அப்பா ஓர் சகாப்தம் - Dad is a saga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • பயணப்படுகிறேன்!
    நேரம், தூரம், பாதை, யாதொன்றும் தீர்மானமில்லாமல், பயணப்படுகிறேன்.
    என்னைத் தேடி. என் வேர்களைத் தேடி.
    எதுவும் குறையில்லை, எனினும் நான் முழுதாய் இங்கில்லை.
    முற்றுப்பெறாத உணர்வுகள் தலை தூக்கையில், பருந்துக்கு பயந்து, கோழியின் இறக்கைக்குள் பதுங்கும் குஞ்சுகளாய், பால்யத்தின் நினைவுக்குள் ஓடியடைகிறேன்.
    பால்யத்தின் வாசல் திறக்கையில் மிதக்கும் காற்றிலெங்கும் அன்பின் வாசம் அது அப்பாவின் நேசம்.
    நினைக்க நினைக்க நெஞ்சு கனத்து வைரமாகும்.
    அப்பா ஓர் சகாப்தம்!!
    அவர் அன்று சொல்லித்தந்த நாகரிகமும், தைரியமும், சுதந்திரமும், தன்னம்பிக்கையும்
    இன்று வரை என்னை தான் கைபிடித்துச் செல்கிறது..
    சுதந்திரமானவளை, தனியே இயங்கும் ஒருத்தியை, உயரங்களை இலக்காய் கொண்டவளை
    இவ்வுலகம் இணக்கமாய் பார்ப்பதில்லை
    ஆயிரம் எதிர்ப்புகள் சூழ்ந்த போதும் தடுமாறியதில்லை
    தலை கவிழ்ந்ததுமில்லை
    தன்னம்பிக்கை ஒன்றே ஆயுதமாய்,
    எனக்கு நானே துணையாய், என்னோடு கைகோர்த்த படி நான்!
    சிறகுகள் நனைந்து கணக்கையில், சுற்றம் சுருங்கையில்,
    பிறப்பிடம் தேடி மெல்ல ஊர்கிறேன்.
    ஆறும், அருவியும், மலைகளும், சாரலும், தென்றலுமாய்
    அணைத்துக் கொள்ளும் எல்லாம் மறந்த தியானத்தில்
    மனதுதிர்க்கும் ஒற்றை வார்த்தை
    அப்பா!!
    அருவி எனை ஆட்கொள்கையில்,
    ஆன்மா நிறைந்து,
    மனமங்கு காற்றில் பூத்தும்பியாய்,
    அப்பாவின் நெற்றி முத்தத்தை அசைபோட்ட படி
    மீண்டு
    மீண்டும் நிகழ்காலத்தில் கால் பதிக்கையில்
    நெஞ்சம் முன்னிலும் உறுதியாய்
    கடலும் மலையும் மட்டுமென்ன
    பிரபஞ்சத்தையே விலை பேசுவேன்
    நான் எனக்கானவள்..
    எழுத்து: தீபிகா சுரேஷ்
    வர்ணனை: ஆன் ஜோஷி
    சவுண்ட் என்ஜினீயர்: அபின் TM
    நன்றி: சான்ஜோ ஜேக்கப்
    வர்ணனை பதிவு: ஆன் ஜோஷி வாய்சஸ்
    ஒளிப்பதிவு: ஜீவா M, சக்திவேல் கணேசன்
    நடிப்பு: கௌசல்யா லக்ஷ்மணன்
    நன்றி: ராகுல் இளங்கோவன்
    இயக்கம்: சக்திவேல் கணேசன்
    நாட்டு கோழி சாப்பாடு சமைத்து கொடுத்த கல்வராயன் மலை
    பாக்யராஜ் அண்ணா மற்றும் குடும்பத்திற்கு நன்றி.
    Like | Comment | Share | Subscribe
    For more Zv videos: / @zvdf
    Watch our nature documentary playlist: • தூக்கணாங்குருவி கூடு க...
    We upload nature based short films and travel videos.
    Subscribe and click the notification bell to get updated when we publish a new video.

ความคิดเห็น • 11

  • @rameshg-zs2rq
    @rameshg-zs2rq ปีที่แล้ว +1

    very nice💞

  • @jeyambala
    @jeyambala ปีที่แล้ว +1

    🤩🤩🤩

  • @EZHILLOGAN
    @EZHILLOGAN ปีที่แล้ว +3

    Appa is all whs ultimate

  • @mtlifenanba4601
    @mtlifenanba4601 ปีที่แล้ว +1

    Super pro 🌞🌞😎😎😎😎

  • @prabuksankar_8922
    @prabuksankar_8922 ปีที่แล้ว +1

    எழுத்து வர்ணனை ஒளிப்பதிவு இயற்கை காட்சிகள் அருவி அனைத்தும் அருமை
    குழுவினருக்கு வாழ்த்துக்கள் ❤️🙏

  • @radcoimbatore
    @radcoimbatore ปีที่แล้ว +1

    அருமை சக்தி , வாழ்த்துக்கள் 🎉

  • @daisybala6540
    @daisybala6540 ปีที่แล้ว +1

    Wonderful photography great to watch , congrats 👏 😀

    • @jiivayuvan
      @jiivayuvan ปีที่แล้ว

      Thank you so much mam🙏

  • @dsyadav118
    @dsyadav118 ปีที่แล้ว +1

    Jiiva bro 🥰📹

    • @jiivayuvan
      @jiivayuvan ปีที่แล้ว

      Thanks bro❤🎉🎉

  • @RagalaiMannan
    @RagalaiMannan ปีที่แล้ว +1

    AWESOME da circuit
    B>O>Z>O