TASTY KULFI I குல்பி I SHREE KULFI I R.S PURAM I ஸ்ரீ குல்பி I ஐஸ் கோலா ஸ்பெசல் I KOVAI NERAM I கோவை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2021
  • TASTY KULFI I குல்பி I SHREE KULFI I R.S PURAM I ஸ்ரீ குல்பி I ஐஸ் கோலா ஸ்பெசல் I KOVAI NERAM I கோவை
    ஸ்ரீ குல்பி ஐஸ் - சில்லுனு ஒரு கடை
    இந்த கடை ரொம்ப வருசமாவே இந்த இடத்துல இருக்கு.எப்ப பார்த்தாலும் குல்பிகள் சாரி அம்மணிகள் கூட்டம் அதிகமாவே இருக்கும்.அதுவும் சாயந்திரம் போனால் அவ்ளோதான் நம்ம மனசை மாத்தி வைக்க வேண்டியதுதான்.சரி..நமக்கு சம்பந்தம் இல்லாத ஏரியா அப்படிங்கிறதாலே இத்தனை நாளாய் அந்த பக்கம் போகாமலே இருந்தேன்..இப்போ தான் நாம பதிவர் ஆச்சே...போய் பார்த்துட்டு பதிவ தேத்துவோம் அப்படிங்கற நல்ல எண்ணத்துல தான் போனேன்.(ஹி ஹி ஹி )
    அதுவும் இல்லாமல் இந்த கடை இருக்கிறது R.S.புரம் ஏரியா. இந்த இடத்தை பத்தி சொல்லவே வேணாம்.எப்பவும் அம்மணிகள் மயம்தான்.DB ரோட்டுல அவ்ளோ கடைகள் இருக்கு. அதனாலே இங்க அம்மணிகள் செம கலக்கலா இருக்கிற ஏரியா.வித விதமா, ரகம் ரகமா, வயசு வித்தியாசம் இல்லாம சும்மா குளுகுளுன்னு ஊட்டிக்கே ஏசி போட்ட மாதிரி இருப்பாங்க......(போதும்...தம்பி...போதும்....செல்ப் கண்ட்ரோல்)
    கடைக்கு போய் என்னென்ன இருக்கு அப்படிங்கிறத கேட்டுட்டு ஆர்டர் பண்ணினோம்.இங்க ஏகப்பட்ட வகையில் குல்பி குச்சி ( stick ) இருக்கு.அதிகமா அம்மணிகள் ஏன் இதை விரும்பறாங்கன்னு தெரியல.அப்புறம் பலூடா.இத எப்படி கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல..என்னென்னமோ கலக்குறாங்க.கலர் சேமியா, பால்கோவா, எசன்ஸ், அப்புறம் ஒரு சீட்ஸ், (கேரளாவில் இது அதிகமாக குளிர் பானங்களில் பயன்படுத்துவர், தண்ணியில் போட்ட வுடன் கொஞ்சம் வழ வழப்பு தன்மை வந்திடும்.உடலுக்கு குளிர்சசி வேற.)இதல்லாம் போட்டு தராங்க.செம டேஸ்டா இருக்கு.டிரை நட்ஸ் பலூடா..இதுவும் நல்ல டேஸ்ட்.இதுலயும் நிறைய வகை.அதுவும் மலாய் பலூடா.செம டேஸ்ட்.
    சின்ன சின்ன மண்பாண்ட குப்பியில் குல்பி வேற வைத்து இருக்காங்க. சில்லுனு அதுவும் ரொம்ப சுவையா இருக்கு.
    அப்புறம் கோலா ஐஸ்...அரைச்ச ஐஸ் துகள்களை ஒரு டம்ளர்ல போட்டு அமுத்தி அதை எடுத்து அதுல நிறைய பிளேவர் ல சிரப் ,கிரீன் மேங்கோ, ஸ்ட்ராபெர்ரி, கிரேப்ஸ்,ஆரஞ்சு, என எல்லா பிளேவரும் ஊத்தி ஒரு டம்ளர் ல போட்டு தராங்க..அப்படியே எடுத்த உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடும் போது நாமளும் ஒரு குழந்தை ஆகிவிடுகிறோம்...
    ரொம்ப திகட்டுது அதிக சுவையினால், ஆனாலும் நன்றாக இருக்கிறது.(கலர் கலரா ஊத்தறாங்க...இது அனுமதிக்க பட்ட நிறமா என்று தெரியவில்லை)
    கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்.முக்கியமா குழந்தைகளுக்கு.அவங்களை கூட்டிட்டு போற பெரியவங்களும் கண்டிப்பா சாப்பிடுவாங்க.அப்புறம் அந்த பக்கம் அதிகமா வர்ற நம்ம அம்மணிகள் ..ஹி ஹி ஹி...
    இந்த கடைக்கு பக்கமா தான் KFC இருக்கு.அங்க ஒரு வெட்டு வெட்டிட்டு அப்புறம் இங்க ஒரு கட்டு கட்ட செம இடம்.
    #foodie #food #foodvlogger #foodtaste #foodie #foodreview #foodblog #foodvlog #vlog #blog #food #taste #tastybud #tastefellow #spice #kovaineram #sweet #jeev #cooking #cookvideo #making #makingmethod #cookpreparation #veg #nonveg #foodlover #foodcombo #selfcook #hotels #hotel #shop #kovai #coimbatore #covai #travel #travelfood #traveller #solotraveller #yummy #yummytaste #owncooking #streetfood #vegetarian #nonvegetarian #tamilfoodie #tamilnadu #tamilfood #youtuber #todaytrending #youtubestudio #YTviral #YTvideo #videos #tamilvideos #tamilvedio #youtube #drinks #drink #covaifood #kovaifood #breakfast #lunch #foodreviewtamil #foodtamilreview #foodreviewenglish #foodenglishreview #sugardaddy #sugarmummy #eat #eating #lovefood #foodlovers #luvfood #tastylove

ความคิดเห็น •