திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாறு | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech | Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2023
  • திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாறு | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech | Part 2
    #ஆன்மீகசொற்பொழிவு #aanmeegam #aanmegam #tamildevotional #sosomeenakshisundaram #periyapuranam #nayanmar #பெரியபுராணம்

ความคิดเห็น • 32

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள்
    அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து
    சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத்
    திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
    மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
    விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்து
    பத்தருடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர்
    தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில். 267
    பந்து அணை மெல் விரலாளும்
    பரமரும் பாய் விடை மீது
    வந்து பொன் வள்ளத்து அளித்த
    வரம்பில் ஞானத்து அமுது உண்ட
    செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம்
    கேட்டு இறைஞ்சு தற்காக
    அந்தணர் பூந்தராய் தன்னில்
    அணைந்தனர் நாவுக் கரையர். 268
    வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து
    அணைந்தார் எனக் கேட்டுப்
    பூக்கமழ் வாசத் தடம்
    சூழ் புகலிப் பெருந்தகையாரும்
    ஆக்கிய நல் வினைப் பேறு என்று
    அன்பர் குழாத் தொடும் எய்தி
    ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்
    கொள எய்தும் பொழுதில். 269
    சிந்தையிடை அறா அன்பும்
    திருமேனி தன்னில் அசைவும்
    கந்தம் மிகையாம் கருத்தும்
    கை உழவாரப் படையும்
    வந்திழி கண்ணீர் மழையும் வடிவில்
    பொலி திரு நீறும்
    அந்தம் இலாத் திரு வேடத்து
    அரசும் எதிர் வந்து அணைய. 270
    கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில்
    பரவு மெய்க் காதல்
    தொண்டர் திருவேடம் நேரே
    தோன்றியது என்று தொழுதே
    அண்டரும் போற்ற அணைந்து அங்கு
    அரசும் எதிர் வந்து இறைஞ்ச
    மண்டிய ஆர்வம் பெருக மதுர
    மொழி அருள் செய்தார். 271
    பேரிசை நாவுக்கரசைப் பிள்ளையார்
    கொண்டு உடன் போந்து
    போர் விடையார் திருத்தோணிப் பொற்
    கோயில் உட்புகும் போதில்
    ஆர்வம் பெருக அணையும்
    அவருடன் கும்பிட்டு அருளால்
    சீர்வளர் தொண்டரைக் கொண்டு
    திருமாளிகையினில் சேர்ந்தார். 272
    அணையும் திருத்தொண்டர் தம்மோடு
    ஆண்ட அரசுக்கும் அன்பால்
    இணையில் திரு அமுது ஆக்கி
    இயல்பால் அமுது செய்வித்துப்
    புணரும் பெருகு அன்பு நண்பும்
    பொங்கிய காதலில் கும்பிட்டு
    உணரும் சொல் மாலைகள் சாத்தி
    உடன் மகிழ்வு எய்தி உறைந்தார். 273
    அந்நாள் சில நாள்கள்
    செல்ல அருள் திருநாவுக்கரசர்
    மின்னார் சடை அண்ணல் எங்கும்
    மேவிடம் கும்பிட வேண்டி
    பொன் மார்பில் முந்நூல் புனைந்த
    புகலிப் பிரான் இசைவோடும்
    பின்னாக எய்த இறைஞ்சிப்
    பிரியாத நண்பொடும் போந்தார். 274
    வாக்கின் தனி மன்னர் ஏக
    மாறாத் திரு உளத்தோடும்
    பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த
    புகலியின் மீண்டும் புகுந்து
    தேக்கிய மாமறை வெள்ளத்
    திருத்தோணி வீற்று இருந்தாரைத்
    தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது
    அங்கு உறைகின்ற நாளில். 275
    செந்தமிழ் மாலை விகற்பச்
    செய்யுள்களால் மொழி மாற்றும்
    வந்த சொல் சீர் மாலை மாற்றும்
    வழி மொழி எல்லா மடக்குச்
    சந்த வியமகம் ஏகபாதம் தமிழ்
    இருக்குக் குறள் சாத்தி
    எந்தைக்கு எழு கூற்றிருக்கை
    ஈரடி ஈரடி வைப்பு. 276
    நாலடி மேல் வைப்பு மேன்மை
    நடையின் முடுகும் இராகம்
    சால்பினில் சக்கரம் ஆதி
    விகற்பங்கள் சாற்றும் பதிக
    மூல இலக்கியமாக எல்லாப்
    பொருள்களும் முற்ற
    ஞாலத்து உயர் காழியாரைப்
    பாடினார் ஞான சம்பந்தர். 277
    இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப்
    பெரும் பாணனார் தாமும்
    மன்னும் இசை வடிவான
    மதங்க சூளா மணியாரும்
    பன்னிய ஏழ் இசை பற்றிப்
    பாடப் பதிகங்கள் பாடிப்
    பொன்னின் திருத்தாளம் பெற்றார்
    புகலியில் போற்றி இருந்தார். 278
    அங்கண் அமர் கின்ற நாளில்
    அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும்
    திங்கள் சடை அண்ணலார்தம்
    திருப்பதி யாவையும் கும்பிட்டு
    எங்கும் தமிழ் மாலை பாடி
    ஏத்தி இங்கு எய்துவன் என்று
    தம் குலத் தாதையா ரோடும்
    தவ முனிவர்க்கு அருள் செய்தார். 279
    பெருகு விருப்புடன் நோக்கிப்
    பெற்ற குலத் தாதையாரும்
    அருமையால் உம்மைப் பயந்த அதனால்
    பிரிந்து உறைவு ஆற்றேன்
    இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும்
    யான் செய வேண்டும்
    ஒருமையால் இன்னம் சிலநாள் உடன்
    எய்துவேன் என்று உரைத்தார். 280

