தினமலர் எக்ஸ்பிரஸ் | 02 OCT 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin
    முடா வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் தனக்கு வழங்கிய 14 வீட்டு மனைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என, முடாவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதிய கடிதம் வெளியானது. 14 வீட்டு மனைகளையும் திரும்ப பெற்றுக்கொள்ள முடா நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
    இந்தாண்டு கடந்த 9 மாதங்களில் ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ₹ 10.9 லட்சம் கோடி வசூல் ஆனது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இது கடந்த ஆண்டு காலகட்டத்தை காட்டிலும் 9.5 சதவீதம் அதிகம். அப்போது ₹.9.9 லட்சம் கோடி தான் வசூல் ஆகி உள்ளது. 2023 - 24 நிதியாண்டில் ஜி.எஸ்.டி., மூலம் மொத்தம் ரூ.20.18 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
    ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி மாவட்டத்துக்கு 3 நாள் பயணமாக வந்தார். அலிபிரி மலைப்பாதை வழியாக பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். இன்று காலை ஏழுமலையானை தரிசிக்கிறார்.#Expressnews

ความคิดเห็น • 1