MGR Kannadasan 100 Love Songs புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025
  • காவேரி கரையிருக்கு ..
    விழியே கதை ..
    நாணமோ .. போன்ற இனிய 100 காதல் பாடல்கள்

ความคิดเห็น • 80

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 28 วันที่ผ่านมา +3

    நிலவென்னும் ஆடை கொண்டவளின் அழகை பார்த்து பரவசம் அடையும் எம்.ஜி.ஆர் அதை பாடும் சௌந்தர்ராஜன் சுசீலா..திரையை விலக்கி வரும் அந்த அழகிய மெல்லிடை மெழுகுச்சிலையாக சரோஜாதேவி.. தோழியர் புடைசூழ ஆண்மையை பாடி ஆடும் நளினம் அருமை கருப்பு சிவப்பு வண்ண உடையில் வாலிபம் பொங்கும் வாலிபனாக மங்கையர் வண்ணம் பாடி அவர்களை சீண்டி மகிழும் எம்.ஜி.ஆர்...
    மக்கள் திலகத்தின் உருவத்தையும் சரோஜாதேவியின் பருவத்தையும் காட்சியில் வண்ணத்தையும் நமக்கு காட்டிய பாடல் இந்த "நிலவுப்பெண் ..." னின் பறக்கும் பாவை .. ஆடிய அணியில் ஒருவர் கையை விட்டுவிட ஒருவர் மேல் ஒருவராக குடை சாயும் கும்பல். காட்சியின் திறம் சொல்லும் மெல்லிசை மன்னர்களின் இசை.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +2

    """ ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்.. என் அழகுக்கு ஒருவன் துணை வருவான்..அது நீயன்றோ அது நீயன்றோ """ என்றுபாடி ... பார்க்கும் நம் கண்களுக்கு விருந்தான காட்சி தந்த தமிழ் திரை....

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 28 วันที่ผ่านมา +2

    ஜனரஞ்சகமான ராக சந்தத்தின் ஒலிக்கேற்ற கவிஞரின் சொற்கள்.. மெல்லிசை மன்னரின் இசை..அது முக ஒப்பனையில் எங்கோவைக்கப்படும் சிறிய மைப்பொட்டு ஒப்பனையையும் தாண்டி அழகை உயர்த்தி காட்டும் அதேபோல் ..."மழையில் உருவானது அறையில் விளையாடுது" .. அப்பொழுது ஒலித்தது மறையும் மெல்லிய புல்லாங்குழல் ஓசை.. இசையரசி சுசீலா அவர்களின் குரலுக்கு மேலும் இனிமை சேர்க்கிறது "பருவம் பழகாதது பலநாள் தனியானது".. இங்கும் அதேபோல் ஒலிக்கும் குழலோசை.. அள்ளி சேர்ந்த இரட்டை ஜடை பின்னலின் மல்லிகை சரம் மார்பில் தவழ ஆடி வரும் கன்னி அழகு ஜெயலலிதா.. அறையில் அடைத்து வைத்து வேடிக்கை பார்க்கும் ஜோதிலட்சுமி

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +2

    கண்கள் தெறிக்க ஒளியிடும் அழகு உருவமாக சரோ..
    "..நிமிர்ந்து நடையழகும் யாவும் உங்கள் தனியழகு " ... சுசீலா பாடி வந்தாரா ?! சரோஜாதேவி நளினமாக ஆடிவந்தாரா?.
    உடலெல்லாம் பூரிப்புடன் முகம் மலர கண் சிரிக்க வெள்ளை ஆடையில் தேவதையாக சரோஜாதேவி அழகோ அழகு ."பட்டு சேலையில் காற்றாடி .. பருவம் மேனியில் கூத்தாட .. கட்டு கூந்தல் முடித்தவளே "..
    என் கவிஞர் கண்ணதாசன் காதலர் நிலை சொன்ன வரிகள்.. என் தமிழ் அழகு .. என் கவிஞரின் தமிழும் அழகுதான் ...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 28 วันที่ผ่านมา +2