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    மருவலார் புரம் முனிந்தவர்
    திரு முன்றில் வலம் கொண்டு
    உருகும் அன்புடன் உச்சி
    மேல் அஞ்சலியினராய்த்
    திருவலஞ்சுழி உடையவர்
    சேவடித் தலத்தில்
    பெருகும் ஆதரவுடன் பணிந்து
    எழுந்தனர் பெரியோர். 381
    ஞான போனகர் நம்பர் முன்
    தொழுது எழும் விருப்பால்
    ஆன காதலில் அங்கணவர்
    தமை வினவும்
    ஊனமில் இசையுடன்
    விளங்கிய திருப்பதிகம்
    பானலார் மணிகண்டரைப்
    பாடினார் பரவி. 382
    புலன் கொள் இன் தமிழ்
    போற்றினர் புறத்தினில் அணைந்தே
    இலங்கு நீர்ப் பொன்னி
    சூழ் திருப்பதியினில் இருந்து
    நலம் கொள் காதலின்
    நாதர்தாள் நாள்தொறும் பரவி
    வலஞ்சுழிப் பெருமான் தொண்டர்
    தம்முடன் மகிழ்ந்தார். 383
    மகிழ்ந்த தன்தலை வாழும்
    அந் நாளிடை வானில்
    திகழ்ந்த ஞாயிறு துணைப்
    புணர் ஓரை உள் சேர்ந்து
    நிகழ்ந்த தன்மையில் நிலவும்
    ஏழ் கடல் நீர்மை குன்ற
    வெகுண்டு வெம் கதிர்
    பரப்பலின் முதிர்ந்தது வேனில். 384
    தண் புனல் குளிர் கால்
    நறும் சந்தனத் தேய்வை
    பண்பு நீடிய வாச மென்
    மலர் பொதி பனி நீர்
    நண்புடைத் துணை நகை
    மணி முத்தணி நாளும்
    உண்ப மாதுரியச் சுவை
    உலகு உளோர் விரும்ப. 385
    அறல் மலியும் கான் ஆற்றின்
    நீர் நசையால் அணையுமான்
    பெறல் அரிய புனல் என்று
    பேய்த்தேரின் பின் தொடரும்
    உறை உணவு கொள்ளும் புள்
    தேம்பிஅயல் இரை தேரும்
    பறவை சிறை விரித்து
    ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால். 386
    நீண் நிலை மாளிகை மேலும்
    நிலா முன்றின் மருங்கினும்
    வாண் நிழல் நல் சோலையிலும்
    மலர் வாவிக் கரை மாடும்
    பூண் நிலவு முத்து அணிந்த
    பூங்குழலார் முலைத் தடத்தும்
    காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து
    மாந்தர் கலந்து உறைவாரால். 387
    மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க்
    கமல முகை விரியக்
    குயில் ஒடுங்காச் சோலையின் மென்
    தளிர் கோதிக் கூவி எழத்
    துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும்
    துயில் பயிலச் சுடர் வானில்
    வெயில் ஒடுங்கா வெம்மை தரும்
    வேனில் விரி தரு நாளில். 388
    சண்பை வரும் பிள்ளையார்
    சடா மகுடர் வலஞ்சுழியை
    எண் பெருகத் தொழுது
    ஏத்திப் பழையாறை எய்துதற்கு
    நண்பு உடைய அடியார்களுடன்
    போத நடந்தருளி
    விண் பொரு நீள் மதிள் ஆறை
    மேல் தளி சென்று எய்தினார். 389
    திருவாறை மேற்றளியில் திகழ்ந்து
    இருந்த செந்தீயின்
    உருவாளன் அடிவணங்கி உருகிய
    அன்பொடு போற்றி
    மருவாரும் குழல் மலையாள்
    வழிபாடு செய்ய அருள்
    தருவார் தம் திரு சத்தி
    முற்றத்தின் புறம் சேர்ந்தார். 390
    திருச் சத்தி முற்றத்தில்
    சென்று எய்தித் திருமலையாள்
    அருச்சித்த சேவடிகள் ஆர்வம்
    உறப் பணிந்து ஏத்திக்
    கருச் சுற்றில் அடையாமல்
    கை தருவார் கழல் பாடி
    விருப்புற்றுத் திருப் பட்டீச்சரம்
    பணிய மேவுங்கால். 391
    வெம்மை தரு வேனிலிடை
    வெயில் வெப்பம் தணிப்பதற்கு
    மும்மை நிலைத் தமிழ்
    விரகர் முடிமீதே சிவபூதம்
    தம்மை அறியாதபடி தண்
    தரளப் பந்தர் எடுத்து
    எம்மை விடுத்து அருள் புரிந்தார்
    பட்டீசர் என்று இயம்ப. 392
    அவ்வுரையும் மணி முத்தின்
    பந்தரும் ஆகாயம் எழச்
    செவ்விய மெய்ஞ்ஞானம் உணர்
    சிரபுரத்துப் பிள்ளையார்
    இவ் வினைதான் ஈசர் திரு அருளால்
    ஆகில் இசைவது என
    மெய் விரவு புளகம் உடன்
    மேதினியின் மிசைத் தாழ்ந்தார். 393
    அது பொழுதே அணி முத்தின்
    பந்தரினை அருள் சிறக்கக்
    கதிர் ஒளிய மணிக் காம்பு
    பரிசனங்கள் கைக் கொண்டார்
    மதுர மொழி மறைத் தலைவர்
    மருங்கு இமையோர் பொழிவாசப்
    புது மலரால் அப்பந்தர்
    பூம் பந்தரும் போலும். 394
    தொண்டர் குழாம் ஆர்ப்பு
    எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி
    எண் திசையும் நிறைந்து
    ஓங்க எழுந்தருளும் பிள்ளையார்
    வெண் தரளப் பந்தர் நிழல்
    மீது அணையத் திருமன்றில்
    அண்டர்பிரான் எடுத்த திருவடி
    நீழல் என அமர்ந்தார். 395

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக்
    கலந்து அடியாருடன் காதல் பொங்கக்
    கொண்ட விருப்புடன் தாழ்ந்து
    இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
    தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று
    தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில்
    அண்டர் பிரான் தன் அருளின்
    வண்ணம் அடியார் பெருமையில் கேட்டருளி. 352
    வினவி எடுத்த திருப் பதிகம்
    மேவு திருக்கடைக் காப்பு தன்னில்
    அனைய நினைவு அரியோன் செயலை
    அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை
    புனைவுறு பாடலில் போற்றி செய்து
    போந்து புகலிக் கவுணியனார்
    துனை புனல் பொன்னித் திரை வலம் கொள்
    சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார். 353
    அப்பர் சோற்றுத் துறை
    சென்று அடைவோம் என்று
    ஒப்பில் வண் தமிழ்
    மாலை ஒருமையால்
    செப்பியே சென்று
    சேர்ந்தனர் சேர்விலார்
    முப்புரம் செற்ற முன்னவர்
    கோயில் முன். 354
    தொல்லை நீள் திருச் சோற்றுத்
    துறை உறை
    செல்வர் கோயில் வலம்
    கொண்டு தேவர்கள்
    அல்லல் தீர்க்க நஞ்சு
    உண்ட பிரான் அடி
    எல்லையில் அன்பு கூர
    இறைஞ்சினார். 355
    இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன்னிசை
    நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு
    உறைந்து வந்து அடியாருடன் எய்தினார்
    சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில். 356
    வேத வேதியர் வேதி குடியினில்
    நாதர் கோயில் அணைந்து நலம் திகழ்
    பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து
    ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை. 357
    எழுது மா மறையாம் பதிகத்து இசை
    முழுதும் பாடி முதல்வரைப்
    போற்றி முன்
    தொழுது போந்து வந்து
    எய்தினார் சோலை சூழ்
    பழுதில் சீர்த்திரு வெண்ணிப்
    பதியினில். 358
    வெண்ணி மேய விடையவர் கோயிலை
    நண்ணி நாடிய காதலின் நாண் மதிக்
    கண்ணியார் தம் கழல் இணை போற்றியே
    பண்ணில் நீடும் பதிக முன் பாடினார். 359
    பாடி நின்று பரவிப் பணிந்து போய்
    ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன
    மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
    நீடு சண்பை நிறை புகழ் வேதியர். 360
    மொய் தரும் சோலை சூழ்
    முளரி முள்ளடவி போய்
    மெய் தரும் பரிவிலான்
    வேள்வியைப் பாழ்படச்
    செய்த சங்கரர்
    திருச்சக்கரப் பள்ளி முன்பு
    எய்த வந்தருளினார் இயல்
    இசைத் தலைவனார். 361
    சக்கரப் பள்ளியார் தம்
    தனிக் கோயில் உள்
    புக்கு அருத்தியின் உடன் புனை
    மலர்த் தாள் பணிந்து
    அக்கரைப் பரமர்பால் அன்பு
    உறும் பரிவு கூர்
    மிக்க சொல் தமிழினால்
    வேதமும் பாடினார். 362
    தலைவர் தம் சக்கரப் பள்ளி
    தன்னிடை அகன்று
    அலைபுனல் பணைகளின் அருகு
    போய் அருமறைப்
    புலன் உறும் சிந்தையார்
    புள்ள மங்கைப் பதி
    குலவும் ஆலந்துறைக்
    கோயிலைக் குறுகினார். 363
    மன்னும் அக் கோயில்
    சேர் மான் மறிக் கையர்தம்
    பொன் அடித்தலம் உறப்
    புரிவொடும் தொழுது எழுந்து
    இன்னிசைத் தமிழ் புனைந்து
    இறைவர் சேலூருடன்
    பன்னு பாலைத் துறைப்
    பதி பணிந்து ஏகினார். 364
    காவின் மேல் முகில் எழும்
    கமழ் நறும் புறவு போய்
    வாவி நீடு அலவன் வாழ்
    பெடையுடன் மலர் நறும்
    பூவின் மேல் விழைவுறும்
    புகலியார் தலைவனார்
    சேவின் மேல் அண்ணலார்
    திருநலூர் நண்ணினார். 365

