மாதனூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கைலாசகிரி ஊராட்சியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- மாதனூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கைலாசகிரி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவரணி சார்பில் 300 தாய்மார்களுக்கு இலவச சேலை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பனங்காட்டூர் பகுதியில் அதிமுக மாணவர் அணி சார்பில் ஒன்றிய மாணவர் அணி துணை செயலாளர் அரவிந்தன் தலைமையில் தாய்மார்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாதனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 300 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றுகையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு மளிகை பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்தி மக்களுக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்து வரும் இந்த ஆட்சியை விட்டு அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கராத்தே மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபிநாத், வேலூர் புறநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.