Dam Water Level Today in Tamilnadu 5Th February 2025 Water discharge from Dams Reservoirs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `நீரின்றி அமையாது உலகு’ என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். தற்போதைய சூழல் தண்ணீரின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் 79% தண்ணீர்தான் உள்ளது. ஆனால், இதில் 97.50% கடல்நீர்தான். மீதமுள்ள 2.5% நன்னீராகவும், மூன்றில் ஒரு பங்கு, பனிக்கட்டிகளாகவும் உள்ளன. எனவே, மிக குறைந்த அளவிலான தண்ணீரே நமக்கு கிடைக்கிறது. இதனால், பெரும்பாலும் மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, அதி வேகமாய் வளரும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல காரணங்களால் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    மேலும், மழைப்பொழிவு குறைவால் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் வறண்டு, பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. எனவே தான், தண்ணீர் சிக்கனமும், சேமிப்பும் மிக மிக அவசியமானதாகியுள்ளது. நீரே மனித வாழ்வின் அடித்தளம் என்பதால் நீரை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

ความคิดเห็น •