009-SURAH AT THAUBA(REPENTANCE)-அத்தவ்பா - மன்னிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • அத்தியாயம் : 9 அத்தவ்பா
    மொத்த வசனங்கள் : 129
    அத்தவ்பா - மன்னிப்பு
    117, 118 ஆகிய இரு வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், ஹிஜ்ரத் செய்து வந்தவர்களையும், அடைக்கலம் தந்து உதவியவர்களையும், குறிப்பாக தபூக் யுத்தத்தில் பங்கெடுக்காத மூன்று நபித்தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாகக் கூறுகிறான். ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே பாவமன்னிப்பு வழங்கியது பற்றி இந்த அத்தியாயம் பேசுவதால் இந்த அத்தியாயத்திற்கு 'அத்தவ்பா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
    ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்'' என்ற பொருள்படும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்ற சொற்றொடர் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அந்தச் சொற்றொடர் அமைக்கப்படவில்லை.
    இதற்குப் பலரும் பலவிதமான காரணங்களையும், தத்துவங்களையும் கூறுகின்றனர்.
    இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் கடும் கோபத்தை வெளிப்படுத்தும் வசனங்களைக் கூறியுள்ளான். எனவே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன் என்று அல்லாஹ்வைப் புகழும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்பது எழுதப்படவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
    இந்தக் காரணம் உண்மைக்கு மாற்றமாக உள்ளது. அல்லாஹ்வின் கோபத்தை வெளிப்படுத்தும் வசனங்கள் இந்த அத்தியாயத்தில் மட்டுமின்றி இன்னும் பல அத்தியாயங்களிலும் உள்ளன. அந்த அத்தியாயங்கள் அனைத்திலும் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்பது எழுதப்பட்டே உள்ளது.
    மேலும் கோபத்தை வெளிப்படுத்தும் வசனங்கள் இருப்பதால் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று சொல்லக் கூடாது என்பது சட்டமில்லை. அல்லாஹ் எப்போதும் அளவற்ற அருளாளன் தான். நிகரற்ற அன்புடையோன் தான். அது எந்தக் காரணத்துக்காகவும் மாறாது.
    மேலும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வின் கோபத்தை வெளிப்படுத்தும் வசனங்கள் மட்டுமின்றி அல்லாஹ்வின் அருளையும், மன்னிப்பையும் கூறும் வசனங்களும் உள்ளன.
    அல்லாஹ் பலரை மன்னித்ததைக் கூறும் வசனங்கள் இந்த அத்தியாயத்தில் இருப்பதால் தான் இந்த அத்தியாயத்துக்கு அத்தவ்பா - மன்னிப்பு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    எனவே பிஸ்மில்லாஹ் என்பதை இதன் துவக்கத்தில் எழுதாமல் போனதற்கு இது காரணமாக இருக்கவே முடியாது.
    அல்லாஹ் இக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதால் யாருடைய விருப்பத்தின்படியும் குர்ஆனில் எந்த மாற்றமும் செய்திருக்க முடியாது. அபூபக்ர் (ரலி) அவர்களோ, உஸ்மான் (ரலி) அவர்களோ திருக்குர்ஆனில் உள்ள எந்த ஒன்றையும் எழுதாமல் விட்டிருக்க மாட்டார்கள். குர்ஆனில் இல்லாததை எழுதியும் இருக்க மாட்டார்கள்.
    உஸ்மான் (ரலி) அவர்கள் பிரதி எடுத்தபோது அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதவில்லை.
    அவர்கள் மூலநூலாக வைத்திருந்த அபூபக்ர் (ரலி) தொகுத்த திருக்குர்ஆனில் இந்த அத்தியாயத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதப்படாமல் இருந்திருக்க வேண்டும்.
    அபூபக்ர் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனின் எழுத்தர்கள் எழுதி வைத்திருந்த பிரதிகளின் அடிப்படையில்தான் திருக்குர்ஆனைத் தொகுத்தனர். அந்தப் பிரதிகளில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதப்படாமல் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அதை அபூபக்ர் (ரலி) அவர்களும் எழுதாமல் விட்டிருக்க வேண்டும்.
    திருக்குர்ஆனை அல்லாஹ்வே பாதுகாத்துள்ளான்; அதில் மனித விருப்பத்துக்கு இடமில்லை என்பதால் இதுவே சரியான கருத்தாகும்.
    Chapter - 9
    AT -TAWBAH - Repentance
    Total verses: 129
    Allah says in the verses 117 and 118 that He has forgiven the leader of the prophets (peace be upon him), those who have come doing ‘hijra’, those who helped by giving refuge and in particular the three companions of the prophet who have not taken part in the battle of ‘Tabuk’. As this chapter speaks about the forgiveness given to the whole mankind, this chapter is named ‘At-Tawbah’.
    The other speciality about this chapter is the word-structure found in the beginning of each chapter, “Bismillahir-Rahmanir-Raheem” meaning, “In the name of Allah the most Beneficent and the most Merciful” is not found in the beginning of this chapter. Many persons have given various reasons and philosophies about this. Usman(Rali), the third president ( Khalifa) of the Islamic empire, who made the copy of the Holy Quran gave the following reason.
    He says, “I think that the ninth chapter and the eighth chapter in the Holy Quran may be only one (a single) chapter. Both the chapters convey the same matter. Hence, I have left ‘Bismillahir-Rahmanir-Raheem’ in the beginning of the nineth chapter.”
    In addition, while mentioning about this he also says, “The prophet (peace be upon him) used to call the scribes to write down immediately whenever a chapter was revealed. He will also point out where and in which chapter should the verse be placed. In this case he (messenger) has not mentioned whether these two chapters are two different chapters or they are only one chapter. So, I have not included Bismillahir-Rahmanir-Raheem.”
    Eventhough, there is difference of opinion about the authenticity of this matter, there is no difference of opinion that ‘Bismillahir-Rahmanir-Raheem’ was not written in the beginning of this chapter.
    009-SURAH AT THAUBA(REPENTANCE)-அத்தவ்பா - மன்னிப்பு
    #SURAHATTAWBAH #TAMILQURAN #QURANVIDEO

ความคิดเห็น • 5

  • @mohammedfazan-q7q
    @mohammedfazan-q7q 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 2 หลายเดือนก่อน +1

    ‏ إن الله وملائكته يصلون على النبي
    يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
    ٰاللهُّم صلِّ و سلّم على نبينا محمّد ﷺ

  • @abdullahthaseem6209
    @abdullahthaseem6209 2 หลายเดือนก่อน +1

    ❤❤🎉🎉

  • @Saleemmalik-f3b
    @Saleemmalik-f3b 3 หลายเดือนก่อน +1

    Allahu akbar

  • @AsiffYoosuf
    @AsiffYoosuf 6 หลายเดือนก่อน

    Allah hu Akbar