திருச்செந்துறை மானேந்தியவல்லி உடனுறை சந்திரசேகர் கோயில் அம்மன் அர்த்தநாரிஸ்வரராக உள்ள ஒரே தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
    மூலவர்: சந்திரசேகரர்
    அம்மன்: மானேந்தியவல்லி
    ஊர்: திருச்செந்துறை
    மாவட்டம்: திருச்சி
    தஞ்சாவூர் பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜசோழனின் பாட்டனார் முதலாம் பராந்தகச்சோழன், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். அப்போது காவிரியாற்றின் இருகரைகளும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பௌர்ணமி அந்திப் பொழுதில் அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் புடைசூழக் காடுகளில் திருடர்களைப் பிடிக்க மன்னர் செல்வது வழக்கம். அவ்வாறு மன்னர் தனது படைகளுடன் சென்ற அந்த இடம் முழுவதும் பலாமரக் காடாக இருந்தது.
    மன்னர் தனது படைகளுடன் வந்தபோது அங்கு திருடர்கள் யாரும் இல்லை. அதற்கு மாறாக மான்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதையடுத்து மன்னனுக்கு மான்களை வேட்டையாடும் எண்ணம் தோன்றியது. அப்படி வேட்டையாடும்போது ஒரு மாய மான் அங்கிருந்து பெரிய மரப்பொந்தில் ஒளிந்து கொண்டது. மன்னன் எய்த அம்பு, குறி தவறி பலாமரப் பொந்தில் பட்டு, அம்புபட்ட அந்த இடத்தில் பலா மரப் பாலுக்குப் பதிலாக ரத்தம் பீரிட்டது.
    அந்த நேரத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. சிவபெருமான் சுயம்பு ரூபமாக அந்த மரத்தின் அடியில் உள்ளதாகவும், அங்கு ஒரு சிவாலயம் அமைக்குமாறும் முதலாம் பராந்தகச் சோழனுக்கு கட்டளையிட்டு, மான் மாயமானது. வில் அம்பை மன்னர் கீழே போட்டுவிட்டு, சிவபெருமான் இருக்குமிடத்தில் உயிர்வதைச் செய்து வந்துவிட்டோமோ என்று நினைத்து வருந்தினார். இந்த வரலாறு தஞ்சாவூர் சரசுவதி மகாலில் மன்னரால் செப்புத் தகட்டில் பதிவு செய்து, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    கோயில் அமைத்தல்
    மன்னர் எவ்வளவோ முயற்சி செய்தும் சிவனை கண்ணால் பார்க்கும் பாக்கியமோ, சிவாலயம் அமைக்கும் பாக்கியமோ கிடைக்கவில்லை. அவர் ஆண்ட பகுதியில் கோயில் கட்ட மலைகள் இல்லாத காரணத்தால் நிறைவேற்ற முடியவில்லை. அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பூதி ஆதிச்சம்பிடாரி என்ற பெரிய குந்தவை நாச்சியார், இறைவனுக்குத் திருக்கோயில் கட்டும் பணியை மேற்கொண்டார்.
    கோயிலின் உள்மண்டபப் பகுதி
    தன்னுடைய எல்லைக்கு வெளியே அமைச்சர்களை அனுப்பி, மேற்குத் திசையில் முசிறி, தொட்டியம், நாமக்கல் பகுதிகளிலுள்ள மலைகளிலிருந்து கல்லெடுப்பதற்கு அந்தப் பகுதி சாளுக்கிய மன்னரிடம் அனுமதி பெற்றார். பின்னர் அங்குள்ள சிறைக் கைதிகளையும், சோழ மண்டலத்திலுள்ள சிறைக் கைதிகளையும் வைத்து, கருங்கல் பாறைகளைப் பெயர்த்து யானைகள் மூலமாக திருச்செந்துறைக்கு கொண்டு வந்தார். இதையடுத்து சிவபெருமானுக்கும், சக்திக்கும் திருக்கோயில் அமைத்து, குடமுழுக்கு நடத்தினார்.
    சிவனின் உருவம் கரடுமுரடாகக் காட்சியளிப்பதால், சந்திரசேகரனுக்கு உகந்த தினமான திங்கள்கிழமையன்று தொடர்ந்து 8 வாரங்கள் நெய் தீபமேற்றி, சிவபெருமானின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியை உடலில் பூசிக் கொண்டால், உடலில் உள்ள அனைத்துவிதமான மேகநீர் தோல் நோய்கள்நீங்கும் என்றும், அம்மன் அர்த்தநாரியாக இருப்பதால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்றும் நாடி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறந்த பரிகாரத் தலமாக இத்திருக்கோயில் திகழ்கிறது.
    பஞ்சபூத யோகா தூண்
    சிவன், அம்பிகையை சந்திக்கும் இடத்தில் பஞ்சபூத சக்திகளை ஒரு தூணில் அமைத்துள்ளது சிறப்புக்குரியதாகும். அந்த இடத்தில் கை வைத்து வேண்டியதை நினைத்தால் நினைத்த காரியம் நிறைவேறும் எனக் கூறுவர். பஞ்சபூத தூணில் வலது கை விரல்களை வைத்து சுவாமி, அம்மனை வணங்கினால், நினைத்த காரியம் 48 நாள்களில் நிகழ்ந்து, எல்லா வளமும் பெருகும் என்று வைத்தீசுவரன் கோவிலில் உள்ள அகத்தியர், வசிஷ்டர் ஜோதிட ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
    சந்திரனுக்கு அபயமளித்த இறைவன்
    சந்திரன், தட்சனின் 27 பெண்களையும் மணந்தார். ஆனாலும், ரோகிணி மீது தனி அன்பு செலுத்தினார் சந்திரன். இதனால் மற்ற பெண்கள் எல்லாம் வருத்தமடைய, சந்திரனை சபித்தார் தட்சன். அதனால் சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து வந்தது. இதனால் அஞ்சிய சந்திரன், சிவபெருமானிடம் தஞ்சமடைந்தார். இதனால் சந்திரனுக்கு இறைவன் அபயமளித்தார். அதைத் தொடர்ந்து சந்திரனின் தேய்ந்த கலைகள் மீண்டும் வளர்ந்தன. இதைத் தொடர்ந்து சந்திரனை அவனிருக்கும் மூன்றாம் கலை நிலையில் சிவபெருமான் தனது சிரசில் சூடிக்கொண்டார். இதுவே சந்திரசேகர மூர்த்தத்தின் நிலை என்பர்.
    பொதுவாகவே சந்திரனும், பாம்பும் பகைமை நிலையைக் கொண்டவர்கள். ஆனால், இங்குப் பாம்பையும், சந்திரனையும் ஒன்று சேர்த்து வைத்தவர் சிவபெருமான். எனவே பகைமை நிலையில் இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம்.
    அன்னப்பிரசன்னம்
    குழந்தைகளுக்கு அன்னப்பிரசன்னம் செய்ய சிறந்த கோயிலாகத் திருச்செந்துறை திகழ்கிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தங்களின் குழந்தைகளுக்கு அன்னப்பிரசன்னம் செய்து செல்கின்றனர்.
    அமைவிடம்
    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து முக்கொம்பு, பெட்டைவாய்த்தலை, குளித்தலை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளிலும் இக்கோயிலை வந்தடையலாம்.
    தொடர்புக்கு
    இக்கோயிலுக்கு வருபவர்கள் எம்.எஸ். சுந்தரம் குருக்களை 9940872022 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    கோயில் Google map link
    maps.google.co...
    if you want to support us via UPI id
    k.navaneethan83@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 19

