திருநாவுக்கரசு தேவாரம் | Thirunavukkarasar Thevaram Vol8 | Dharmapuram P Swaminathan - Devaram Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
  • เพลง

ความคิดเห็น • 17

  • @balansathishkumar8915
    @balansathishkumar8915 6 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி...

  • @ramachandranv6794
    @ramachandranv6794 หลายเดือนก่อน

    சிவாயநம

  • @rajanu4637
    @rajanu4637 3 ปีที่แล้ว +1

    சிவசிவசிவசிவ

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional  4 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @thangamanim2036
    @thangamanim2036 3 ปีที่แล้ว +4

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @panchanathanav2645
    @panchanathanav2645 3 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாய சிவாயநம சிவாயசிவ சிவசிவ சி சி சி சிவா திருச்சிற்றம்பலம்

  • @p.sampathkumarsampatjkumar1717
    @p.sampathkumarsampatjkumar1717 ปีที่แล้ว +1

    🎵மிகவும் அற்புதமும் அருமை அருமை 🎶🎵🎶🎵🎶🎵🎶🎵

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் சிவன் அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @kesavangovindhasamy2193
    @kesavangovindhasamy2193 3 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 ปีที่แล้ว +1

    O m namachiva vazga Nathan thaal vazga

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +2

    🙏🌿சிவ சிவ💐🍀திருச்சிற்றம்பலம் 🔱🌹🙏

  • @jrc120412
    @jrc120412 2 ปีที่แล้ว

    🔥

  • @aarooraaaroorachannel5318
    @aarooraaaroorachannel5318 หลายเดือนก่อน

    பத்தனாய்ப் பாட மாட்டேன்
    பரமனே பரம யோகீ
    எத்தினாற் பத்தி செய்கேன்
    என்னைநீ இகழ வேண்டா
    முத்தனே முதல்வா தில்லை
    அம்பலத் தாடு கின்ற
    அத்தாவுன் ஆடல் காண்பான்
    அடியனேன் வந்த வாறே. 1
    கருத்தனாய்ப் பாட மாட்டேன்
    காம்பன தோளி பங்கா
    ஒருத்தரா லறிய வொண்ணாத்
    திருவுரு வுடைய சோதீ
    திருத்தமாந் தில்லை தன்னுட்
    டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
    நிருத்தம்நான் காண வேண்டி
    நேர்பட வந்த வாறே. 2
    கேட்டிலேன் கிளைபி ரியேன்
    கேட்குமா கேட்டி யாகில்
    நாட்டினேன் நின்றன் பாதம்
    நடுப்பட நெஞ்சி னுள்ளே
    மாட்டினீர் வாளை பாயு
    மல்குசிற் றம்ப லத்தே
    கூட்டமாங் குவிமு லையாள்
    கூடநீ யாடு மாறே. 3
    சிந்தையைத் திகைப்பி யாதே
    செறிவுடை அடிமை செய்ய
    எந்தைநீ அருளிச் செய்யாய்
    யாதுநான் செய்வ தென்னே
    செந்தியார் வேள்வி ஓவாத்
    தில்லைச்சிற் றம்ப லத்தே
    அந்தியும் பகலும் ஆட
    அடியிணை அலசுங் கொல்லோ. 4
    கண்டவா திரிந்து நாளுங்
    கருத்தினால் நின்றன் பாதங்
    கொண்டிருந் தாடிப் பாடிக்
    கூடுவன் குறிப்பி னாலே
    வண்டுபண் பாடுஞ் சோலை
    மல்குசிற் றம்ப லத்தே
    எண்டிசை யோரு மேத்த
    இறைவநீ யாடு மாறே. 5
    பார்த்திருந் தடிய னேன்நான்
    பரவுவன் பாடி யாடி
    மூர்த்தியே என்பன் உன்னை
    மூவரில் முதல்வன் என்பன்
    ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்
    தில்லைச்சிற் றம்ப லத்துக்
    கூத்தாவுன் கூத்துக் காண்பான்
    கூடநான் வந்த வாறே. 6
    பொய்யினைத் தவிர விட்டுப்
    புறமலா அடிமை செய்ய
    ஐயநீ அருளிச் செய்யாய்
    ஆதியே ஆதி மூர்த்தி
    வையகந் தன்னில் மிக்க
    மல்குசிற் றம்ப லத்தே
    பையநின் னாடல் காண்பான்
    பரமநான் வந்த வாறே. 7
    மனத்தினார் திகைத்து நாளும்
    மாண்பலா நெறிகள் மேலே
    கனைப்பரால் என்செய் கேனோ
    கறையணி கண்டத் தானே
    தினைத்தனை வேதங் குன்றாத்
    தில்லைச்சிற் றம்ப லத்தே
    அனைத்துநின் னிலயங் காண்பான்
    அடியனேன் வந்த வாறே. 8
    நெஞ்சினைத் தூய்மை செய்து
    நினைக்குமா நினைப்பி யாதே
    வஞ்சமே செய்தி யாலோ
    வானவர் தலைவ னேநீ
    மஞ்சடை சோலைத் தில்லை
    மல்குசிற் றம்ப லத்தே
    அஞ்சொலாள் காண நின்று
    அழகநீ யாடு மாறே. 9
    மண்ணுண்ட மால வனும்
    மலர்மிசை மன்னி னானும்
    விண்ணுண்ட திருவு ருவம்
    விரும்பினார் காண மாட்டார்
    திண்ணுண்ட திருவே மிக்க
    தில்லைச்சிற் றம்ப லத்தே
    பண்ணுண்ட பாட லோடும்
    பரமநீ யாடு மாறே 10.
    Read more at: shaivam.org/thirumurai/fourth-thirumurai/thirunavukkarasar-thevaram-chidambaram-thirunerisai-paththanaip-pada/#gsc.tab=0