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    ஆண்டகையாரும் இசைந்து அங்கு
    அம்பொன் திருத்தோணி மேவும்
    நீண்ட சடையார் அடிக்கீழ் பணிவுற்று
    நீடு அருள் பெற்றே
    ஈண்டு புகழ்த் தாதையார்
    பின் எய்திட யாழ்ப்பாணரோடும்
    காண் தகு காழி தொழுது
    காதலினால் புறம் போந்தார். 281
    அத்திரு மூதூரின் உள்ளார்
    அமர்ந்து உடன்போதுவார் போத
    மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை
    கொண்டு மீள்வார்கள் மீள
    முத்தின் சிவிகை மேல் கொண்டு
    மொய் ஒளித் தாமம் நிரைத்த
    நித்தில வெண்குடை மீது நிறை
    மதி போல நிழற்ற. 282
    சின்னம் தனிக் காளம் தாரை
    சிரபுரத்து ஆண்டகை வந்தார்
    என்னும் தகைமை விளங்க ஏற்ற
    திருப் பெயர் சாற்ற
    முன் எம்மருங்கும் நிரத்த முரசு
    உடைப் பல்லியம் ஆர்ப்ப
    மன்னும் திருத்தொண்டரானார் வந்து
    எதிர் கொண்டு வணங்க. 283
    சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு
    பொற் கோடு முழங்க
    மங்கல வாழ்த்துரை எங்கும் மல்க
    மறை முன் இயம்பத்
    திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி
    எங்கும் முன் சென்று
    பொங்கிய காதலில் போற்றப்
    புகலிக் கவுணியர் போந்தார். 284
    திருமறைச் சண்பையர் ஆளி
    சிவனார் திருக்கண்ணார் கோயில்
    பெரு விருப்பால் அணைந்து ஏத்திப்
    பிஞ்ஞகர் கோயில் பிறவும்
    உருகிய அன்பால் இறைஞ்சி உயர்
    தமிழ் மாலை கொண்டு ஏத்தி
    வரு புனல் பொன்னி வடபால்
    குட திசை நோக்கி வருவார். 285
    போற்றிய காதல் பெருக
    புள்ளிருக்கும் திருவேளூர்
    நால் தடம் தோளுடை மூன்று
    நயனப் பிரான் கோயில் நண்ணி
    ஏற்ற அன்பு எய்த வணங்கி
    இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
    ஆற்றிய பூசனை சாற்றி
    அஞ்சொற் பதிகம் அணிந்தார். 286
    நீடு திரு நின்றியூரின் நிமலனார்
    நீள் கழல் ஏத்திக்
    கூடிய காதலில் போற்றிக்
    கும்பிட்டு வண் தமிழ் கூறி
    நாடு சீர் நீடூர் வணங்கி
    நம்பர் திருப் புன்கூர் நண்ணி
    ஆடிய பாதம் இறைஞ்சி
    அருந் தமிழ் பாடி அமர்ந்தார். 287
    அங்கு நின்று ஏகி அப்பாங்கில்
    அரனார் மகிழ் கோயிலான
    எங்கணும் சென்று பணிந்தே
    ஏத்தி இமவான் மடந்தை
    பங்கர் உறை பழ மண்ணிப்
    படிக்கரைக் கோயில் வணங்கித்
    தங்கு தமிழ் மாலை சாத்தித்
    திருக்குறுக்கைப் பதி சார்ந்தார். 288
    திருக்குறுக்கைப் பதி மன்னித்
    திரு வீரட்டானத்து அமர்ந்த
    பொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து
    அன்னியூர் சென்று போற்றிப்
    பருக்கை வரை உரித்தார்
    தம் பந்தணை நல்லூர் பணிந்து
    விருப்புடன் பாடல் இசைந்தார்
    வேதம் தமிழால் விரித்தார். 289
    அப்பதி போற்றி அகல்வார்
    அரனார் திருமணஞ் சேரி
    செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று
    தொழுது இசை பாடி
    எப்பொருளும் தரும் ஈசர் எதிர்
    கொள் பாடிப் பதி எய்தி
    ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு
    வேள்விக் குடி உற்றார். 290
    செழுந்திரு வேள்விக் குடியில்
    திகழ் மணவாள நற்கோலம்
    பொழிந்த புனல் பொன்னி மேவும்
    புனிதத் துருத்தி இரவில்
    தழும்பிய தன்மையும் கூடத் தண்
    தமிழ் மாலையில் பாடிக்
    கொழுந்து வெண் திங்கள்
    அணிந்தார் கோடிகாவிற் சென்றடைந்தார். 291
    திருக்கோடி காவில் அமர்ந்த
    தேவர் சிகாமணி தன்னை
    எருக்கோடு இதழியும் பாம்பும்
    இசைந்து அணிந்தானை வெள்ளேனப்
    பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து
    சொல் மாலைகள் பாடிக்
    கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர்
    கை தொழச் சென்றார். 292
    கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக்
    கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து
    மஞ்சணி மாமதில் சூழும்
    மாந்துறை வந்து வணங்கி
    அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி
    அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
    செஞ்சடை வேதியர் மன்னும்
    திருமங்கலக் குடி சேர்ந்தார். 293
    வெங் கண் விடை மேல் வருவார்
    வியலூர் அடிகளைப் போற்றித்
    தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப்
    பதிகத் தொடை சாத்தி
    அங்கண் அமர்வார் தம் முன்னே
    அருள் வேடம் காட்டத் தொழுது
    செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து
    தேவன் குடி சேர்ந்தார். 294
    திருந்து தேவன் குடி மன்னும்
    சிவ பெருமான் கோயில் எய்திப்
    பொருந்திய காதலில் புக்குப்
    போற்றி வணங்கிப் புரிவார்
    மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும்
    இவர் வேடமாம் என்று
    அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில்
    ஞானத்து அமுது உண்டார். 295

