சென்னை ECR சேசிங் சம்பவம் தொடர்பாக வெளிவரும் ஷாக் தகவல்கள்... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #ecr | #viralvideo
    சென்னை ECR சேசிங் சம்பவம் தொடர்பாக வெளிவரும் ஷாக் தகவல்கள்... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
    ஈசிஆர் கார் சேசிங் விவகாரம் தொடர்பாக பல்வேறு அதிர்சி தகவல்கள் வெளிவந்திருக்கின்றன... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
    இந்த வீடியோக்கள் தான் தமிழக அரசியலின் இன்றைய ஹாட் டாபிக். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் இரவு நேரத்தில் காரில் சென்ற பெண்களை இளைஞர்கள் சிலர் 2 கார்களில் துரத்தி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தன.
    காரில் இருந்த பெண்கள் பதற்றத்துடன் பேசுவதும், விடாமல் துரத்திய அந்த இளைஞர்கள், சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களை செல்ல விடாமல் தடுக்கும் காட்சிகளும் பலரையும் அதிர்ச்சியடை வைத்திருக்கிறது.
    அந்த இளைஞர்களிடம் இருந்து தப்பிக்க காரை ரிவர்ஸ் எடுத்துச் சென்ற நிலையில், அதன் பிறகு விடாமல் வீடுவரை அவர்கள் துரத்தி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வரும் சூழலில், இந்தச் சம்பவம் எப்போது நடந்தது? அந்தப் பெண்களுக்கு என்ன ஆனது? காரில் துரத்தியவர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.
    அதிலும் குறிப்பாக துரத்தி வந்த காரில் கட்சி கொடி இருந்ததால் இந்த விவகாரம் அரசியல் ரீதியில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.
    சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த சம்பவத்தின் முழு பின்னணியையும் தெரிந்து கொள்ள விசாரணையை தொடங்கினோம்.
    சென்னை கானத்தூரை சேர்ந்தவர் 32 வயதான பெண் மருத்துவர்.
    சம்பவத்தன்று அதிகாலை இரண்டு மணியளவில் குழந்தை அழுததால், அழுகையை நிறுத்தி வேடிக்கை காட்ட முட்காடு படகு குழாம் மேம்பாலத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
    ஈசிஆர் முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலம் மீது நின்று கழிமுக பகுதியை மக்கள் வேடிக்கை பார்ப்பது பழக்கம். பெண் மருத்துவர் அங்கு சென்றிருந்த நேரத்தில் சொகுசு காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண் மருத்துவரின் கார் அருகே கத்தி கூச்சலிட்டிருக்கிறார்கள். அந்த கும்பல் மதுபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பெண் மருத்துவர் அச்சமடைந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார்.
    சிறிது தூரம் வந்த போது தான், அந்த கும்பல் பின் தொடர்வதை கண்டு காரிலிருந்த ஒருவர் வீடியோ எடுக்க துவங்கி உள்ளார்.
    கானத்தூர் காவல்நிலையத்தை கடந்து கானத்தூர் சிக்னல் அருகே சென்ற போது கட்சி கொடிக்கட்டிய அந்த இளைஞர்களின் கார், பெண் மருத்துவரின் காரை ஓவர்ரடேக் செய்து வழிமறித்து நின்றுள்ளது. பின்னர் சாதுர்யமாக அங்கிருந்து காரை திருப்பி வீட்டை நோக்கி பெண் மருத்துவர் சென்றுள்ளார். அதன் பிறகும் விடாமல் துரத்திய அந்த கும்பல், வீடு வரை வந்து காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
    மேலும் குடியிருப்புவாசிகள் ஒன்றுக்கூடி விசாரிக்க தொடங்கியதால் அந்த இளைஞர்கள், தங்களது காரை உரசியதால் பின் தொடர்ந்து வந்ததாக தெரிவித்து விட்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
    காரிலிருந்த பெண்கள் ஏற்கனவே காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருந்ததால், பெண் மருத்துவரின் வீட்டுக்கே வந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்திவிட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியிருந்தனர்.
    அடுத்த நாள் காலை கானத்தூர் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்ற பெண் மருத்துவர், அந்த இளைஞர்கள் மீது வீடியோ ஆதாரங்களோடு புகார் அளித்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
    இந்த சேசிங் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி,
    எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றவுடன் புகாரின் பேரில் பெண் வன்கொடுமை, மிரட்டல், வழிமறித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கரணை துணை ஆணையர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைத்திருக்கிறார்கள்.
    மேலும் வாகனத்தின் பதிவு எண்களை ஆய்வு செய்து காரின் உரிமையாளர்களையும், அதில் பயணித்தவர்களையும் தேடிவருகின்றனர்.
    காரை உரசியதால் தான் அந்த இளைஞர்கள் பெண்களை விரட்டியதாக போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்தனர். அதோடு காரில் இருந்த பெண்கள் மதுபோதையில் இளைஞர்களின் காரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதால் தான் அவர்கள் விரட்டியதாகவும் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அதற்கும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    குழந்தை மற்றும் உறவினர்கள் என மூன்று பெண்கள் ஒரு ஆண் என நான்கு பேர் காரில் பயணித்ததாகவும், போதையில் யார் காரையும் இடிக்கவில்லை எனவும் பெண் மருத்துவர் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தும் முதல் தகவல் அறிக்கைக்கூட பதியாமல் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டியதாக காவல்துறையினர் மீதும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
    இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் அவர்கல் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே அந்த இளைஞர்கள் யார்? அன்று அதிகாலை என்ன நடந்தது என்ற முழு விவரமும் தெரியவரும்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் அவர்கள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அடுத்தகட்ட விசாரணையில் தான் இந்த சம்பவத்தின் முழு பின்னணியும் தெரியவரும்.
    Uploaded On 30.01.2025

ความคิดเห็น • 127