    ... மான் வண்ணம் பாடிய சீனிவாஸ். பெண் வண்ணம் பாடிய சுசீலா. கராச்சி பட்டு சரசரக்க தலை நிறைய மல்லிகை,நெத்திசூடி. ஜிமிக்கி, மின்னும் முத்து புல்லக். மூக்குத்தி. இரு கை நிறைய கலகலக்கும் கண்ணாடி வளையல். இடை ஒட்டிய அந்த ஒட்டியாணம். ஆஹா. அந்த முகத்தில் பூத்திருக்கும் புன்னகை மகிழ்ச்சியுடன் தேவலோக தேவதையாக சரோஜாதேவி... பட்டு வேஷ்டி பட்டு சட்டை இவற்றுடன் ஆண் தேஜஸ்சுடன் அன்பு கொண்ட காதல் வடிவமாக சரோஜாதேவியுடன் வலம் வரும் எம்.ஜி.ஆர் மாண்டலின்.மிருதங்கம்இவற்றுடன் சரண வரிகளை தொடர்ந்து இழையும் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் அந்த solo வயலின் ஆஹா. இனிமையான இசை இவ்வளவு இனிமையனதா?!.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +2

    ஒருவர் ஒருவராய் பிறந்தோம்.... என்று
    அற்புதமான கிளப் டான்ஸ் மாஸ்டராக சரோவுடன் ஆடி பணத்தோட்டம் பார்க்க வைத்த புரடசி நடிகர் எங்கள் எம்ஜிஆர்...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    கூறைநாட்டு புடவை கட்டி வெட்கத்தில் குனிந்து..கூடை நிறைய பூவை தலையில் சுமந்து.. சேரநாட்டு யானை தந்தம் போல சிவந்து.. நல்ல சீரக சம்பா அரிசி போல சிரித்து.. இப்படி சொன்னது போல இருக்கும் இருப்பவள் தான் திருமண ஊர்வலத்தில் வரும் கவிஞரின் மணப்பெண்.. சேலம் ஜில்லா மாம்பழக்கன்னம் பாடும் சௌந்தரராஜன்.. செப்பு சிலை போல திரண்ட அழகு தேவதை சரோஜாதேவியை தொட்டு சில்க் துணியாக உணரும் 'டை'க்கட்டிய மணமகன் எம்ஜிஆர்... அழகை பாடும் வரிகளை ரசிக்கும் மணப்பெண் .. சரோ..
    ... திருமண ஊர்வலம் வந்த மகாதேவனின் இசை ...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 28 วันที่ผ่านมา +2

    நம்மை "தொட்டுவிட தொட்டுவிட".. இல்லை.. நம்மை தொட்டு விட்டு தொடரும் திரைஇசை திலகம் மகாதேவனின் இனிமை இது கை பட்டுவிட மலரும்' பெண்மையை பாடும் கவிஞர் .. இனிமையை "அள்ளி அள்ளி தெளித்த" .. இசை தேவதை சுசீலா .. "கண்ணிரண்டில் பாடம் படித்த".சௌந்தர்ராஜன் bagpiper ஒலிக்க கடற்கரை மணல் காலில் தெறிக்க ஓடி வரும் காதல் தேவதை புடவை அழகில் சரோஜாதேவி. கோட்.. டை அணிந்த மக்கள் திலகம்..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    மான் கண்கள் தர ..மயில் சாயல் தர... தேன் இதழை தர ... சிலை அழகாக தர .... என்று கவிஞர் பாடல் தர ... அதை பாடி மகிழும் அழகன் எம்ஜிஆர்.. அழகி சரோஜாதேவி...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    "" மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன ... முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது... ஆடித்திரிந்த கால் இரண்டும் நில் நில் .. என்றன .. ஆசை மட்டும் வாய் திறந்து சொல சொல் என்றது "" அற்புதமாக காதல் உணர்வை கவிதையாக சொல்லும் கவிஞர் கண்ணதாசனின் வரிகள்.... "..பார் பார் .. வா வா .. நில் நில் .. சொல் சொல்" ... என்று ராகம் பாடிய சுசீலா.. சௌந்தராஜன் ....

