Night Prayer இரவுநேர குடும்ப ஜெபம் Family Prayer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே. ஆமென்.
    திருச்சிலுவை ஜெபம்
    திருச்சிலுவை அடையாளத்தினாலே! எங்கள் தீயவர்களிடமிருந்து! எங்களை மீட்டருளும். எங்கள் இறைவா தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே. ஆமென்.
    இரவு ஜெபம்
    இறைவா எனக்கு உதவியாக வாரும்!
    ஆண்டவரே எனக்கு உதவி செய்ய விரைந்தருளும்!
    தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மாட்சிமை உண்டாவதாக! தொடக்கத்தில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
    திருப்பாடல் 102
    நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக. என் அகத்துள்ளதெல்லாம் அவரது திருப்பெயரை வாழ்த்துவதாக.
    என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.
    என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக. அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே. என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக. அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார் உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார் உன் உயிரை அழிவினின்று மீட்கிறார். அருளாலும் இரக்கத்தாலும் உன்னை சூழ்கிறார். என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக. நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுப்படுத்துகிறார் கழுகுகளின் இளமையைப் போல் உன் இளமையை புதுப்பிக்கிறார்.என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக. நீதியின் செயல்களை புரிகிறார் ஆண்டவர், துன்புற்றோர் யாவருக்கும் நீதி வழங்குகிறார். மோயீசனுக்கு தம் வழிகளை வெளிப்படுத்தினார். இஸ்ராயேல் மக்களுக்கு தம் செயல்களை விளங்க செய்தார். என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக. ஆண்டவர் இரக்கமும் கருணையுமுள்ளவர். சினம் கொள்ள தாமதிப்பவர். ஏராளமான காருண்யம் கொண்டவர். ஓயாமல் கடிந்து கொள்பவரல்ல, முடிவின்றி கோபம் காட்டுபவர் அல்ல.
    என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.
    நம்முடைய பாவங்களுக்கு ஏற்றபடி நம்மை தண்டிப்பதில்லை. நம் குற்றங்களுக்கு தக்கபடி நமக்கு ஆக்கினையிடுவதில்லை.என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.
    ஏனெனில் வானுலகம் பூவுலகத்திற்கு எவ்வளவு உயர்ந்துள்ளதோ அவ்வளவுக்கு அவர் தமக்கு அஞ்சி நடப்பவர்களுக்கு தயவு காண்பிக்கிறார். மேல் திசைக்கும் கீழ் திசைக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரத்திற்கு நம் பாவங்களை நம்மிடமிருந்து அகற்றியுள்ளார். என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.
    தந்தை தன் மக்களுக்கு இரங்குவது போல் ஆண்டவர் தமக்கு அஞ்சுகிறவர்கள் மேல் இரக்கம் காண்பிக்கிறார். ஏனெனில் அவர் நம்முடைய நிலைமையை நன்றாய் அறிந்திருக்கிறார். நாம் தூசிக்கு சமம் என்று அவருக்கு தெரியாமலில்லை. என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.
    மனிதனின் வாழ்நாள் புல்லை போன்றவை வயல்வெளிகளின் பூக்களைப் போல் காற்றடித்ததும் அது வதங்கி விடுகிறது. இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுகிறது.
    என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.
    ஆண்டவருடைய தயவோவெனில் அவருக்கு அஞ்சி நடப்போர் மீது என்றென்றும் நிலைநிற்கும். அவருடைய நீதியோ அவருடைய உடன்படிக்கையை கடைப்பிடித்து அவரது கற்பனைகளின் படி நடக்க அவற்றை நினைவு கூறும் தலைமுறைகள் மீது நிலைத்திருக்கும்.என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.
    ஆண்டவருடைய வார்த்தையை கேட்டு அவருடைய சொற்படி நடக்கும் ஆண்டவரின் வல்லமை உள்ள தூதர்களே! அவரை வாழ்த்துங்கள். ஆண்டவருடைய திருவுளப்படி நடக்கும் அவருடைய ஊழியர்களே, அவருடைய சேனைகளே, அவரை வாழ்த்துங்கள்.
    என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.
    ஆண்டவருடைய சகல படைப்புகளே அவருடைய ஆளுகை செல்லுகிற இடமெங்கும் அவரை வாழ்த்துங்கள். என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.என் ஆன்மாவே ஆண்டவரை வாழ்த்துவாயாக.
    தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மாட்சிமை உண்டாவதாக. தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
    திருவிவிலியத்திலிருந்து வாசகம்
    எல்லாம் வல்ல இறைவனிடமும் எப்போதும் கன்னியான பரிசுத்த மரியாவிடமும் அதிதூதரான தூய மிக்கேலிடமும், திருமுழுக்கு யோவானிடமும், திருத்தூதரான தூய பேதுரு பவுலிடமும், தூயவர் எல்லாரிடமும் நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும்பாவமே, ஆகையால் எப்பொழுதும் கன்னியான தூய மரியாவையும், அதிதூதர் தூய மிக்கேலையும், திருமுழுக்கு யோவானையும், தூயவர் எல்லோரையும் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன்.
    எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை நிலையான வாழ்வுக்கு அழைத்து செல்வாராக. ஆமென்.
    எல்லாம் வல்ல இரக்கமுள்ள ஆண்டவர் நமக்கு பாவமன்னிப்பும் பொருத்தலும் விமோசனமும் அளிப்பாராக. ஆமென்
    குடும்ப மன்றாட்டு
    ஆண்டவர் உலகப் பெரும் குடும்பமான மானிடத்தின் மீதும் அவருடைய அன்பு குடும்பமாகிய திருச்சபை மீதும் குறிப்பாக அவருடைய பெயரால் இங்கு கூடியிருக்கும் நம் குடும்பத்தின் மீதும் தம் அருட்கொடைகளை பொழிந்தருளுமாறு மன்றாடுவோம். இக்குடும்பத்தில் உறுப்பினர் எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பிலும் தேவ அருளிலும் நிலைத்திருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
    பகையாலும், விரோதத்தாலும் பிரிந்து வாழும் குடும்பங்களை எல்லாம் உமது திரு குடும்பத்தின் ஒற்றுமைக்கும் அன்பு வாழ்வுக்கும் அழைத்து கூட்டி சேர்க்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம். ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
    இக்குடும்பத்தின் மக்கள் எல்லாம் உமக்கும் மனிதருக்கும் உகந்தவர்களாகி ஞானத்திலும், வயதிலும், அருளிலும், வளர்ந்தோங்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம். ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
    இக்குடும்பத்தின் வியாதி துன்ப வருத்தங்களில் நீரே துணையாக நின்று உமது வலக்கரத்தால் பசாசின் சக்திகளை விரட்டியோட்டி தயைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம். ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
    CHECK SCREEN FOR REMAINING PRAYERS.
    #இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#tamilbiblewisdom
    In this video I have shared night time family prayer. prayer is said in tamil.
    / @tamilbiblewisdom2022

