#புதுக்கோட்டை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #முத்துக்கூடா #Tourism #osmiumchannel
    ஆலங்குடி #புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல் குடி அடுத்த கோடியக்கரையில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரம் உள்ள முத்துக்குடாவில் அலையாத்தி காடுகள் உள்ளன. இங்கு பலவகை மரங்கள் கடற்கரையில் அதிக சேறுள்ள பகுதியில் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. சேற்றில் வளர்ந்தாலும் அதன் வேர்கள் தண்ணீரில் தெப்பம் மிதப்பதுபோல் காட்சியளிக்கும். மரங்கள் பெரும் புயலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த மரங்கள் காட்டில் ஒன்று போல் தோன்றினாலும் அருகில் சென்று உற்று நோக்கும்போது வெவ்வேறு வகைகளாகக் காணப்படும். இவை கண்ணாச்செடி மரங்கள். இப்பகுதி மணல் திட்டுகளாக இருந்தபோது மீனவர்கள் நாட்டுப் படகு மற்றும் கட்டு மரங்களில் சென்று மீன் பிடித்து வந்தனர்.
    தற்போது திட்டுகளில் மரங்கள் அடர்ந்து வளர்ந்து இடைவெளி இல்லாத காடுகளாகி தீவுபோல் ஆகி விட்டதால் அதற்குள் யாரும் செல்வதில்லை. மீன் பிடிப்பதுமில்லை. அலையாத்தி காடுகள் புயல், வெள்ளத்திலிருந்து கிராமங்களை பாதுகாக்கும் அரணாக உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமியின்போது அலையாத்தி காடுகள் பகுதியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் இந்த காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த வனத்துறையினர் மற்ற பகுதிகளில் கருவை மற்றும் தைலமரங்களை வளர்ப்பதுபோல் சேறுள்ள கடற்கரைப் பகுதியில் அலையாத்திக் கன்றுகளை செயற்கையாக உருவாக்கி வளர்த்தும் வைத்திருக்கிறார்கள்.
    முத்துகுடாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாடகைக்கு விசைபடகுகளில் சென்று அலையாத்தி காடுகளை ரசித்துவருகின்றனர்.
    தற்போது மணமேல் குடி அருகேயுள்ள கோடியக்கரை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு ரூ.30 லட்சத்தில் கழிவறை, பெண்கள் உடைமாற்றும் அறை, உயர் கோபுரங்கள், பூங்கா அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளுடன் முத்துகுடா அலையாத்தி காடுகளையும் சுற்றுலாதலமாக்க வேண்டும் எனமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    முத்துக்குடா கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் கூறியதாவது:
    #கடற்கரை வாழ்க்கை சுனாமிக்கு முன், சுனாமிக்கு பின் என்றாகி விட்டது. அலையாத்தி காடுகள் இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறது என்பதை சுனாமிக்கு பின்தான் அறிந்து கொள்ள முடிந்தது. அதன் பிறகுதான் அலையாத்தி காடுகள் ஓரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதை தவிர்த்தோம்.
    கடலில் உள்ள மீன்கள், நண்டு உள்ளிட்டவை இனப்பெருக்கத்திற்கு இந்த அலையாத்தி காடுகளைத்தான் பயன்படுத்திக் கொள்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் மீன்கள் அழிந்து விடக் கூடாது என்பதற்காக தான் இந்த மீன்பிடிதடைகாலம் அறிவிக்கப்படுகிறது. அதேபோல், கடலில் வளர்க்க முடியும் என்ற இடங்களில் அலையாத்தி காடுகளை வளர்க்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் சுனாமி, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களைக் காக்கவும் முடியும்‘ என்றார்.

ความคิดเห็น • 16

  • @palanisamy-fv4vv
    @palanisamy-fv4vv 4 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

    • @arima_gokkul
      @arima_gokkul  4 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள்

  • @vinothv9052
    @vinothv9052 4 ปีที่แล้ว +2

    Semma Tourist place 😍

  • @kpstechnologies5498
    @kpstechnologies5498 4 ปีที่แล้ว +2

    Semma ji

  • @sathyaanand3289
    @sathyaanand3289 9 หลายเดือนก่อน +1

    Super

  • @saranyaanandhan8253
    @saranyaanandhan8253 3 ปีที่แล้ว

    Nice 😍😍😍😍

  • @Kanishka-qb7xv
    @Kanishka-qb7xv 4 ปีที่แล้ว

    Nice semma place

  • @Inba7889
    @Inba7889 7 หลายเดือนก่อน +2

    🎉🎉 இந்த ஊர்க்கு புதுக்கோட்டையில் இருந்து எந்த நம்பர் பஸ்ஸில் வர வேண்டும் 🎉 வாழ்த்துக்கள் 🎉 சகோதர 🎉

  • @kadalriyas5841
    @kadalriyas5841 2 ปีที่แล้ว

    என் ஊர் முத்துக்குடா என்னை கேளுங்கள் கடல் ரியாஸ் யாருனு எல்லாம் சொல்லுவாங்கல்