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    சலங்கை ஒலிக்க சுசீலாவின் இனிமையை மாட்டு வண்டி ஓப்டி பாடி வரும் அழகு தேவதை சரோஜாதேவி.....

  • @ramachandransakkaraipillai
    @ramachandransakkaraipillai 4 หลายเดือนก่อน +8

    MGR is the one & only ever green superstar of Tamil cinefield and super leader who served for poor people of Tamil Nadu.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    காவேரி கரை மேலே பூவாக பாடி வரும் சரோ... நெஞ்சில் இருக்கும் நினைவு பாடும் மக்கள் திலகம்.....

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    '"""ஹலோ ஹலோ .. சுகமா .. '"" என்று தொலைப்பேசியில் சௌந்தராஜன் குரலில் பாடி சரோ விடம் நலம் விசாரித்த எங்கள் தலைவன்.....

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 วันที่ผ่านมา

    ஜனவரி 7 பிறந்த நாள் கொண்டாடிய எழிலரசி சரோவிற்கு இந்த பாடல்கள் சமர்ப்பிக்கப்பட்டது...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +3

    மஞ்சள் முகமே வருக ... மங்கள விளக்கே வருக .. என்று நடிகையர் திலகம் சாவித்திரி அழைத்து பாடும் வேட்டைக்காரன் மக்கள் திலகம்.... அவரை... கொஞ்சும் தமிழே வருக என்று சொல்லி அவரிடம் ""கோடான கோடி தருக"" என்று கேட்கும் சாவித்திரி.......

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 24 วันที่ผ่านมา +1

    Super ❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    நிலவை பார்த்து நீயும் நானும் யார் என்று அமைதி தேடி அஞ்சலிதேவியுடன் பாடி வரும் எம்ஜிஆர்..

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +2

    கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எவர்மனதையும் ரசிக்கவைத்துவிடும் அழகான மிகச் சிறந்த இப்பாடல் பதிவிற்கு மிக்க நன்றிகள்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    பாவை உனக்கு சேதி தெரியுமா.. என்று ராஜசுலோசனாவுடன் ஆடி அழகு காட்டும் நடன சிங்காரி பத்மினி ... ...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    துள்ளியமான கொட்டும் தாளத்துடன் .. "இடி இடிச்ச மழை பொழிஞ்சு .. எல்லாம் நின்னாச்சி .." என்று சுசீலா இனிமையுடன் ஆரம்பிக்க "பக்குவமாய் ... " .. தொடரும் சௌந்தர்ராஜன்.
    "அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதை கேட்டு ...".. என்ற சுசீலாவின் 'அத்தான் .. அத்தான் ..' என்ற அத்தானை மறுமுறை உச்சரிப்பு கேட்டு பரவசமாகுங்கள்.. வயல்வெளிகளிகளில் தண்ணீர் குழாயின் கீழே.. கூடைப்பூவை தலையில் வைத்து ஒய்யாரமாக ஆடிவரும் அந்த 'பையிங்கிளி '.. அழகு ..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    """என்னம்மா சௌக்கியமா?" எப்படி இருக்கு உடம்பு """ ... என்று விசாரித்து சௌந்தராஜனாக பாடும் புரட்சி நடிகர்........

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 28 วันที่ผ่านมา +1

    ..கட்டி தங்கத்தை வெட்டி.. அதில் காதல் சாறு பிழிந்து.. அதை தட்டி தட்டி கவிதை சிலை வடித்த தமிழ் சிற்பி கவிஞர் கண்ணதாசன்..
    "காலையில் மலரும் தாமரை பூ .. அந்தி கருக்கலில் மலரும் மல்லிகை பூ ... இரவில் மலரும் அல்லி பூ .. அவள் என்றும் மணக்கும் முல்லை பூ .. என்று பூத்த பெண்மைக்கு மலரில் முடி சூட்டிய கவிஞர்.. இயற்கை உயிரின் பருவங்கள் எவ்வளவு அழகாக வகுத்துள்ளது பெண்ணின் வாலிபம் என்றும் மணக்குமா?... "தங்க ரதம் போல வந்து.. அல்லி தண்டு போல வளைந்து .. குங்கும பூ போல சிரித்து... அழகே உருவாக வெள்ளை உடை இந்திரலோக தேவதையாக சரோஜாதேவி சிரித்த முகம் காட்டி எம் .ஜி.ஆர். நினைவில் தோன்றி மறைவது.. "தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா ".. டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய உணர்வு . வாலிபத்தின் பாடல் ..