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    பாரின் மிசை அன்பர்
    உடன் வருகின்றார் பன்னகத்தின்
    ஆரம் அணிந்தவர் தந்த அருள்
    கருணைத் திறம் போற்றி
    ஈர மனம் களி தழைப்ப
    எதிர் கொள்ள முகம் மலர்ந்து
    சேர வரும் தொண்டர்
    உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார். 396
    சென்று அணைந்து திருவாயில்
    புறத்து இறைஞ்சி உள்புக்கு
    வென்றி விடையவர் கோயில் வலம்
    கொண்டு வெண் கோட்டுப்
    பன்றி கிளைத்து அறியாத
    பாத தாமரை கண்டு
    முன் தொழுது விழுந்து எழுந்து
    மொழி மாலை போற்றி இசைத்தார். 397
    அருள் வெள்ளத் திறம்
    பரவி அளப்பரிய ஆனந்தப்
    பெரு வெள்ளத்திடை மூழ்கிப்
    பேராத பெருங்காதல்
    திருவுள்ளப் பரிவுடனே செம்பொன்
    மலை வல்லியார்
    தரு வள்ளத்து அமுது உண்ட
    சம்பந்தர் புறத்து அணைந்தார். 398
    அப்பதியில் அமர்கின்ற
    ஆளுடைய பிள்ளையார்
    செப்பரும் சீர் திருவாறை வட
    தளியில் சென்று இறைஞ்சி
    ஒப்பரிய தமிழ் பாடி
    உடன் அமரும் தொண்டரொடு
    எப்பொருளுமாய் நின்றார் இரும்
    பூளை எய்தினார். 399
    தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்
    பூளை சென்று எய்தக்
    காவண நீள் தோரணங்கள் நாட்டி
    உடன் களி சிறப்பப்
    பூவண மாலைகள் நாற்றிப் பூரண
    பொற்குடம் நிரைத்து அங்கு
    யாவர்களும் போற்றி இசைப்பத்
    திருத் தொண்டர் எதிர் கொண்டார். 400
    வண் தமிழின் மொழி
    விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
    தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு
    அவர் தொழத் தாமும் தொழுதே
    அண்டர்பிரான் கோயிலினை அணைந்து
    இறைஞ்சி முன் நின்று
    பண்டரும் இன்னிசைப் பதிகம்
    பரம் பொருளைப் பாடுவார். 401
    நிகர் இலா மேருவரை
    அணுவாக நீண்டானை
    நுகர்கின்ற தொண்டர் தமக்கு
    அமுதாகி நொய்யானை
    தகவு ஒன்ற அடியார்கள் தமை
    வினவித் தமிழ் விரகர்
    பகர்கின்ற அருமறையின் பொருள்
    விரியப் பாடினார். 402
    பாடும் அரதைப் பெரும்
    பாழியே முதலாகச்
    சேடர் பயில் திருச்சேறை
    திருநாலூர் குட வாயில்
    நாடிய சீர் நறையூர் தென்
    திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
    நீடு தமிழ்த் தொடை புனைந்து
    அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார். 403
    அங்கண் இனிது அமரு நாள்
    அடல் வெள் ஏனத்து உருவாய்ச்
    செங்கண் நெடுமால் பணியும்
    சிவபுரத்துச் சென்று அடைந்து
    கங்கைச் சடை கரந்தவர் தம்
    கழல் வணங்கிக் காதலினால்
    பொங்குமிசைத் திருப்பதிகம் முன்
    நின்று போற்றி இசைத்தார். 404
    போற்றி இசைத்துப் புனிதர் அருள்
    பெற்றுப் போந்து எவ் உயிரும்
    தோற்றுவித்த அயன் போற்றும்
    தோணிபுரத்து அந்தணனார்
    ஏற்றும் இசை ஏற்று உகந்த
    இறைவர் தமை ஏத்துதற்கு
    நாற்றிசை யோர் பரவும்
    திருக் குடமூக்கு நண்ணினார். 405
    தேமருவு மலர்ச் சோலைத்திரு
    குடமூக்கினில் செல்வ
    மாமறையோர் பூந்தராய்
    வள்ளலார் வந்தருளத்
    தூமறையின் ஒலி பெருகத்
    தூரிய மங்கலம் முழங்க
    கோ முறைமை எதிர் கொண்டு
    தம்பதி உள் கொடு புக்கார். 406
    திருஞான சம்பந்தர் திருக்குட
    மூக்கினைச் சேர
    வருவார் தம் பெருமானை
    வண் தமிழின் திருப்பதிகம்
    உருகா நின்று உளம் மகிழ்க்
    குட மூக்கை உகந்து இருந்த
    பெருமான் எம் இறை என்று
    பெருகு இசையால் பரவினார். 407
    வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து
    இருந்த வான் பொருளைச்
    சிந்தை மகிழ்வுற வணங்கித்
    திருத்தொண்டருடன் செல்வார்
    அந்தணர்கள் புடை சூழ்ந்து
    போற்றி இசைப்ப அவரொடும்
    கந்த மலர் பொழில் சூழ்ந்த
    காரோணம் சென்று அடைந்தார். 408
    பூ மருவும் கங்கை முதல்
    புனிதமாம் பெரும் தீர்த்தம்
    மா மகம் தான் ஆடுதற்கு
    வந்து வழிபடும் கோயில்
    தூ மருவும் மலர்க் கையால்
    தொழுது வலம் கொண்டு அணைந்து
    காமர் கெட நுதல் விழித்தார்
    கழல் பணிந்து கண் களித்தார். 409
    கண்ணாரும் அருமணியைக்
    காரோணத்து ஆர் அமுதை
    நண்ணாதார் புரம் எரித்த
    நான் மறையின் பொருளானைப்
    பண் ஆர்ந்த திருப்பதிகம்
    பணிந்து ஏத்திப் பிறபதியும்
    எண் ஆர்ந்த சீர்
    அடியாருடன் பணிவுற்று எழுந்தருளி. 410

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    மன்றலங் கழனி சூழ்
    திரு நலூர் மறைவலோர்
    துன்று மங்கல வினைத்
    துழனியால் எதிர் கொளப்
    பொன் தயங்கு ஒளி
    மணிச் சிவிகையில் பொலிவுறச்
    சென்று அணைந்தருளினார்
    சிரபுரச் செம்மலார். 366
    நித்திலச் சிவிகை மேல்
    நின்று இழிந்து அருளியே
    மொய்த்த அந்தணர் குழாம் முன்
    செலப் பின் செலும்
    பத்தரும் பரிசனங்களும்
    உடன் பரவவே
    அத்தர் தம் கோபுரம்
    தொழுது அணைந்து அருளினார். 367
    வெள்ளி மால் வரையை நேர்
    விரிசுடர்க் கோயிலைப்
    பிள்ளையார் வலம் வரும்
    பொழுதினில் பெருகுசீர்
    வெள்ள ஆனந்தம் மெய் பொழிய
    மேல் ஏறி நீர்
    துள்ளுவார் சடையரைத் தொழுது
    முன் பரவுவார். 368
    பரவு சொல் பதிகம்
    முன் பாடினார் பரிவுதான்
    வர அயர்த்து உருகு நேர்
    மனனுடன் புறம் அணைந்து
    அரவுடைச் சடையர்
    பேரருள் பெறும் பெருமையால்
    விரவும் அப்பதி அமர்ந்து
    அருளியே மேவினார். 369
    அன்ன தன்மையில் அப்பதியினில்
    அமர்ந்து அருளி
    மின் நெடும் சடை விமலர்
    தாள் விருப்பொடு வணங்கிப்
    பன்னும் இன்னிசைப் பதிகமும்
    பல முறை பாடி
    நன்னெடும் குல நான்
    மறையவர் தொழ நயந்தார். 370
    நீடும் அப்பதி நீங்குவார்
    நிகழ் திருநல்லூர்
    ஆடுவார் திருவருள் பெற
    அகன்று போந்து அங்கண்
    மாடும் உள்ளன வணங்கியே
    பரவி வந்து அணைந்தார்
    தேடும் மால் அயற்கு
    அரியவர் திருக்கருகாவூர். 371
    வந்து பந்தர் மாதவி
    மணம் கமழ் கருகாவூர்ச்
    சந்த மாமறை தந்தவர்
    கழல் இணை தாழ்ந்தே
    அந்தம் இல்லவர் வண்ணமாம்
    அழல் வண்ணம் என்று
    சிந்தை இன்புறப் பாடினார்
    செழுந் தமிழ்ப் பதிகம். 372
    பதிக இன்னிசை பாடிப்
    போய்ப் பிறப்பதி பலவும்
    நதி அணிந்தவர் கோயில்கள்
    நண்ணியே வணங்கி
    மதுர முத்தமிழ் வாசகர்
    அணைந்தனர் மன்றுள்
    அதிர் சிலம்பு அடியார் மகிழ்
    அவள் இவள் நல்லூர். 373
    மன்னும் அப்பதி வானவர்
    போற்றவும் மகிழ்ந்த
    தன்மையார் பயில் கோயில்
    உள் தம்பரிசு உடையார்
    என்னும் நாமமும் நிகழ்ந்திட
    ஏத்தி முன் இறைஞ்சிப்
    பன்னு சீர்ப் பதி பலவும்
    அப்பால் சென்று பணிவார். 374
    பழுதில் சீர்த் திருப் பரிதி
    நல் நியமும் பணிந்து அங்கு
    எழுது மாமறையாம் பதிகத்து
    இசை போற்றி
    முழுதும் ஆனவர் கோயில்கள்
    வணங்கியே முறைமை
    வழுவிலார் திருப்பூவனூர் வணங்கி
    வந்து அணைந்து. 375
    பொங்கு காதலில் போற்றி
    அங்கருளுடன் போந்து
    பங்கயத் தடம் பணைப் பதி
    பலவும் முன் பணிந்தே
    எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி
    எடுக்க வந்து அணைந்தார்
    அங்கணர்க்கு இடம் ஆகிய
    பழம்பதி ஆவூர். 376
    பணியும் அப்பதிப் பசுபதி
    ஈச்சரத்தின் இனிது இருந்த
    மணியை உள் புக்கு
    வழிபடும் விருப்பினால் வணங்கித்
    தணிவு இல் காதலினால் தண்
    தமிழ் மாலைகள் சாத்தி
    அணி விளங்கிய திருநலூர்
    மீண்டும் வந்து அணைந்தார். 377
    மறை விளங்கும் அப்பதியினில்
    மணிகண்டர் பொற்றாள்
    நிறையும் அன்பொடு வணங்கியே
    நிகழ்பவர் நிலவும்
    பிறை அணிந்தவர் அருள் பெறப்
    பிரச மென் மலர் வண்டு
    அறை நறும் பொழில்
    திரு வலஞ் சுழியில் வந்து அணைந்தார். 378
    மதி புனைந்தவர் வலஞ்சுழி
    மருவு மாதவத்து
    முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்
    தம் முன் வந்து
    எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர்
    எதிர் செல மதியைக்
    கதிர் செய் வெண் முகில்
    குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார். 379
    கலந்த அன்பர்கள் தொழுது
    எழக் கவுணியர் தலைவர்
    அலர்ந்த செங்கமலக் கரம்
    குவித்து உடன் அணைவார்
    வலஞ்சுழிப் பெருமான் மகிழ்
    கோயில் வந்து எய்திப்
    பொலம் கொள் நீள் சுடர்க்
    கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார். 380

