Magician and The Monkeys
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Shot, Edited and then Written by Vedarun Rajkumar
Music : www.purple-planet.com
He wanted to challenge himself to write something based on me moving and I have also imagined this experiment when I saw painters paint as they saw moving bodies.
He threw some words at me as I moved
The piece :
வாலில்லா குரங்குகள் வாழும் ஊருக்கு ஒரு மந்திரவாதி வந்தானாம்.
குரங்குகள் மனதின் ஆழத்தில் நினைப்பதை கண்ணை பார்த்தே கண்டுபிடித்து விடுவானாம்.
இதை கேள்விப்பட்ட குரங்குகள் குதூகலம் அடைந்தனவாம்.
ஒன்றன் பின் ஒன்றாய் மந்திரவாதி தங்கி இருந்த மரத்திற்கு சென்றனவாம்.
ஆயிரக்கணக்கான குரங்குகள் மந்திரவாதியை சுற்றி வளைத்துக்கொண்டு சந்தோஷ கூக்குரல் விட்டனவாம்.
குரங்குகளை உற்றுப்பார்த்த மந்திரவாதி "குரங்குகளே உங்கள் நேரம் சரி இல்லை.. உங்களுக்கு அகால மரணம் வரப்போகிறது" என்றானாம்.
கூடி இருந்த குரங்குகள் பீதி அடைந்தன.
உலகமே ஒரு நொடியில் தலைகீழாய் மாறியதே என பயந்து நடுங்கின.
இழந்த சொர்கம் மீண்டும் கிடைக்குமா என பதறின
"கிடைக்கும்.. ஆனால்" என்றான் மந்திரவாதி
"என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்" என்று கெஞ்சின குரங்குகள்
"என்னை உங்கள் தலைவனாக ஏற்று கொள்ளுங்கள். உங்களை நான் சரி செய்கிறேன்" என்றான் மந்திரவாதி.
ஒரு நொடி மௌனம். அடுத்த நொடி கோடி குரங்குகள் சேர்ந்து கோஷமிட்டன "எங்கள் தலைவா"
இல்லாத பிரச்சனையை குணப்படுத்தும் மந்திரம் பலித்தது.
To the land of the tail-less monkeys arrived a mysterious magician from nowhere.
'He stares at the eyes of the monkeys and finds out what's on their minds' spread the word like wildfire.
The monkeys were overjoyed. One after the other, they queued up to get a glimpse of the magician. Thousands of them surrounded him and let a cry of joy and happiness when he appeared.
The magician stared intently at the monkeys.
"Time is not right O monkeys. You are all bound to die a unholy death soon" his voice echoed like a thunder.
The monkeys panicked. Their world changed upside down in a second. "Will we get back our lost happiness?", they begged the magician.
"You will. But...", the magician did not complete his sentence.
"But what?", cried the monkeys.
"Make me your king and I shall solve your problems", said the magician.
The monkeys drowned in silence. Just for a second. Then millions of monkeys cried together in joy "Our king, our king"
The magic spell to cure a disease that never existed had worked.
🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏😍😍😍😍😍😍 superb.tqsm mam.