  • @aarooraaaroorachannel5318
    @aarooraaaroorachannel5318 หลายเดือนก่อน

    நன்று நாடொறும் நம்வினை போயறும்
    என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்
    சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
    துன்று பொற்சடை யானைத் தொழுமினே. 1
    கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
    பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
    விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
    திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே. 2
    வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
    ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
    பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
    காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே. 3
    அல்ல லில்லை அருவினை தானில்லை
    மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
    செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
    வல்ல ராகில் வழியது காண்மினே. 4
    துன்ப மில்லைத் துயரில்லை யாமினி
    நம்ப னாகிய நன்மணி கண்டனார்
    என்பொ னாருறை வேட்கள நன்னகர்
    இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே. 5
    கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
    பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
    சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
    பட்ட வல்வினை யாயின பாறுமே. 6
    வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
    எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
    சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
    திட்ட மாகி யிருமட நெஞ்சமே. 7
    நட்ட மாடிய நம்பனை நாடொறும்
    இட்டத் தாலினி தாக நினைமினோ
    வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
    சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே. 8
    வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
    சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
    குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
    சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே. 9
    சேட னாருறை யுஞ்செழு மாமலை
    ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற
    வாட வூன்றி மலரடி வாங்கிய
    வேட னாருறை வேட்களஞ் சேர்மினே 10
    Read more at: shaivam.org/thirumurai/fifth-thirumurai/thirunavukkarasar-thevaram-thiruvetkalam-thirukkurunthokai-nandru-naadorum/#gsc.tab=0

  • @aarooraaaroorachannel5318
    @aarooraaaroorachannel5318 หลายเดือนก่อน

    அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
    பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
    என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
    இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே. 1
    அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
    சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
    கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
    பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. 2
    அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்
    எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
    சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
    திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. 3
    அல்லல் என்செயும் அருவினை என்செயும்
    தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
    தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
    கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே. 4
    ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
    நானி லாவி யிருப்பனென் னாதனைத்
    தேனி லாவிய சிற்றம் பலவனார்
    வானி லாவி யிருக்கவும் வைப்பரே. 5
    சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
    சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
    சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
    சிட்டர் பாலணு கான்செறு காலனே. 6
    ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
    திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
    விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
    அருத்த னார்அடி யாரை அறிவரே. 7
    விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
    எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக்
    கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத்
    துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே. 8
    வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்
    வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
    தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
    ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே. 9
    நாடி நாரணன் நான்முக னென்றிவர்
    தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
    மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
    தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே. 10
    மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
    சதுரன் சிற்றம் பலவன் திருமலை
    அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
    மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே 11
    Read more at: shaivam.org/thirumurai/fifth-thirumurai/thirunavukkarasar-thevaram-chidambaram-annam-paalikunth/#gsc.tab=0