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    அங்கண் அகன்று அம் மருங்கில் அங்கணர்
    தம் பதி பிறவும் அணைந்து போற்றிச்
    செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும்
    வயல் மதுவால் சேறு மாறாப்
    பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி
    வட கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர்
    நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிரமம்
    பணிய நண்ணும் போதில். 310
    அந் நகரில் கொல்லி மழவன் பயந்த அரும்
    பெறல் ஆர் அமுத மென் சொல்
    கன்னி இள மடப்பிணையாம் காமரு கோமளக்
    கொழுந்தின் கதிர் செய் மேனி
    மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து
    அணைவுற மெய் வருத்தம் எய்தித்
    தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத்
    தானும் மனம் தளர்வு கொள்வான். 311
    மற்று வேறு ஒருபரிசால் தவிராமை
    மறி வளரும் கையார் பாதம்
    பற்றியே வரும் குலத்துப் பான்மையினான்
    ஆதலினால் பரிவு தீரப்
    பொற்றொடியைக் கொடு வந்து போர்க்
    கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
    செற்றவர் தம் கோயிலினுட் கொடு புகுந்து
    திரு முன்பே இட்டு வைத்தான். 312
    அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
    எழுந்தருளி அணுக எய்தச்
    செவ்விய மெய்ஞ் ஞானம் உணர்
    திருஞான சம்பந்தன் வந்தான் என்றே
    எவ்வுலகும் துயர் நீங்கப் பணி மாறும்
    தனிக் காளத்து எழுந்த ஓசை
    எவ் உயிர்க்கும் அவன் கேளா மெல்லியலை
    விட்டு எதிரே விரைந்து செல்வான். 313
    மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம்
    நாட்டும் மணி நீர் வாசத்
    தூ நறும் பூரண கும்பம் சோதி
    மணி விளக்கினொடு தூபம் ஏந்தும்
    ஏனை அணி பிறவும் எலாம் எழில்
    பெருக இயற்றும் என ஏவித் தானும்
    வானவர் நாயகர் மகனார் வருமுன்பு
    தொழுது அணைந்தான் மழவர் கோமான். 314
    பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று
    ஆனந்தம் பெருகு காதல்
    வெள்ள நீர் கண் பொழியத் திருமுத்தின்
    சிவிகையின் முன் வீழ்ந்த போது
    வள்ளலார் எழுக என மலர்வித்த
    திருவாக்கால் மலர்க்கை சென்னி
    கொள்ள மகிழ்ந்து உடன் சென்று
    குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான். 315
    மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி
    கடந்து மதிச் சடையார் கோயில்
    பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து ஆகப்
    புனை முத்தின் சிவிகை நின்றும்
    அங்கண் இழிந்து அருளும் முறை
    இழிந்தருளி அணிவாயில் பணிந்து புக்குத்
    தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு
    திருமுன் வணங்கச் சாரும் காலை. 316
    கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து
    நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி
    என் இது என்று அருள் செய்ய
    மழவன்தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற
    பொன் இவளை முயலகனாம் பொருவில்
    அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில்
    முன் அணையக் கொணர்வித்தேன் இது
    புகுந்தபடி என்று மொழிந்து நின்றான். 317
    அணிகிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும்
    கேட்டு அந் நிலையின் நின்றே
    பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய
    பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து
    மணி வளர் கண்டரோ மங்கையை வாட
    மயல் செய்வதோ இவர் மாண்பது என்று
    தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத்
    தண்தமிழ் பாடினார் சண்பை நாதர். 318
    பன்னு தமிழ் மறையாம் பதிகம்
    பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி
    மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன்
    பயந்த மழலை மென் சொல்
    கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும்
    எனப் பார் மிசை நின்று எழுந்து
    பொன்னின் கொடி என ஒல்கிவந்து
    பெருவலித் தாதை புடை அணைந்தாள். 319
    வன்பிணி நீங்கு மகளைக் கண்ட
    மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கத்
    தன்தனிப் பாவையும் தானும் கூடச்
    சண்பையர் காவலர் தாளில் வீழ
    நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர்அணி
    வேணி நிமலர் பாதம்
    ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர்
    பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார். 320
    நீடு திரு வாச்சிராமம் மன்னும் நேரிழை
    பாகத்தர் தாள் வணங்கிக்
    கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும்
    கொள்கை மேற்கொண்டு போந்தே
    ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து
    பணிந்து அடிபோற்றி ஏகிச்
    சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச்
    சிவபெருமானை இறைஞ்சச் சென்றார். 321
    பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப்
    பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து
    மண் பரவும் தமிழ் மாலை பாடி
    வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
    திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ்
    சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச்
    சண்பை வளம் தரும் நாடர் வந்து
    தடம் திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார். 322
    செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ்
    திரு ஈங்கோய் மலையில் மேவும்
    கங்கைச் சடையார் கழல் பணிந்து
    கலந்த இசைப் பதிகம் புனைந்து
    பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும்
    புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்
    கொங்கில் குட புலம் சென்று அணைந்தார்
    கோதில் மெய்ஞ்ஞானக் கொழுந்து அனையார். 323