  • @PeacePeace-g2m
    @PeacePeace-g2m 4 หลายเดือนก่อน +3

    Very beautiful songs 😊

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +6

    நிலவு மங்கை எழுதி வைதத பாட்டை கடைசி பாட்டாக நுறு பாடல் உள்ள இந்த பதிவேற்றத்தில் பாடும் ஜோடி ......

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    """ பருவம் பார்த்து பக்கத்தில் வந்தவன்.. காவலனோ .. இல்லை நாயகனோ... "" என்று காதல் நாயகன் எம்ஜிஆரை பார்த்து பாடும் பெண்ணழகு .. சரோ...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    "காதல் இல்லையென்றாலும் காவல் ஒன்று வேண்டுமம்மா" .. என்று சௌந்தரராஜன் இந்த பாடலை பாடிய விதம் .... அதை எம்ஜிஆர் பாடி ஆடி நடித்த விதம்.. ஆஹா.. பாவாடை .. தாவணி கட்டு பூச்சூடியகூந்தல் என்று பருவக்கன்னியை பார்க்க விரும்பும் கவிஞர்.. "தெரோடு சிற்பம் வந்து ஊர்வலம் தான் போவதெங்கே".
    .."பெண்ணுக்கு பெண் காதல் கொள்ளும் கன்னி தன்னந்தனியாக போவதெங்கே".. என்று பாடும் ஆண்மை.. முறை சொல்லும் மாப்பிள்ளையிடமிருந்து தன் கட்டழகை திரையில் மறைக்க எத்தனிக்கும் பேரழகு கன்னி சரோஜாதேவி... ஆண் அழகை பெண்ணழகில் பார்த்த அழகான பாடல் காட்சி.. காவல் இல்லாத பெண்மைக்கு காதல் பாட இசை தந்த மெல்லிசை மன்னரின் இசை ராகம் இது....

  • @balagangadharan3691
    @balagangadharan3691 ปีที่แล้ว +1

    A GREAT PERSON, ONLY MISTAKE WAS JOINING POLITICS.

  • @SampathKumar-fj8op
    @SampathKumar-fj8op ปีที่แล้ว +2

    Super super super 100 super

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +2

    Super song sir from puratchi thaaliver Bharath Ratna legend Dr. mgr

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 28 วันที่ผ่านมา +1

    கவிஞர் கண்ணதாசனுக்கு காதலை பாட கைகொடுக்கும் வார்த்தைகள் தான் என் தமிழ் மொழியின் வளம் .. காதல் கிளியான பெண்ணரசி பேசும் மொழி..."கல்யாணப்பந்தலில் ஆடும் தோரணமா ?.. இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா ? .. செண்டாடும் சேயிழைதானா ? .. தெய்வீக காதலிதானா?."..காதல் கவிதை பாட வந்த கவிஞன் தமிழ் கவிதை பாடி ஊஞ்சலில் ஆடி மகிழ்கிறான் .. கண்களில் காதல் மின்ன பெண்மையின் காதலை ஏற்ற ... 'சொல்லும் மொழி'யின் நாவலனாக எம்.ஜி.ஆர்.. தாமரை இலையில் தண்ணீர் கொண்டு வரும் கனவு தேவதை புத்துணர்வு தவழும் சரோஜாதேவி .. அழகு..
    சேரனையும்.. பாரி வள்ளலளையும் பாடிய இசைக்குயில் சுசீலா .. செந்தூர குங்குமத்தில மோகனம் பாடிவரும் சௌந்தர்ராஜன் .. தொடக்கத்தில் பான்ஜோவின் தாள துள்ளலுடன் .. எப்போது தபேலா தாளத்துள்ளலுக்கு மாறியது ?... பேசும் கிளியை இசை பாடும் கிளியாக்கிய விசுவநாதன் ராமமூர்த்தி ..

