…..லல…..லல
    லா….லா….லா….லா….லா….லா….
    லலலல லா…..லா….லா….
    லல்லா….லா….லா….லா….
    லலலல…..லா….லா….லா….லல லா…..
    ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும்
    நெஞ்சம் இங்கே கண்டதே
    ஏங்கும் கண்ணில் தோன்றும்
    இன்பம் இங்கே என்றதே
    ஆண் : வெண்மலை அருவி
    பன்னீர் தூவி
    பொன்மலை அழகின்
    சுகம் ஏற்காதோ
    ஆண் : இவை யாவும் பாடங்கள்
    இனிதான வேதங்கள்
    இவைகள் இளமாலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : புதுச்சோலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : கோடைக்கால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு
    தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே
    குழு : லா…லா….ள….லல லா…..
    ஆண் : சுகம் கோடி காணட்டும்
    குழு : லா…லா….ள….லல லா…..
    ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : புதுச்சோலை பூக்களே
    குழு : லலல லல லல லல லல லா
    ஆண் : கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish ปีที่แล้ว +2

    நாமெல்லாம் இந்த காலகட்டத்தில் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 🥺😫🤗

  • @BastinKanjirappallyUK
    @BastinKanjirappallyUK 2 ปีที่แล้ว +6

    In this song Raja sir filled snow, agony, nostalgia, love, traveling Saul all....Great how can he create such a melodious song??

  • @RamanSankara
    @RamanSankara 2 หลายเดือนก่อน +1

    உணர்வுகளை மெல்லிசையால் விவரிப்பவர் இசைஞானி இளையராஜா.

  • @ramanathanraju4694
    @ramanathanraju4694 3 ปีที่แล้ว +9

    Maestro scored free of cost for debutant P Vasu and santhana Bharathi hats off to Maestro 💐💐💐💐👑👑👑

  • @renganathancr8237
    @renganathancr8237 3 ปีที่แล้ว +1

    மலேசியா வாசுதேவனின் மென்மையான பாடல்கள் குறைவுதான்.அதில் முதல் இடம் இந்தப்பாடல்தான்,இரண்டாவது அள்ளித்தந்ந பூமி என்ற பாடல்.ஏனோ தெரியவில்லை இசை அமைப்பாளர்கள் அவருக்கு ஏன் இந்த மாதிரி பாடல்கள் அவருக்கு தரவில்லை என்று மனம் சங்கடப்படுகின்றது.