தாராபாரதியின் பிறந்தநாளையொட்டி ஒரு சிற்றுரை கேட்போம் || குலவழகன்
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024
- தாராபாரதி (26 பிப்ரவரி 1947 - 13 மே 2000) தமிழகத்தை சேர்ந்த ஆசிரியரும், கவிஞரும் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் இராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். அவருக்கு ஒரு அண்ணனும் (மலர் மகன் எனப்படும் துரை சீனிவாசன்), தம்பியும் (துரை மாதவன்) உள்ளனர். துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 - 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இவருக்கு இரு புதல்வர்கள், விவேகாநந்தன் மற்றும் முனைவர் லோகுதுரை.