  • @masterezhumalai5853
    @masterezhumalai5853 ปีที่แล้ว +2

    Super

  • @vsravivsravi8124
    @vsravivsravi8124 ปีที่แล้ว +3

    Supper. Songs
    Supper. Hero
    Mgr. Isgreat. Leader
    Mgr. Is a.Makkal. Thilagaamg
    Mgr. Is. Chief Minister
    Mgr. Is. Puratchi. Thalaivar
    Mgr. Is. World. Famous. Famous figar

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    "" அன்று வந்ததும் இதே நிலா..."""" பாட
    பியானோவை இழுத்து மீட்டி பாடலின் தொடக்கத்திற்கு சுரம் சேர்த்த இசை ...
    கவிஞர் காதலை பாடுகிறாரா ?... ரோமியோ.. ஜூலியட் .. அம்பிகாபதி அமராவதி.. லைலா.. மஜூனு.. என்று உலகம் அறிந்த காதலர்களை பாடுகிறார்?.. காதலின் இயல்பை பாடுகிறாரா?... காதலின் முடிவை பாடுகிறாரா?... காதல் வாழ்வை வெல்லுமா?... இல்லை கொல்லுமா ?...
    டி.எம்.எஸ். ... சுசீலா .. காதலர்களை தின்ற நிலா பற்றி பாடிய இனிமை ...
    cha cha cha நடனமாடி மனதை கொள்ளும் வெள்ளை கவுன் தேவதை சரோஜாதேவி அழகோ அழகு ....
    தமிழ் திரை உலகில் இனிமையான.. "மெல்லிசை புயல்"... வீசிக்கொண்டிருந்த காலம் அது ....

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    """நினைக்க தெரிந்த மனமே .. உனக்கு மறக்க தெரியாதா """ .. என்று இந்த மனம் தொட்ட சோகத்தை மனம் கனத்த ராகத்தில் பாடிய இசையரசி சுசீலா...

  • @anamdeen7797
    @anamdeen7797 ปีที่แล้ว +6

    Old is gold nothing to compare

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา +1

    தேர்தலில் தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு காதலில் தோல்வி கண்டார் ஜெயிப்பதில்லை என்ற காதல் அரசியல் பாடியபடி படகோட்டும் காதலர்கள்...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 28 วันที่ผ่านมา +1

    " நிலவென்ன பேசும்.. குயிலென்ன பாடும்.. மலரென்ன சொல்லும் மனதிலேகதைபேசுமா..இன்பக்கவி பாடுமா. இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே.."..நிலவையும்.. குயிலையும்.. மலரையும்.. காதலர்கள் கண்கள் பேசும் மொழியை பாடிய கவிஞர் கண்ணதாசன்.. இருவருக்கும்.. ஆஹா எவ்வளவு இணக்கமான குரல் நயம்.. சௌந்தரராஜன் முதல் சரணத்தை". கண்ணோடு கண் பேசும் மொழியிலே.." என்று பாடி முடிக்கும் போது மெல்லியதாக ஒலித்து அடங்கும் அந்த மெல்லிய குழலோசை .. ஆஹா.. நிலவுக்கு ஈடாக ஒளி வீசும் பத்மினி யின் கன்னத்தை சுட்டு விரலால் தொட்டு காதல் பாடும் எம்.ஜி.ஆர்.. இன்ப காதல் கவி பாடிய காதலர்கள்.. நிலவையும்.. மலரையும் .. பாடிய இரு இசை குயில்கள் ... தபேலா ஒலிக்க ஸ்வரம் தந்த திரை இசைத் திலகம் மகாதேவன்...
    குயில்கள் பாடிய இனிமை...

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அனைத்தும் அருமையான பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் 👌👍🎶❤️♥️🎼💐🎵😍🥰🙏 2/4/2023-ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் KOச்சின்

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 2 ปีที่แล้ว +6

    SAROJA DEVI ACTED WITH MGR IN SOMANY FILMS. HER ACTION THROUGH FACE CAN NOT COMPARE WITH OTHER ACTRESS. NOW ALSO SHE LOOKS BEAUTIFUL.