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    மொய் திகழ் சோலை அம் மூதூர்
    முன் அகன்று அந் நெறி செல்வார்
    செய் தரு சாலி கரும்பு தெங்கு
    பைம் பூகத்து இடை போய்
    மை திகழ் கண்டர் தம் கோயில்
    மருங்கு உள்ள எல்லாம் வணங்கி
    எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர்
    ஈசர்தம் கோயில். 296
    இன்னம்பர் மன்னும் பிரானை
    இறைஞ்சி இடை மடக்கான
    பன்னும் தமிழ்த் தொடை மாலைப்
    பாடல் புனைந்து பரவிப்
    பொன்னங் கழல் இணை போற்றிப்
    புறம் போந்து அணைந்து புகுந்தார்
    மன்னும் தடம் கரைப்
    பொன்னி வட குரங்காடுதுறையில். 297
    வட குரங்காடுதுறையில் வாலியார்
    தாம் வழிபட்ட
    அடைவும் திருப்பதிகத்தில் அறிய
    சிறப்பித்து அருளிப்
    புடை கொண்டு இறைஞ்சினர் போந்து
    புறத்துள்ள தானங்கள் போற்றி
    படை கொண்ட மூவிலை வேலர்
    பழனத் திருப்பதி சார்ந்தார். 298
    பழனத்து மேவிய முக்கண்
    பரமேட்டியார் பயில் கோயில்
    உழைபுக்கு இறைஞ்சி நின்று
    ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி
    விழை சொல் பதிகம் விளம்பி
    விருப்புடன் மேவி அகல்வார்
    அழனக்க பங்கய வாவி
    ஐயாறு சென்று அடைகின்றார். 299
    மாட நிரை மணி வீதித்
    திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர்
    நாடு உய்யப் புகலிவரு ஞான
    போனகர் வந்து நண்ணினார் என்று
    ஆடலொடு பாடல் அறா அணி
    மூதூர் அடைய அலங்காரம் செய்து
    நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள
    நித்தில யானத்து நீங்கி. 300
    வந்து அணைந்து திருத்தொண்டர் மருங்கு
    வர மான் ஏந்து கையர் தம்பால்
    நந்தி திருவருள் பெற்ற நன்னகரை
    முன் இறைஞ்சி நண்ணும் போதில்
    ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து
    அஞ்சல் என்பார் தம் ஐயாறு என்று
    புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை
    போற்றி இசைத்தார் புகலி வேந்தர். 301
    மணி வீதி இடம் கடந்து மால்
    அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில்
    அணி நீடு கோபுரத்தை அணைந்து
    இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல்
    தணியாத கருத்தினோடும் தம்பெருமான் கோயில்
    வலம் கொண்டு தாழ்ந்து
    பணி சூடும் அவர் முன்பு பணிந்து
    வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார். 302
    கோடல் கோங்கம் குளிர் கூவிளம்
    என்னும் திருப்பதிகக் குலவு மாலை
    நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த
    திரு உள்ளத்து நிலைமை தோன்ற
    ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று
    எம் ஐயனே என்று நின்று
    பாடினார் ஆடினார் பண்பினொடும்
    கண் பொழி நீர் பரந்து பாய. 303
    பல முறையும் பணிந்து எழுந்து புறம்
    போந்து பரவு திருத் தொண்டரோடு
    நிலவு திருப்பதி அதன் கண் நிகழும்
    நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை
    அலையும் மதி முடியார் தம்
    பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக்
    குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு
    அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில். 304
    குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு
    அங்கு அருள் பெற்றுக் குறிப்பின்னோடும்
    படரும் நெறி மேல் அணைவார்
    பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணி
    அடையும் மனம் உற வணங்கி அரும்
    தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும்
    புடைவளர் மென் கரும்பினொடு
    பூகமிடை மழபாடி போற்றச் சென்றார். 305
    செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப்
    புறத்துச் சேரச் செல்வார்
    அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம்
    எடுத்து அருளி அணைந்த போழ்தில்
    மங்கை வாழ் பாகத்தார்
    மழபாடி தலையினால் வணங்குவார்கள்
    பொங்கு மா தவம் உடையார் எனத்
    தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார். 306
    மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து
    மகிழ் கோயில் வலம் கொண்டு எய்தி
    செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச்
    சென்று தாழ்ந்து எழுந்து நின்று
    தொழுது ஆடிப் பாடி நறும் சொல்
    மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே
    ஒழியாத நேசமுடன் உடையவரைக் கும்பிட்டு
    அங்கு உறைந்தார் சின்னாள். 307
    அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர்
    பணிந்து ஏத்தி ஆன்ற சைவ
    முதன் மறையோர் அன்பிலாலந் துறையின்
    முன்னவனைத் தொழுது போற்றிப்
    பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார்
    பயில் பதியும் பணிந்து பாடி
    மத கரட வரை உரித்தார் வட கரை
    மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர். 308
    சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும்
    திருநதி வாழ் சென்னியார் தம்
    முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை
    வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து
    துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள்
    தொழுது வழிபாடு செய்ய
    நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில்
    சொல் மாலை நிகழப் பாடி. 309

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக்
    கொடு முடியார் தம்பாதம்
    மருவி வணங்கி வளத் தமிழ்
    மாலை மகிழ்ந்து சாத்தி
    விரி சுடர் மாளிகை வெஞ்ச
    மாக் கூடல் விடையவர் தம்
    பொருவில் தானம் பல
    போற்றிக் குணதிசைப் போதுகின்றார். 338
    செல்வக் கருவூர்த் திருவானிலைக்
    கோயில் சென்று இறைஞ்சி
    நல்லிசை வண் தமிழ்ச் சொல்
    தொடை பாடி அந்நாடு அகன்று
    மல்கிய மாணிக்க வெற்பு
    முதலா வணங்கி வந்து
    மல்கு திரைப் பொன்னித்
    தென் கரைத் தானம் பல பணிவார். 339
    பன்னெடும் குன்றும் படர் பெரும்
    கானும் பல பதியும்
    அந் நிலைத் தானங்கள் ஆயின
    எல்லாம் அமர்ந்து இறைஞ்சி
    மன்னு புகலியில் வைதிக
    வாய்மை மறையவனார்
    பொன் இயல் வேணிப் புனிதர்
    பராய்த் துறையுள் புகுந்தார். 340
    நீடும் பராய்த் துறை நெற்றித்
    தனிக் கண்ணர் கோயில் நண்ணிக்
    கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில்
    தமிழ்ச் சொல் மாலை
    பாடும் கவுணியர் கண்பனி
    மாரி பரந்து இழியச்
    சூடும் கரதலத்து அஞ்சலி
    கோலித் தொழுது நின்றார். 341
    தொழுது புறம்பு அணைந்து அங்கு
    நின்று ஏகிச் சுரர் பணிவுற்று
    எழு திரு ஆலந்துறை
    திருச்செந்துறையே முதலா
    வழுவில் பல் கோயில்கள் சென்று
    வணங்கி மகிழ்ந்து அணைவார்
    செழு மலர்ச் சோலைத்
    திருக் கற்குடி மலை சேர வந்தார். 342
    கற்குடி மாமலை மேல் எழுந்த
    கனகக் கொழுந்தினைக் கால் வளையப்
    பொன் திரள் மேருச் சிலை வளைத்த
    போர் விடையாளியைப் போற்றி இசைத்து
    நற்றமிழ் மாலை புனைந்தருளி
    ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும்
    செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து
    திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார். 343
    செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப்
    பள்ளி மேய செழுஞ்சுடரைக்
    கைம் மலை ஈருரி போர்வை சாத்தும்
    கண் நுதலாரைக் கழல் பணிந்து
    மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர
    விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து
    மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை
    வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார். 344
    விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில்
    வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை
    நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து
    எழுந்து நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
    அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த
    அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்
    பண்ணுறு செந்தமிழ் மாலை பாடிப்
    பரவி நின்று ஏத்தினர் பான்மையினால். 345
    நாரணன் நான்முகன் காணா உண்மை
    வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
    சீரணி நீடு திருக்கயிலை செல்வத்
    திருவாரூர் மேய பண்பும்
    ஆரணத்து உட் பொருள் ஆயினாரை
    ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி
    ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை
    ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார். 346
    கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து
    காமர் பதி அதன் கண் சில நாள்
    வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார்
    மன்னும் தவத்துறை வானவர் தாள்
    எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்
    தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து
    வைதிக மாமணி அம்மருங்கு மற்று
    உள்ள தானம் வழுத்திச் செல்வார். 347
    ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும்
    எறும்பியூர் மாமலையே முதலா
    வேறு பதிகள் பலவும் போற்றி
    விரவும் திருத்தொண்டர் வந்து சூழ
    ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம்
    எண் திசையோரும் தொழுது இறைஞ்ச
    நீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள
    மா நகர் சென்று சேர்ந்தார். 348
    நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால்
    நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
    இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும்
    இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி
    அடும் பணிச் செஞ்சடையார் பதிகள்
    அணைந்து பணிந்து நியமம் போற்றிக்
    கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த
    காட்டுப் பள்ளிப்பதி கை தொழுவார். 349
    சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச் செஞ்சடை
    நம்பர் தம் கோயில் எய்தி
    முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து
    மொய் கழல் சேவடி கை தொழுவார்
    கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக்
    கண் நுதலாரை முன் போற்றி செய்து
    மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார்
    வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார். 350
    அங்கு அப்பதி நின்று எழுந்தருளி
    அணிந்திரு வாலம் பொழில் வணங்கி
    பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி
    பொய்யிலியாரைப் பணிந்து போற்றி
    எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம்
    எதிர் கொள்ள எப்பதியும் தொழுது
    செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த
    திருக் கண்டியூர் தொழச் சென்று அணைந்தார். 351