  • @mathina
    @mathina  ปีที่แล้ว +3

    நமது தாய் நலமுடன் இருக்க வழிபட வேண்டிய தலம்
    th-cam.com/video/geB89GGAKy4/w-d-xo.html

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +1

    அருள்மிகு மானேந்தியவல்லி உடனுறை சந்திரசேகர சுவாமிகள் போற்றி ஓம்

  • @ravichandar216
    @ravichandar216 ปีที่แล้ว +5

    பதிவும் திருக்கோயில் வரலாறும் மிக அருமை.

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 ปีที่แล้ว +7

    கோயில் அமைந்தது குறித்து சரித்திர தகவல்களையும், புராண, ஆன்மீக தகவல்களையும் கொண்ட விளக்கம் அருமை, முதலாம் பராந்தக சோழ மன்னர் வரலாறு, அவருக்கு பின் அவரது மனைவி இக்கோயிலை கஷ்டப்பட்டு முயன்று கட்டிய வரலாறு சுவாரசியமாக உள்ளது, சேவை தொடரட்டும், நன்றி.

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நவநீதன் சார் நன்றி 👌🙏👌

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 ปีที่แล้ว +3

    Nice temple.gurukkal explanation is superb🙏🙏🙏🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +3

    Thanks valga valamudan sir

  • @MahaLakshmi-tc4ky
    @MahaLakshmi-tc4ky ปีที่แล้ว +6

    Mahaperiyava Saranam
    ஆலய அர்ச்சகர் அருமை யாக பேசிஉள்ளார் பஞ்ச பூத தூண் மிகவும் அருமை
    சந்திரசேகர சிவன் அம்பாள் நாம் அனைவரையும் இந்த புத்தாண்டு செல்வ வளம் பெருக வேண்டும் எந்த தொற்று நோயும் வராமல் இருக்க வேண்டும் அண்ணாமலையார் அருள் புரியட்டும் அண்ணா நீங்கள் வளர வாழ்த்துகள் அனைவருக்கும் இனிய புததாண்டு வாழ்த்துகள் 2023 🎊🎊 எல்லாரும் நல்லா இருக்கணும் ஓம் சாய் ராம்

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 ปีที่แล้ว +3

    Super sir

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +4

    🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀💦🌻🌈🌿திருச்சிற்றம்பலம்🍀🌿🌹🌻 தில்லையம்பலம்🌸🙏🌸

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 6 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @Sam-ck8ds
    @Sam-ck8ds ปีที่แล้ว +2

    Is it true?whether there is no other temple which has chandrasekarar as moolavar,anyone please clarify this?

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @p.pooranee8823
    @p.pooranee8823 2 หลายเดือนก่อน

    வள்ளி, பல்லி

  • @retnamalamala5278
    @retnamalamala5278 ปีที่แล้ว +1

    Bro can u put temple name in English. Thank you.

  • @muthulakshmielango8557
    @muthulakshmielango8557 ปีที่แล้ว

    We visit 3 times. But the temple always closed. We asked the watchman, he told kurukkal may come 10 o'clock. We dont have time to wait more than 2 hours. Cause we have to visit some more temple. I think We may have no blessing from this temple.

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      Better you go evening 5.30