Farewell for Al Hafil Anfar-Nahji | அல்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்களின் அனுபவங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
    அல்ஹம்துலில்லாஹ்
    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் கடந்த சனிக்கிழமை (2024.07.20) கலாவெவ ஜும்மா மஸ்ஜித் நிர்வாகத்தினர் மற்றும் அல்மத்ரஸதுந் நூரிய்யா குழுமத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை வைபவமானது கலாவெவ ஜும்மா பள்ளிவாயல் வளாகத்தில் மிகச் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது.
    இப் பிரியாவிடை வைபவமானது எமது கலாவெவ ஜும்மா பள்ளிவாயல் இமாமாகவும் மத்ரஸா முஅல்லிமாகவும் கடமை புரிந்து தமது மேற்படிப்பை தொடர்வதற்காக புனித மதீனா நகரில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்கு எம்மை விட்டு பிரிந்து செல்லவுள்ள அல்ஹாபிழ் அன்பர் - நஹ்ஜி BA அவர்களுக்காக நடாத்தப்பட்டது.
    இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகம், மத்ரஸா நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர் என பலரும் சமுகமளித்திருந்தனர்.
    இதன் போது பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் மத்ரஸா நிர்வாகத் தலைவர் மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் மற்றும் பெற்றோர் சார்பில் ஒருவர் என அனைவராலும் பிரியாவிடை பெறும் மௌலவி அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் வழங்ஙகப்பட்டதோடு மாணவர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அத்தோடு பிரியாவிடை பெறும் மௌலவி அல்ஹாபிழ் அன்பர் - நஹ்ஜி BA அவர்களினால் சிரிய உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது. அவ் உரையில் தமது கல்வி மற்றும் பள்ளிவாயல்கள் தொடர்பான முந்தைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு மார்க்கக் கல்வியில் திறமையான மாணவர்கள் உள்ளீர்க்கப்படுதலின் அவசியம் குறித்தும் கலாவெவ பிரதேசத்தில் முழு நேர அல் குர்ஆன் மனனம் மற்றும் ஷரீஆ கற்கைகளுக்கான மத்ரஸாவினது அவசியம் குறித்தும் அறிவுறுத்தினார்.
    இந்நிகழ்விற்காக எல்லா வழிகளிலும் உதவிகளும் ஒத்தாசைகளும் புரிந்த அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
    குறிப்பு: இன் ஷா அல்லாஹ் இந்நிகழ்வு தொடர்பிலான காணொளிகள் அனைத்தும் கட்டம் கட்டமாக எமது Facebook Page மற்றும் TH-cam Channel இல் பதிவேற்றம் செய்யப்படும்.
    2024.07.22
    திங்கட்கிழமை

ความคิดเห็น •