Natula Pass - சிக்கிம் சுற்றுலா India China Border Tour குறைந்த செலவில் குடும்பத்தினருடன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • நாதூ லா கணவாய்:-
    Gangtok Local Sightseeing Video link:-
    நாதூ லா கணவாய் என்பது இமயமலையில் உள்ள ஒரு கணவாய். இது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பண்டைய பட்டுப்பாதையின் ஒரு பகுதி. திபெத்திய மொழியில் நாதூ என்றால் கேட்கும் காதுகள் என்றும் லா என்றால் கணவாய் என்றும் பொருள். இக்கணவாய் சிக்கிமின் தலைநகரான கேங்டாக்கில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியர்கள் மட்டுமே இக்கணவாய்க்குச் செல்ல முடியும். அவர்களும் செல்வதற்கு முன்பு அனுமதிச்சீட்டு பெற்றே செல்ல வேண்டும்.
    Tsomgo ஏரி:-
    சாங்கு ஏரி என்றும் அழைக்கப்படுகிறது, இது கட்டுக்கடங்காத மலைகளின் மிக உண்மையான படத்தை வழங்குகிறது 12,400 அடி உயரத்தில் உள்ள இந்த ஏரி ஆண்டு முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும். ஏரிக்கரை ஆகும் வசந்த காலத்தின் பிற்பகுதியில் பூக்கும் பூக்களால் மூடப்பட்டிருக்கும் போது அது குளிர்காலத்தில் திடமாக உறைகிறது. யாக் சவாரி என்பது சுற்றுலாப் பயணிகள் மறக்க முடியாத ஒரு அனுபவம். குளிர்காலத்தில் உறைந்த ஏரியில் நீங்கள் யாக் சவாரி செய்யலாம், மேலும் இது அனைவருக்கும் ஒரு சிறந்த வடகிழக்கு சுற்றுலா இடமாகும். நீங்கள் Tsomgo ஏரியை அடையலாம்
    பாபா ஹர்பஜன் சிங் கோவில்:-
    வீரமரணம் அடைந்தும் எல்லையை காக்கும் வீரர் பாபா ஹர்பஜன் சிங்
    இந்திய சீன எல்லையில் அமைந்திருக்கும் நாதுலா என்ற கணவாயை இன்று வரை சீனாவிடமிருந்து பாதுகாத்துவருவதும், சீன வீரர்களை நடுங்கவைத்துக்கொண்டிருப்பதும் எது தெரியுமா?
    சாதாரண இந்திய சிப்பாய் ஒருவரின் ஆவி.(அவ்வாறு தான் கூறுவார்கள்.அந்த பகுதிக்கு வேலைக்கு செல்லும் வீரர்கள் இவரை வணங்காமல் செல்லமாட்டார்கள்) அந்த ஆவிக்குச் சொந்தக்காரர் ‘பாபா ஹர்பஜன் சிங்’. இங்குள்ள இராணுவ வாகனங்களில் எல்லாம் இவருடைய படத்தினைக் காணலாம். ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1946-ஆம் ஆண்டு தற்போதைய பாகிஸ்தானில் உள்ள குஜ்ஜார்வாலாலில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.
    இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்டில் 23-வது பட்டாலியனில் சேர்ந்தார். .1968-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி பனிச்சரிவில் மரணம் அடைந்தார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அந்நிலையில், வீரர் ஒருவரின் கனவில் தோன்றிய ஹர்பஜன் சிங், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கின்றது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார்.காணாமல் போய் நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அவர் வீரமரணம் அடைந்த போது அவருக்கு வயது 22 தான்.நல்ல பக்தியுடைய நல்ல மனிதர் அவர்.
    இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.இரவில் வெள்ளை உடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்பஜன் சிங் மீது பயம் கலந்த பக்தி இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் நாதுலாவில் அவருக்கென ஆலயம் கட்டி வழிபட்டனர். (சீன வீரர்களும் அங்கு ஹர்பஜன் சிங்கை வழிபடுகின்றனர்.) வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் வரிசையாக உள்ளன. அதில் மத்திய அறையில் அவர் படம் மாட்டப்பட்டுள்ளது. அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கோவில் போன்றே தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
    வலது புற அறையானது அவரது அலுவலமாகும். அங்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அவர் அங்கு அமர்ந்து தனது அலுவலக வேலைகளை பார்ப்பதாக கூறுகிறார்கள். இடது புற அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் அவருடைய பூட்ஸ்-க்கு பாலீஷ் அவரே செய்வதாக கூறப்படுகிறது. படுக்கை விரிப்பும் நன்கு விரித்து வைக்கப்படுகின்றது. மறுநாள் காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி இருக்கும். விரித்துவைத்தப் படுக்கை கலைந்து இருக்கும்.
    ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண்ணயர்ந்து தூங்கி விட்டால், அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு. ஹர்பஜன் சிங் தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீரர்கள் நினைத்ததால், அவர் இறந்ததைப் பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாததால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது இந்திய இராணுவம்.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் இரயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்குக் கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். இரயில் படுக்கையில் அவர் படுக்கை விரிக்கப்படும். அவருக்குத் துணையாக மூன்று வீரர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் இந்தப்பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அந்தப்பெட்டியை வாங்கிக்கொண்டு நாதுலா திரும்புவார்கள். ஆவியான இவருக்கு கெளரவ கேப்டன் பதவியும், பின்னர் கெளரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது.
    நாதுலாவில் இருக்கும் போர் நினைவிடத்தில், முதலாவதாக இவரது பெயரையே பொறிக்கப்பட்டுள்ளது.பாபா ஹர்பஜன் சிங் பெட்டிப் படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவருடைய கிராமத்தில் விழா எடுக்கின்றார்கள். இந்தியா-சீனா எல்லைப்பகுதி வீரர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள்.
    ஹர்பஜன் சிங் சொல்லை மீறி செயல்பட எந்த படைவீரரும் தயாராக இல்லை.
    நாதுலா மட்டுமல்ல, வடக்கு சிக்கிம்மில் உள்ள இராணுவத்தினரும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கை ஏற்றி, அதனை பாபா ஹர்பஜன் சிங் என்று கருதி வழிபட்டு வருகின்றனர். பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கின்றார்.

ความคิดเห็น • 8

  • @jaishrivenkat3394
    @jaishrivenkat3394 7 หลายเดือนก่อน

    May month enda week poneemga

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 ปีที่แล้ว

    Nice

  • @vaitheeswaranmuthusami9113
    @vaitheeswaranmuthusami9113 ปีที่แล้ว

    நான் தனியா போய் அங்கே share basis la rs.2000 கொடுத்து வண்டி book panna hotels ல வாய்ப்பு இருக்கா? அல்லது நான் group ஆக தான் போக வேண்டுமா?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      வாய்ப்பு இருக்கிறது.. நாங்க போகும்போதே நிறைய பேர் share trip வந்திருந்தாங்க..

  • @avaiiivanthurichi1635
    @avaiiivanthurichi1635 ปีที่แล้ว

    4 member 8000 aguma akka

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      S.. for Nathula sightseeing only including permit..

    • @joyfulj7080
      @joyfulj7080 5 หลายเดือนก่อน

      How did u get pass? Permit