இல்லத்தரசிகளின் 365 நாள் கடை|Household and Kitchen Items| இது மகளிர்களிற்கான கடை 🧑‍🍳|Part I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • யாழ் வாழ் மகளீருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
    யாழ்ப்பாணத்தில்
    பலாலி வீதியில்
    இல 234,
    ராஜா பிளாசா
    எனும் இடத்தில்
    கோண்டாவில் சந்திக்கு அருகாமையில், super market ஐ ஒத்த கட்டமைப்பில், வீட்டு குசினிகளில் பாவிக்கும் பொருட்களை மையமாகக்கொண்டு ஒரு குளிரூட்டப்பட்ட காட்சியறை திறக்கப்பட்டுள்ளது.
    இது ஒரு பெண்ணால், பெண்களின் வேலைப்பளுவை கருத்திற்கொண்டு,
    வித்தியாசமான சிந்தனையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதோடு அல்லாமல் ஒருதடவை செல்வோரை, மீண்டும் மீண்டும் அழைக்கும் ஈர்க்கும் இயற்கையாய்யுள்ளது.
    இங்கு இல்லத்தரசிகளது வேலைகளை இலகுவாக்கக்கூடிய வகையில் பல மின்-இலத்திரனியல் உபகரணங்கள் காணப்படுவதுடன், இவர்கள் பிற நாடுகளிலிருந்து நேரடியாகவே யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்வதால், இலங்கையில் இங்கு மட்டுமே கிடைக்கும் சில நவீன பொருட்களும் காணப்படுகின்றன.
    காலையில் எழும்பியதிலிருந்து சமையல் கடமைகளை பரபரப்பாய் ஆற்றும் மாதர்களுக்கு, நேரத்தை மீதப்படுத்தக்கூடிய வகையிலும், சமையல் மற்றும் வீட்டு வேலைகளை இலகுவாக்கக்கூடியவாறு பல பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
    அதுமட்டும் அல்லாமல் வீட்டிலிருந்தவாறே “வட்ஸ்அப்” (WhatsApp) மூலமாக படங்களை பெற்றுக்கொண்டு வீட்டிலிருந்தவாறும் பொருட்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்துள்ளார்கள்.
    (whatsApp இலக்கங்கள் 0770069333 & 0770069337)
    அத்துடன் கடன் மற்றும் பற்று அட்டைகள் (credit and debit card) மூலமாகவும் தமது வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு செய்யக்கூடிய வகையில் உரிய வசதிகளை கொண்டுள்ளார்கள்.
    இது தொடர்பாக அங்கு சென்று சில நுகர்வோரின் கருத்துக்களை பெற்றபோது,
    “eBay , Amazon போன்ற online வலைத்தளங்களில் காணப்படும் பொருட்களை இந்த காட்சி அறையில் நேரடியாக தொட்டுணர்ந்து பார்க்கக்கூடியதாக இருப்பதுடன்
    மலிவாகவும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.” என்றனர்.
    இந்த காட்சியறை தொடர்பாக அங்கு நின்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் குழாமில் ஒருவரிடம் கருத்து கேட்ட போது “எமது உள்ளூர் பெண் ஒருவரின் வித்தியாசமான சிந்தனையில் உருவான ஒரு நிறுவனத்தில், நாம் பொருட்களை வேண்டி ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் வந்த எமக்கு, இதன் அமைப்பும், பொருட்களின் மலிவு விலையும் ஆச்சரியம் அழித்தது” என்றார்.
    “தாராளமான வாகனத் தரிப்பிடம் இருப்பதாலும், யாழ் நகருக்கு இந்த வாகன நெரிசலின் ஊடாக செல்வதை விடுத்து இங்கு இலகுவாக சென்று குறைந்த விலையிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது” என தமது கருத்தை பதிவிட்டனர்.
    காலை 8.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரை, வருடத்தில் 365 நாளும் திறந்திருப்பதால், நாங்கள் எமது லீவு நேரத்திலும் வந்து போகக்கூடியதாக உள்ளது என்று கூறியதுடன், ஆனாலும் இது யாழ் நகரில் அமையப்பெற்றிருந்தால் தங்களுக்கு பேருந்து மூலம் வந்து சென்றிருக்கலாம் என்றும் தமது அணுகல் வசதியீனத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
    மூன்று தசாப்தங்களுக்கு மேலாக
    யுத்தத்திற்குள் மூழ்குண்டு கிடந்த யாழ்ப்பாணம், தற்போது இது போன்ற பல்வேறு துறைகளிலும் நவீன எண்ணக்கருக்களுடனும், புது புது முயற்சியாளர்களைக் கொண்டு துளிர்விடத் தொடங்குவது வரவேற்கத்தக்கது.
    Facebook Link:
    www.facebook.c...

ความคิดเห็น • 1

  • @kavipriya_official05821
    @kavipriya_official05821 5 หลายเดือนก่อน

    Good place for everyone
    Thanks a lot for your service