திசையன்விளையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசு தொகை கேட்ட கனிமொழி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த வருட கபடிப் போட்டியில் பெண்கள் பிரிவிற்கும் ஆண்கள் பிரிவிற்கு இணையான பரிசுத்தொகை: கனிமொழி கருணாநிதி எம்.பி
    திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில், அகில இந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபடிப் போட்டியின் மூன்றாம் நாள் போட்டியினை நேற்று (08/09/2024) திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
    கபடிப் போட்டியில், தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 30 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் அணிகள் விளையாடுகின்றனர். பரிசுகள் விபரம் ஆண்கள் பிரிவு: முதல் பரிசு - 3,00,000/-, இரண்டாம் பரிசு - 2,00,000/-, மூன்றாம் பரிசு - 1,50,000/-, நான்காம் பரிசு - 1,50,000/-, பரிசுகள் விபரம் பெண்கள் பிரிவு: முதல் பரிசு - 2,00,000/-, இரண்டாம் பரிசு - 1,50,000/-, மூன்றாம் பரிசு - 1,00,000/-, நான்காம் பரிசு -1,00,000/-. வெற்றி பெற்றவர்களுக்குச் சுழற்கோப்பைகள், ஆட்டநாயகன் விருதுகள், தொடர் ஆட்டநாயகன் விருதுகள் என மொத்தம் 25 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
    கனிமொழி கருணாநிதி எம்.பி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெண்கள் பிரிவிற்கும் முதல் பரிசு - 3,00,000/-, இரண்டாம் பரிசு - 2,00,000/-, மூன்றாம் பரிசு - 1,50,000/-, நான்காம் பரிசு - 1,50,000/- என மாற்றி அமைக்கப்பட்டது.
    விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: தமிழகத்திற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகைதந்து இருக்கும் அனைத்து வீரர்களையும் வரவேற்கிறேன், உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். தமிழ்நாட்டுக்கு அன்பான வரவேற்பு என்று நான் சொல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் தமிழகம் எப்போதும் அன்பாக வரவேற்கும். நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திருப்பி செல்லும்போது, தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் சில இனிமையான நினைவுகளைப் பெறுவீர்கள் என நம்புகிறேன்.
    தென் தமிழகத்தில் மக்களுடைய மனதிலே நிறைந்து இருக்கக்கூடிய ஒரு விளையாட்டு, 13 ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இங்கே தென் தமிழகத்திலிருந்து அர்ஜுனா விருது பெற கூடிய கபடிப் போட்டி வீரர்களைப் பெற்றிருக்கக் கூடிய பெருமை நமக்கு இருக்கிறது. கபடிப் போட்டியின் மீது பற்று, நேசம் என்பது தென் தமிழக மக்களிடம் அதிகமாக இருக்கக்கூடிய ஒன்று. அதனால் தான், 13 ஆண்டுகளாக இங்கே இருக்கக் கூடிய கழக உடன்பிறப்புகளோடு இணைந்து அதை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஜெகதீஷ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    பல்வேறு இளைஞர்களுக்கு, இளம் பெண்களுக்கு இந்த போட்டிகளில் பங்கு பெறக்கூடிய ஆர்வம். அதுமட்டுமல்லாமல், நாட்டில் பல இடங்களிலிருந்து வரக்கூடிய விளையாட்டு வீரர்களை, வீராங்கனைகளைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு தாங்களும் தேசிய அளவிலான ஒரு விளையாட்டு வீரராக, வீராங்கனையாக வரவேண்டும் என்ற அந்த தன்னம்பிக்கை, அவர்களிடம் இருக்கக்கூடிய விளையாட்டு நுட்பத்தை கத்துக்கக்கூடிய வாய்ப்பு. இது அத்தனையும் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ஆர்வத்தோடு இந்த போட்டிகளைப் பார்க்க வந்திருப்பது என்பது இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
    எத்தனை அணிகள் இந்த கபடிப் போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு 30 ஆண்கள் அணிகள், அதேபோல பெண்கள் 30 அணிகளில் போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஆண் பெண் சமத்துவத்தை நாங்கள் இங்கே கடைப்பிடிக்கிறோம் என்பதையும் பெருமையோடு சொன்னார்.
    தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த வருடப் போட்டியில் பெண்கள் பிரிவிற்கும் முதல் பரிசு - 3,00,000/-, இரண்டாம் பரிசு - 2,00,000/-, மூன்றாம் பரிசு - 1,50,000/-, நான்காம் பரிசு - 1,50,000/- என ஆண்களுக்கு இணையான பரிசு என மாற்றி அமைக்கப்பட்டது.
    ஹிந்தியில் கேள்வி எழுப்பிய விளையாட்டு வீராங்கனைக்கு, கனிமொழி எம்.பி: மன்னிக்கவும், நான் டெல்லியில் இருக்கும்போது, எனக்கு ஹிந்தி புரியவில்லை, உங்களால் ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும். பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவது மிகவும் சவாலானது, அனைத்து சவால்களையும் அவர்கள் தினமும் எதிர்கொள்கிறார்கள் என்று பேசினார்.
    இந்த நிகழ்ச்சியில், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் TPM.மைதீன்கான், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ความคิดเห็น •