  • @t.lboopathy587
    @t.lboopathy587 ปีที่แล้ว +1

    Super mgr&sar & jaya love nice SONG'S. Arumai.

  • @prakasampalani6675
    @prakasampalani6675 ปีที่แล้ว +6

    Supersongs,🎉🎉🎉
    😅😅😅M,G,R,,sero,

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 28 วันที่ผ่านมา +1

    விளம்பரங்களை போட்டு ரசனையை தடுப்பது போல உள்ளது....

  • @thejamurthyt7998
    @thejamurthyt7998 ปีที่แล้ว +1

    À ndha maapilai Kaadhalichaan

  • @AnwarHussainAbdulkader
    @AnwarHussainAbdulkader 8 หลายเดือนก่อน +4

    My..country..all..like..❤..🦁 song

  • @thambithambi1168
    @thambithambi1168 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @AnwarHussainAbdulkader
    @AnwarHussainAbdulkader 8 หลายเดือนก่อน +2

    ROYAL...SHOW..CYG..MOVIE..Diamon..show..mGR..movie

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender9031 ปีที่แล้ว +3

    My best n favora 💃 and acting is tops 👌 no one can 💓 beat jayalalitha in acting

  • @manimalayapan
    @manimalayapan 23 วันที่ผ่านมา

    17/12/2024todaykannadason❤🎉super hit songs hit 👌 ♥️ manir100thankyou malayapan 🎉

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 ปีที่แล้ว +1

    MGR உம்... கண்ணதாசனுமா ... இவர்களால் வாய வாய சப்ப மட்டும்தானே முடியும் ?

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 29 วันที่ผ่านมา

    """ சின்னவளை .. முகம் சிவந்தவளை.. என்னவளை... காதல் சொன்னவளை """ ... வளையல் போட்டு ஏற்றக்கொண்ட .. கதிரவன் என்ற.. புதிய பூமி ... நாயகன்... தென்காசி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் கதிரவன் என்கின்ற சம்சுதீன்....

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 2 ปีที่แล้ว +1

    KAVERI KARAI WHICH YEAR THIS SONG WAS RELEASED

  • @RaMa-te2dc
    @RaMa-te2dc 2 ปีที่แล้ว +1

    434

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 ปีที่แล้ว

    உரிமைக்குரல் விழியே கதை எழுது கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இல்லை

  • @gajangajandran2077
    @gajangajandran2077 3 ปีที่แล้ว +3

    Gajendiran. S. G. Hema. T. A. J. S. G. G🌍🌍🌍🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌏🌏🌏🌏🌏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🍍🥝🍊🍏🍇🍎🍒🥭🍌🍉🥑🍈🍋🌹🌹🌹🌹🌹🥥🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🖨🖥

    • @gajangajandran2077
      @gajangajandran2077 3 ปีที่แล้ว +1

      Gajendiran. S. G. Hema. T. A. J. S. G. G. 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🍍🥝🍊🍏🍇🍎🍒🍌🍉🥑🍈🍋🥭🌹🌹🌹🌹🌹🥥🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🖨🖥

  • @poonkodi3547
    @poonkodi3547 10 วันที่ผ่านมา

    நான் கலையோடு கலந்தது உண்மை என்ற எம்.எல்.வசந்தகுமாரி அம்மாவின் பாடல் எம் ஜி ஆர் பாடலா? அதில் வீரப்பாதான் வருகிறார் 😅😅😮😮😮

  • @KishorKishor-ru5wd
    @KishorKishor-ru5wd ปีที่แล้ว +1

  • @PannerSelvam-pv6eg
    @PannerSelvam-pv6eg ปีที่แล้ว +2

    ddķr55y

  • @nagarathiravelvel
    @nagarathiravelvel 7 หลายเดือนก่อน

    விளம்பரத்தை போட்டு கழுத்த

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 ปีที่แล้ว +3

    தெவிட்டாத தேன் சொட்டும் பாடல்கள்

  • @ponmanit6443
    @ponmanit6443 5 หลายเดือนก่อน +1

    Super