கிறிஸ்து பிறப்பு பண்டிகை | 25-12-1981 | சாது G தேவநேசன் ஐயா அவர்கள் மலவிளை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
  • Praise The Lord!
    Merry Christmas to you and your family. Wish you joyful 2021!
    கனம் பொருந்திய கர்த்தருடைய ஸ்தானாபதி சாது. G. தேவநேசன் (ஐயா) அவர்கள், "கிறிஸ்து பிறப்பு பண்டிகை" என்பதை | 25-12-1981 அன்று ஆதி பெந்தெகொஸ்தே சத்திய சபை, மலவிளையில் பிரசங்கித்தார்கள்.
    தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
    லூக்கா 2:10, 11
    இந்த பிரசங்கத்தில் சாது G. தேவநேசன் (ஐயா) அவர்கள் இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலே எதற்காக திரு அவதாரம் எடுத்தார் என்பதைக் குறித்து பேசுகிறார்கள். கர்த்தரால் செம்மையானவர்களாய் விசேஷமாக மேலானவர்களாய் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் தான் மனுஷர்கள். பரலோகத்தின் ஆளுகையையும், உலகத்தின் ஆளுகையையும் உடையவர்களாய் இருந்த மனுஷர்கள் எல்லாவற்றையும் இழந்து சந்தோஷமற்று துக்கம் நிறைந்தவர்களாய் நிர்பாக்கியமுள்ளவர்களாய் பரிதபிக்கப்படத்தக்கவர்களாய் தரித்திரராய் மகிமையான காரியங்களை காண்கிற கண்கள் இல்லாத குருடர்களாய் மாறிப்போனார்கள். இவர்களுக்கு இழந்து போன ஆசீர்வாதங்களை மறுபடியும் கொடுக்கும்படியாக இயேசுகிறிஸ்து இரட்சகராக இந்த உலகத்தில் திரு அவதாரம் எடுத்தார். அவருடைய திரு அவதாரம் சகல ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிறது.
    மனுஷர்கள் இழந்து போனதான பரலோக ராஜ்யத்தையும், பரலோகத்தின் சிங்காசனத்தையும், கிரீடங்களையும், ஆளுகையையும், அதிகாரத்தையும், மகிமையையும், மகத்துவத்தையும், பராக்கிரமத்தையும், சவுந்தரியத்தையும், சந்தோஷத்தையும் மறுபடியும் கொடுக்கும் படியாகவும் தரித்திரராய் மாறிப்போன மனுஷர்களை தெய்வீக ஐசுவரியத்தால் நிறைக்கும்படியாகவும் இயேசுகிறிஸ்து பரலோகத்தின் மகா மகிமை, சிங்காசனம், ஆளுகை, கிரீடம், அதிகாரம், மகத்துவம், பராக்கிரமம், ஐசுவரியம், சவுந்தரியம், சந்தோஷம் எல்லாவற்றையும் விட்டு இந்த உலகத்தில் வந்தார்.
    பரிபூரணமான இரட்சிப்பை சொந்தமாக்குகிறவர்கள் இழந்து போன சகல ஆசீர்வாதங்களையும் மறுபடியும் அடைந்து கொள்ளுகிறார்கள். இவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள் மிகுந்த சந்தோஷத்தோடு முடிவிலே பரலோக ராஜ்யத்தில் பிரவேசித்து இயேசுகிறிஸ்துவோடு கூட சதாகாலமும் ஆளுகை செய்வார்கள்.
    மேலும் தகவல்களுக்கு bptchurch.org/ இணையதளத்திற்கு வருகை தரவும்.
    For prayer request kindly send us a mail: spiritual@bptchurch.org
    #bptchurchmalavilai

ความคิดเห็น •