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 หลายเดือนก่อน +1

    சிவாய நம🔱❤🎉🙏🙏🙏🙏❤

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    நச்சி இன் தமிழ் பாடிய
    ஞான சம்பந்தர்
    இச்சையே புரிந்து அருளிய
    இறைவர் இன் அருளால்
    அச் சிறப்பு அருள் பூதம்
    முன் விரைந்தகன் பீடத்து
    உச்சி வைத்தது பசும் பொன்
    ஆயிரக் கிழி ஒன்று. 426
    வைத்த பூதம் அங்கு அணைந்து
    முன் நின்று நல் வாக்கால்
    உய்ந்த இக்கிழி பொன்
    உலவாக் கிழி உமக்கு
    நித்தனார் அருள் செய்தது என்று
    உரைக்க நேர் தொழுதே
    அத்தனார் திருவருள் நினைந்து தவ
    மேனி மேல் பணிந்தார். 427
    பணிந்து எழுந்து கை தொழுது
    முன் பனி மலர்ப் பீடத்து
    அணைந்த ஆடகக் கிழிதலைக்
    கொண்டு அருமறைகள்
    துணிந்த வான் பொருள் தரும்
    பொருள் தூய வாய்மையினால்
    தணிந்த சிந்தை அத் தந்தையார்க்கு
    அளித்து உரைசெய்வார். 428
    ஆதி மாமறை விதியினால்
    ஆறு சூழ் வேணி
    நாதனாரை முன்னாகவே புரியும்
    நல் வேள்வி
    தீது நீங்க நீர் செய்யவும்
    திருக் கழுமலத்து
    வேத வேதியர் அனைவரும்
    செய்யவும் மிகுமால். 429
    என்று கூறி அங்கு அவர்தமை
    விடுத்த பின் அவரும்
    நன்றும் இன்புறும் மனத்தொடும்
    புகலி மேல் நண்ண
    வென்றி ஞான சம்பந்தரும்
    விருப்பொடு வணங்கி
    மன்றல் ஆவடு துறையினில்
    மகிழ்ந்து இனிது இருந்தார். 430

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    அண்டர் பிரான் ஆலயங்கள்
    அம்மருங்கு உள்ளன பணிந்து
    தெண்திரை நீர்த் தடம் பொன்னித்
    தென் கரையாம் கொங்கின் இடை
    வண்டு அலையும் புனல் சடையார்
    மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார்
    கொண்டல் பயில் நெடும் புரிசைக்
    கொடி மாடச் செங்குன்றூர். 324
    அந் நகரில் வாழ்வாரும்
    அடியவரும் மனம் மகிழ்ந்து
    பன்னெடுந்தோரணமுதலாப் பயில்
    அணிகள் பல அமைத்து
    முன் உறவந்து எதிர் கொண்டு
    பணிந்து ஏத்திமொய் கரங்கள்
    சென்னியுறக் கொண்டு அணைந்தார்
    சினவிடையார் செழுங்கோயில். 325
    தம் பெருமான் கோயிலினுள் எழுந்தருளித்
    தமிழ் விரகர்
    நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து
    எழுந்து நலம் சிறக்க
    இம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை
    வண் தமிழ் பாடிக்
    கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ
    நகரில் இனிது அமர்ந்தார். 326
    அப்பாலைக் குட புலத்தில்
    ஆறணிந்தார் அமர் கோயில்
    எப்பாலும் சென்று ஏத்தித்
    திரு நணாவினை இறைஞ்சிப்
    பைப் பாந்தள் புணைந்த வரைப்
    பரவிப் பண்டு அமர்கின்ற
    வைப்பான செங்குன்றூர் வந்து
    அணைந்து வைகினார். 327
    ஆங்கு உடைய பிள்ளையார்
    அமர்ந்து உறையும் நாளின்கண்
    தூங்கு துளி முகில் குலங்கள்
    சுரந்து பெயல் ஒழிகாலை
    வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம்
    வெயில் பெறா விருப்பு வரப்
    பாங்கர் வரையும் குளிரும்
    பனிப் பருவம் எய்தியதால். 328
    அளிக்குலங்கள் சுளித்து அகல
    அரவிந்தம் முகம் புலரப்
    பளிக்கு மணி மரகத வல்லியில்
    கோத்த பான்மை எனத்
    துளித் தலைமெல் அறுகு பனி
    தொடுத்து அசையச் சூழ் பனியால்
    குளிர்க் குடைந்து வெண் படாம்
    போர்த்து அனைய குன்றுகளும். 329
    மொய் பனி கூர் குளிர் வாடை
    முழுது உலவும் பொழுதேயாய்க்
    கொய் தளிர் மென் சோலைகளும்
    குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி
    வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான்
    போல் விசும்பின் இடை
    ஐது வெயில் விரிப்பதுவும்
    அடங்குவதும் ஆகுமால். 330
    நீடிய அப் பதிகள் எலாம்
    நிறை மாடத்து உறையுள் தொறும்
    பேடையுடன் பவளக்கால் புறவு
    ஒடுங்கப் பித்திகையின்
    தோடு அலர் மென் குழல் மடவார்
    துணைக் கலச வெம் முலையுள்
    ஆடவர் தம் பணைத்தோளும்
    அணி மார்பும் அடங்குவன. 331
    அரிசனமும் குங்குமமும் அரைத்து
    அமைப்பார் அயல் எல்லாம்
    பரிய அகில் குறை பிளந்து
    புகைப்பார்கள் பாங்கு எல்லாம்
    எரி உமிழ் பேழ் வாய்த் தோணி
    இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம்
    விரி மலர் மென் புறவு
    அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம். 332
    அந்நாளில் கொடி மாடச் செங்
    குன்றூர் அமர்ந்து இருந்த
    மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன்
    மேவும் பரிசனங்கள்
    பன்னாளும் அந்நாட்டில் பயின்ற
    அதனால் பனித்த குளிர்
    முன் ஆன பிணி வந்து
    மூள்வது போல் முடுகுதலும். 333
    அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு
    அவர்கள் எல்லாம்
    முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார்
    அருள் தொழுதே
    இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு
    எய்தப் பெறா என்று
    சென்னி மதி அணிந்தாரைத்
    திருப்பதிகம் பாடுவார். 334
    அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து
    ஐயர் அமுது செய்த
    வெவ்விடம் முன் தடுத்து எம்
    இடர் நீக்கிய வெற்றியினால்
    எவ்விடத்தும் அடியார் இடர்
    காப்பது கண்டம் என்றே
    செய்வினை தீண்டா திரு நீல கண்டம்
    எனச் செப்பினார். 335
    ஆய குறிப்பினில் ஆணை
    நிகழ அருளிச் செய்து
    தூய பதிகத் திருக் கடைக்
    காப்புத் தொடுத்து அணிய
    மேய அப்பொற்பதி வாழ்பவர்க்கே
    அன்றி மேவும் அந்நாள்
    தீய பனிப் பிணி அந்நாடு
    அடங்கவும் தீர்ந்தது அன்றே. 336
    அப்பதியின் கண் அமர்ந்து சில
    நாளில் அங்கு அகன்று
    துப்புறழ் வேணியர் தானம்
    பலவும் தொழுது அருளி
    முப்புரி நூலுடன் தோல்
    அணி மார்பர் முனிவரொடும்
    செப்பரும் சீர்த் திருப்பாண்டிக்
    கொடுமுடி சென்று அணைந்தார். 337

