யாருக்கும் சுவடில்லை இங்கு | vageeswari | tamil audio novels | tamil novels audiobooks | romantic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • • யாருக்கும் சுவடில்லை இ...
    வாகீஸ்வரியின், "யாருக்கும் சுவடில்லை இங்கு" RJ புவனா செல்வம் குரலில்...
    நெற்றியில் கருப்பு மை திலகமாய் வைத்திருக்க, அவன் வெற்று மார்பிலும் அதுபோலவே கருப்பு மை பூசப்பட்டிருந்தது.
    அவன் புஜத்தில் கருப்புக்கயிறு இறுக கட்டப்பட்டு இருப்பதையும் ஒரு காலில் மட்டும் தண்டை இருக்க.
    அவள் பிறந்த வர்க்கத்தில் பூணூலும் சந்தனமும் குங்குமமுமாக மங்களகரமாய் பார்த்தே பழக்கப்பட்டவளுக்கு இவனது கோலம் அதிர்ச்சியை அளித்தது. கருப்பு நிற மையால் பொட்டு வைத்தாலே பார்வதி கையால் வலிக்க கொட்டு விழும்.
    எதிரே நிற்பவனைப் பார்க்க பார்க்க பயத்தில் தளிர் உடல் பயத்தில் வெடவெடக்க ஆரம்பித்தது.
    உண்மையில் இதுநாள் வரை கூட்டத்தில் அவனது கண்களை மட்டுமே பார்த்திருக்கிறாள், அவர்கள் காதலுக்கு விழிகளே போதுமாய் இருக்க, அவன் தோற்றத்தை அவள் கணக்கில் வைத்து பார்த்திருக்கவும் இல்லை.
    ஆனால் இப்பொழுது அவனை உன்னிப்பாக நிதானமாய் கவனித்தவளுக்கு பயமாய் இருந்தது. இவன் தனக்கு பொருத்தமாய் இருப்பானா என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
    யட்சிணிகளையும் ஆத்மாக்களையும், தன் கைக்குள் வைத்து ஆட்டுவிக்கும் மந்திரவித்தைக்காரனுக்கு, அவள் மனது புரியாது போகுமா என்ன!...
    தன்னை விட்டுப்போக அவள் யோசிப்பது புரிந்தது. அது போதாமல், "அவளுக்கு உன்னை பிடிக்கலை காலா. சரின்னு சொல்லு நான் அவளுக்குள்ள போய் உனக்கு அடிமையாக்கிக்கறேன்" யட்சி கீச்சுக்குரலில் கத்த.
    அந்த சப்தம் அவள் காதிலும் விழ,
    “அது யாரோட குரல்? யாரோ பேசிய மாதிரி இருக்கே?” பயந்து போய்க் கேட்டாள்.
    மிரண்டு அங்கே இருந்து ஓட முற்பட்டவளை இழுத்து தன் கைக்குள் வைத்தவன், "எங்க போற?" கேட்டவாறே தங்களைச் சுற்றி திருநீரால் வட்டம் போட்டான்.
    அதைப் பயத்துடன் பார்த்தவள், "என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இங்க எதுக்கு வந்தீங்க, வீட்ல பார்த்துட்டாங்கன்னா நான்தான் தண்டனை வாங்கணும், போய்டுங்க" அவனிடமிருந்து விடுவிக்க முயன்றவாறே கெஞ்சினாள்.
    "இங்க என்னை பாரு" அவன் குரல் கேட்கவே ஒருமாதிரி சிங்கத்தின் உறுமல் போல இருக்க, அவனை பார்க்க மறுத்தவள் திமிறினாள்.
    கடுமையான மந்திரங்களை உச்சரித்து அவனது குரல் கரகரப்பாய் மாறிப் போயிருந்தது. அதில் மிரண்டவள், அவன் தங்களை சுற்றி மந்திர வளையம் போடவும், தான் அவனை நேசித்து தப்பு செய்துட்டோமோ அஞ்சினாள்.
    "என்னைப் பாருன்னு சொன்னேன்ல" அவள் கூந்தலை கொத்தோடு பிடித்தான். அவனைப் பொறுத்தவரை இதுதான் காதல் என நினைத்தது இயற்கையே.
    நாம் எந்த இடத்தில் வளர்கிறோம், என்பதைப் பொறுத்துதான் நம் தன்மையும் இருக்குமாம். அதுபோல, காலனுக்கு முரட்டுத்தனமும் மிரட்டலுமே அன்பாய் தெரிந்தது.
    அவன் கையை பிடித்தவள், "எனக்கு பயமா இருக்கு. போய்டுங்க இங்க இருந்து" சொன்னவள் அவன் சிவந்திருந்த கண்களையும் கருத்து அடர்ந்திருந்த இமைகளையும் பார்க்கவே பயந்தாள்.
    "என்ன பயமா இருக்கு? நான் மனுஷன்தானே. இதுநாள் வரைக்கும் என்கிட்டே மயங்கிக்கிடந்தவதானே?" அவன் முரடனாய்க் கத்தினான்.
    #ramanichandrannovelaudiobook
    #ramanichandrantamilnovels
    #tamilaudiobookstory
    #ramanichandrannovels
    #tamilaudionovels
    #rcnovelsaudio
    #tamilaudiolibrary
    #tamilaudiobookstory
    #tamilaudionovels
    #vageeswari
    #vageeswarinovelsaudio
    #vageeswariaudionovels
    #vageeswarinovelsaudiobooks
    #vageeswariaudiobooks
    #vageeswarinovels
    #rjkrithigharaj
    #rjsuja
    #rjadhi
    #rjsubeethakannan
    #தமிழ்ஆடியோநாவல்
    #tamilaudionovels
    #romanticnovels
    #vageeswari
    #newstory
    #ஒலிப்புத்தகம்

ความคิดเห็น • 3