பஞ்சகவ்யம்_Panchagavyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • பஞ்சகவ்யம் தயாரிப்பு முறைகள்
    பஞ்சகவ்யம் நாட்டுப்பசுமாட்டில் இருந்து கிடைக்கக்கூடிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் போன்ற ஐந்து பொருட்களால் செய்யப்படுகிறது. பஞ்சகவ்யத்தில் பல்வேறு தயாரிப்பு முறைகள் உள்ளது, அதில் ஒரு தயாரிப்பு முறையை மட்டும் விளக்கியுள்ளோம்.
    தேவையான பொருட்கள் (20 லிட்டர் தயாரிப்பதற்கு)
    சாணம் - 3 கிலோ
    கோமியம் - 3 லிட்டர்
    பால் - 2 லிட்டர்
    புளித்த தயிர் - 2 லிட்டர் (4 நாள் புளித்தது)
    அழுகிய வாழைப்பழம் - 12
    இளநீர் - 2 லிட்டர்
    கரும்பு சர்க்கரை - 1 கிலோ அல்லது கரும்பு சாறு - 2 லிட்டர்
    கடலைப்புண்ணாக்கு - 1.5 கிலோ
    முதிர்ந்த தேங்காய் தண்ணீர் - 2 லிட்டர்
    (குறிப்பு: இதில் நெய் சேர்க்கப்படவில்லை)
    தேவையான உபகரணங்கள்
    பஞ்சகவ்யம் தயாரிக்க மண் பானை, பிளாஸ்டிக் டிரம் அல்லது சிமெண்ட் தொட்டி போன்றவற்றைப் பயன்படுத்தலாம் (இரும்பு, அலுமினிய பாத்திரங்கள் பயன்படுத்தக் கூடாது), கலக்கிவிட 5 அடி நீளமுள்ள குச்சி, மூடிவைக்க பருத்தித்துணி அல்லது சணல் சாக்கு (தேவையான அளவில்)
    செய்முறை
    பஞ்சகவ்யம் தயாரிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே தேங்காயை உடைத்து தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும், அந்த தேங்காய் தண்ணீர் நன்றாக புளித்திருக்கும். கடலைப் புண்ணாக்கை 2 லிட்டர் தண்ணீரில் பஞ்சகவ்யம் தயாரிப்பதற்கு முன்பே ஒரு மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.அழுகிய வாழைப்பழத்தை தோல் உறித்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிளாஸ்டிக் டிரம்மில் சாணம், கோமியம், பால், நன்றாக புளித்த தயிர், கரும்பு சாறு, இளநீர், பிசைந்த வாழைப்பழம், அரைத்த கடலைப் புண்ணாக்கு, புளித்த தேங்காய் தண்ணீர் போன்றவற்றை மேற்கண்ட வரிசையில் சேர்த்து கலக்கவும்.
    கவனிக்க வேண்டியவை
    பிளாஸ்டிக் டிரம்மின் வாயை பருத்தித் துணியால் கட்டி, நிழலான இடத்தில் வைக்க வேண்டும். காலை, மாலை இரு வேளையும் வலஞ்சுழியாகக் கலக்கி விடவும், கலக்கிவிடும் குச்சியை சுத்தமாக கழுவி வைக்கவும். டிரம்மின் வாய் பகுதியையும் சுத்தமாக வைக்கவும். நாய், பெருச்சாளி போன்றவை சேதம் செய்யாமல் பார்த்துக்கொள்ளவும் 14 நாட்களில் பஞ்சகவ்யம் பயன்படுத்த தாயராகி விடும். பஞ்சகவ்யத்தை 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
    பயன்படுத்தும் முறை
    10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி. பஞ்சகவ்யம் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
    பயன்கள்
    பசுமாட்டு சாணத்தில் பாக்டீரியா, பூஞ்சாணம் போன்ற நுண்ணுயிர்கள் உள்ளன. மாட்டு கோமியத்தில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தும், நுண்ணுயிர்களும் உள்ளன. பாலில் அமினோ அமிலங்கள் உள்ளன. தயிரில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. இளநீர் மற்றும் தேங்காய் தண்ணீரில் வளர்ச்சியூக்கியும் தாது உப்புக்களும் உள்ளன. பஞ்சகவ்யத்தைப் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது. பஞ்சகவ்யம் சிறந்த வளர்ச்சியூக்கியாக இருப்பதோடு, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை தரக்கூடியதாகவும் இருக்கிறது. பஞ்சகவ்யத்தில் பேரூட்ட சத்துக்களும், நுண்ணூட்ட சத்துக்களும், பயிர் வளர்ச்சியூக்கிகளும், எண்ணற்ற நுண்ணுயிர்களும் மிகுந்த அளவில் உள்ளன

ความคิดเห็น • 30

  • @kaleeswari980
    @kaleeswari980 3 ปีที่แล้ว +2

    Sir I'm your new subscriber and young former . Good service sir thank you so much

  • @vimalraj4718
    @vimalraj4718 4 ปีที่แล้ว +1

    How many days once can use it to plants or we can daily use it for plant???