  • @pachaiyammalt5048
    @pachaiyammalt5048 8 หลายเดือนก่อน

    Thenaludaiya sivane potri Ennattavarugum Enraiva potri 🥰🥰🥰

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 8 หลายเดือนก่อน

    தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏

  • @manirami9285
    @manirami9285 8 หลายเดือนก่อน +1

    உங்களின் தூய பாதங்களை வணங்குகிறேன் ஐயா 🙏🙏

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

    திரு நாசேச் சரத்து அமர்ந்த
    செங்கனகத் தனிக் குன்றைக்
    கரு நாகத்து உரி புனைந்த கண்
    நுதலைச் சென்று இறைஞ்சி
    அருஞானச் செந்தமிழின்
    திருப்பதிகம் அருள் செய்து
    பெரு ஞான சம்பந்தர்
    பெருகு ஆர்வத்தின்புற்றார். 411
    மா நாகம் அர்ச்சித்த மலர்க்
    கமலத் தாள் வணங்கி
    நாள் நாளும் பரவுவார் பிணி
    தீர்க்கும் நலம் போற்றிப்
    பால் நாறும் மணி வாயர்
    பரமர் திருவிடை மருதில்
    பூ நாறும் புனல் பொன்னித்
    தடங்கரை போய்ப் புகுகின்றார். 412
    ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன்
    என்று எடுத்தருளித்
    தாங்க அரிய பெருமகிழ்ச்சி
    தலை சிறக்கும் தன்மையினால்
    ஈங்கு எனை ஆளுடைய பிரான்
    இடை மருது ஈதோ என்று
    பாங்கு உடைய இன்
    இசையால் பாடி எழுந்தருளினார். 413
    அடியவர்கள் எதிர் கொள்ள
    எழுந்தருளி அங்கு அணைந்து
    முடிவில் பரம் பொருள் ஆனார்
    முதற் கோயில் முன் இறைஞ்சிப்
    படியில் வலம் கொண்டு திரு முன்பு
    எய்திப் பார் மீது
    நெடிது பணிந்தெழுந்து அன்பு
    நிறை கண்ணீர் நிரந்து இழிய. 414
    பரவுறு செந்தமிழ்ப் பதிகம்
    பாடி அமர்ந்த அப்பதியில்
    விரவுவார் திருப்பதிகம் பல
    பாடி வெண் மதியோடு
    அரவு சடைக்கு அணிந்தவர் தம்
    தாள் போற்றி ஆர்வத்தால்
    உரவு திருத் தொண்டருடன் பணிந்து
    ஏத்தி உறையும் நாள். 415
    மருங்கு உள நற் பதிகள் பல
    பணிந்து மா நதிக்கரை போய்க்
    குரங்காடு துறை அணைந்து
    குழகனார் குரை கழல்கள்
    பெரும் காதலில் பணிந்து
    பேணிய இன்னிசை பெருக
    அரும் கலை நூல்
    திருப்பதிகம் அருள் செய்து பரவினார். 416
    அம் மலர்த் தடம் பதிபணிந்து
    அகன்று போந்து அருகு
    மைம்மலர்க் களத்து இறைவர்
    தம் கோயில்கள் வணங்கி
    நம் மலத்துயர் தீர்க்க
    வந்தருளிய ஞானச்
    செம்மலார் திருவாவடு
    துறையினைச் சேர்ந்தார். 417
    மூவர்க்கு அறிவரும் பொருள்
    ஆகிய மூலத்
    தேவர் தம் திருவாவடு துறைத்
    திருத் தொண்டர்
    பூ அலம்பு தண் பொரு புனல்
    தடம் பணைப் புகலிக்
    காவலர்க்கு எதிர் கொள்ளும்
    ஆதரவுடன் கலந்தார். 418
    வந்து அணைவார் தொழா முனம்
    மலர் புகழ்ச் சண்பை
    அந்தணர்க்கு எலாம் அருமறைப்
    பொருள் என வந்தார்
    சந்த நித்திலச் சிவிகை நின்று
    இழிந்து எதிர் தாழ்ந்தே
    சிந்தை இன்புற இறைவர் தம்
    கோயில் முன் சென்றார். 419
    நீடு கோபுரம் இறைஞ்சி உள்
    புகுந்து நீள் நிலையான்
    மாடு சூழ் திரு மாளிகை
    வலம் கொண்டு வணங்கி
    ஆடும் ஆதியை ஆவடு
    துறையுள் ஆரமுதை
    நாடு காதலில் பணிந்தெழுந்து
    அருந் தமிழ் நவின்றார். 420
    அன்பு நீடிய அருவி கண்
    பொழியும் ஆர்வத்தால்
    முன்பு போற்றியே புறம்பு
    அணை முத்தமிழ் விரகர்
    துன்பு போம் மனத் திருத்தொண்டர்
    தம்முடன் தொழுதே
    இன்பம் மேவி அப்பதியினில்
    இனிது அமர்ந்திருந்தார். 421
    மேவி அங்கு உறை நாளினில்
    வேள்வி செய்வதனுக்கு
    ஆவது ஆகிய காலம் வந்து
    அணைவுற அணைந்து
    தாவில் சண்பையர் தலைவர்க்குத்
    தாதையார் தாமும்
    போவதற்கு அரும் பொருள் பெற
    எதிர் நின்று புகன்றார். 422
    தந்தையார் மொழி கேட்டலும்
    புகலியார் தலைவர்
    முந்தை நாளிலே மொழிந்தமை
    நினைந்து அருள் முன்னி
    அந்தமில் பொருள் ஆவன
    ஆவடு துறையுள்
    எந்தையார் அடித் தலங்கள்
    அன்றோ என எழுந்தார். 423
    சென்று தேவர் தம்பிரான் மகிழ்
    கோயில் முன்பு எய்தி
    நின்று போற்றுவார் நீள்
    நிதி வேண்டினார்க்கு ஈவது
    ஒன்றும் மற்றிலேன் உன்னடி
    அல்லது ஒன்று அறியேன்
    என்று பேரருள் வினவிய
    செந்தமிழ் எடுத்தார். 424
    எடுத்த வண் தமிழ்ப் பதிக
    நாலடியின் மேல் இரு சீர்
    தொடுத்த வைப்பொடு தொடர்ந்த
    இன்னிசையினால் துதிப்பார்
    மடுத்த காதலில் வள்ளலார்
    அடி இணை வழுத்தி
    அடுத்த சிந்தையால் ஆதரித்து
    அஞ்சலி அளித்தார். 425

  • @annampoorani7019
    @annampoorani7019 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏🙏

  • @selvamk8913
    @selvamk8913 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ sivaya namaka ayya

  • @viswanathanparameswari8264
    @viswanathanparameswari8264 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @NPSi
    @NPSi 5 หลายเดือนก่อน

    🙏🙏

  • @sheela836
    @sheela836 8 หลายเดือนก่อน +1

    புரிஞ்சவங்களுக்கு நீங்க சொன்னது புரியும் புரியாதவங்களு அந்த சாமி தான் புரிய வைக்கனும்

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