மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #கன்னியாகுமரி மாவட்டம் #தாய்த்தமிழகத்தோடு இணைந்த 65வது ஆண்டையொட்டி நாகர்கோவிலில் #மொழிப்போர் தியாகி #மார்சல்நேசமணியின் சிலைக்கு காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த 65வது ஆண்டு துவக்கத்தையொட்டி நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள மொழிப்போர் தியாகி மார்சல் நேசமணியின் சிலைக்கு காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், மாவட்ட செயலாளர் வினோபாஸ்மைல் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் சிலம்பு சுரேஷ் கூறும்போது "
தமிழகத்தில் அதிகாரிகள் ஜாதி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .
இதனை தடுக்க காமராஜர் ஆதித்தனார் கழகம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் எனவும்
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் பெருந்தலைவர் காமராஜரின் புகழை மறைக்க அவரது சிலைகளை அகற்றி வருகிறார்கள். இதனை தடுக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.