ความคิดเห็น • 11

  • @devakialogan5322
    @devakialogan5322 2 วันที่ผ่านมา +1

    🙏ஆமென் 🙏ஆமென் 🙏நன்றி 🙏🙏தகப்பனே 🙏நன்றி 🙏அப்பா 🙏புகழ்கின்றோம் ஆமென் 🙏ஆமென் நன்றி சிஸ்டர் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @kingr.p.rproductions9948
    @kingr.p.rproductions9948 2 วันที่ผ่านมา

    ❤ amen Appa ❤ nanri appa ❤

  • @manjue2455
    @manjue2455 2 วันที่ผ่านมา

    Praise the lord Jesus. Amen.

  • @Nsma-jg3eu
    @Nsma-jg3eu 2 วันที่ผ่านมา

    Amen.amen.amen.❤❤❤❤❤❤

  • @Nsma-jg3eu
    @Nsma-jg3eu 2 วันที่ผ่านมา

    Amen.a.mamen.amen

  • @sudhamanuel9621
    @sudhamanuel9621 2 วันที่ผ่านมา

    Amen Amen 🙏

  • @jenithrani738
    @jenithrani738 2 วันที่ผ่านมา

    Amen Appa

  • @d.ubaharawencilasnadar595
    @d.ubaharawencilasnadar595 2 วันที่ผ่านมา +1

    Amen Amen Amen 🙏

  • @user-nd5ni4lr1y
    @user-nd5ni4lr1y 2 วันที่ผ่านมา

    Amen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Nsma-jg3eu
    @Nsma-jg3eu 2 วันที่ผ่านมา

    Amen.a.mamen.amen