  • @bharathwajseshadri7514
    @bharathwajseshadri7514 3 ปีที่แล้ว +2

    Why don't you make these videos in other languages so that people of other states and country as well benefit.

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 3 ปีที่แล้ว

    Super ayya

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว +1

    மழை பெய்யும் போது பஞ்ச காவ்யா தெளிக்க லாமா

  • @kirankumar-zr1uh
    @kirankumar-zr1uh 2 ปีที่แล้ว

    Anna will you sell nattu madu in Isha centre or if we come Isha will u get us good breed nattu madu

  • @SaravanaKumar-ns3xe
    @SaravanaKumar-ns3xe 3 ปีที่แล้ว

    How to use for cocnut tree in manavari land

  • @bhuvanabalraj1491
    @bhuvanabalraj1491 3 ปีที่แล้ว +1

    நாட்டு மாடு அல்லாது பிற மாட்டு சாணம் பயன்படுத்தலாமா

  • @rameshjayanthi7311
    @rameshjayanthi7311 3 ปีที่แล้ว

    Nice

  • @Raja-zj3bo
    @Raja-zj3bo 4 ปีที่แล้ว

    👍

  • @kaleeswari980
    @kaleeswari980 3 ปีที่แล้ว

    Epo epo thelikkalam? Pls reply sir...

  • @albierockstar323
    @albierockstar323 4 ปีที่แล้ว

    Super👏👏👏👏👏👏

  • @r.pandiselvamrkp75
    @r.pandiselvamrkp75 3 ปีที่แล้ว

    ஐயா 21 நாள் களித்து வடிகட்டும் முறை எப்படி உபயோகிக்கும் அளவு வடிகட்டும் முன்பா பின்பா விளக்கம் தாருங்கள்

  • @pandikali
    @pandikali 3 ปีที่แล้ว

    அய்யா நாங்கள் ஏலக்காய் செடிக்கு மாதம் ஒருமுறை இரசாயன மருந்து ஸ்பிரயெரில் அடிகிரோ .... இதனோடு பஞ்சகவியமும் கலந்து தெளித்தால்....
    பாதகம் ஏற்படுமா....??
    நன்மை கிடைக்குமா ....??
    இல்லை பஞ்சகவையதை தனியாக தான் தெளிக்க வேண்டுமா ...??

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா ❤🙏

  • @mageshsakthi3794
    @mageshsakthi3794 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். காய்கறி பயிர்களில் பூ இருக்கும் போது தெளிக்கலாமா?

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  2 ปีที่แล้ว

      10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் புளித்த மோர் கலந்து தெளிக்கும்போது பூக்கள் உதிராம நல்ல வளர்ச்சியாக இருக்கும்

  • @m.r.palanim.r.palani4776
    @m.r.palanim.r.palani4776 3 ปีที่แล้ว

    கிடைக்குமா

  • @adiyogishiva6038
    @adiyogishiva6038 2 ปีที่แล้ว

    21 நாள் மட்டும் தினமும் காலை மாலை கலைகிவிடனுமா இல்லை 6 மாதமும் கலைகிவிடனுமா

  • @nagamurugesan8777
    @nagamurugesan8777 5 หลายเดือนก่อน

    21 நாள் கழித்து வடி கட்ட வேண்டுமா

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  5 หลายเดือนก่อน

      இல்லை தேவைப்படும் போது வடிகட்டலாம்

  • @TN_25_NTK
    @TN_25_NTK 4 ปีที่แล้ว

    ஐயா, நான் பஞ்சகவ்யாவுக்கு கிர் வகை பசுவைப் பயன்படுத்தலாமா?

    • @KarthiKNFoodie
      @KarthiKNFoodie 2 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம் அண்ணா...

  • @suchandradasi
    @suchandradasi 3 ปีที่แล้ว

    What did he say?

    • @SanjaySanjay-qy7zj
      @SanjaySanjay-qy7zj 2 ปีที่แล้ว

      Don't you know tamil??

    • @suchandradasi
      @suchandradasi 2 ปีที่แล้ว

      @@SanjaySanjay-qy7zj no sorry

    • @muthuganesan5873
      @muthuganesan5873 ปีที่แล้ว

      @@suchandradasi he said about nature way of agro improvement, plants growth, by using the "traditional and nature way of agriculture" which was followed by
      (tamil- தமிழ்) civilisation🙏🙏🙏☺❤

  • @rameshjayanthi7311
    @rameshjayanthi7311 3 ปีที่แล้ว

    Nice