HARIKESAVANALUR NUP
ฝัง
- เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
- நெல்லை உழவாரப்
பணிக் குழாம்
அரிகேசவநல்லூர்
பணிகள்
வரும் ஜூலை 05ல் பெருஞ் சாந்தி விழா காணும் பெரிய நாயகி உடனுறை அரிய நாதர் (அரி கேசவ நல்லூர்) சிவன் கோவில் குட முழுக்கிற்கான எளிய தொண்டுகள் ஆற்ற முயன்றோம். பெருஞ் சாந்தி விழா என்றாலே ஊர் புதுப் பொலிவு பெறப் போகிறதாகவே பொருள். குடமுழுக்கு என்றால் - ஒருபுறம் - கால ஓட்டத்தினால், ஊர் மக்களுக்கு ஏற்பட்ட மாறுபட்ட (Negative thoughts) எண்ணங்களை ஒன்று சுருட்டி, விண்ணில் ஏற்றி வெற்றாக்கி விடுவ தாம். பிறகு மக்கள் ஒன்றுகூடி, ஆரவாரமாக, மகிழ்ச்சியாக அன்பு கொண்டாடக் காணலாம். மேலும் தொண்டாற்று வோரும் தூய்மையும் ஒழுக்கமும் ஓங்கி குண நலம் பெறவும் காணலாம்.
அதிலும் இது குபேரன் பூசனை செய்த கோயில். வறுமை விலகி அன்பர்கள் பொன் பொருள் பெருகக்
காண்பார்கள். அதிலும் திருக் குளத்தை தூர்வார்வது என்பது பெரும் பேறு. வாஸ்து படி, திருக்குளங்கள் கழிவு மண்டி, துப்புரவு இன்றி கிடந்தால், பெண்களுக்கு வயிற்று வலி, கர்ப்பப் பை கோளாறு, மாதவிலக்கு சிரமங்கள் என வெளிசொல்ல முடியாமலும் விளக்கம் தெரியா மலும் நொந்து கொண்டிருப்பர்.
ஈங்குள்ள திருக் குளத்தை தூர்வார, முதல் கிழமையே தண்ணீர் வெளியற்றத் தொடங்கி, அது இயலாமல், முதனாள் குளத்தைச் சுற்றிலும் மரம், செடி கொடிகள் நீக்கி, அடுத்தும் தண்ணீர் வெளி யேறாமல், கைப் பிடிச்சுவர் நீராழி மண்டபம், குளியல் மண்டபம் சீராக்கி, வெள்ளையடித்து, இன்னும் தண்ணீர் வெளியேறாமல் கோயிலின் உள் சுற்று, பெருஞ் சுற்றுகளில் பெரிய வேலைகளை செய்து,
நாலாம் ஞாயிறு அன்று கன்னியாக் குமரி (20) நாகர் கோவில் (25) தூதாதுக்குடி (30) நெல்லை உழவாரப் பணிக் குழாம் (30) நெல்லை நகர் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் (95) மற்றும் உள்ளூர் அன்பர்கள் என 300க்கும் மேற்பட்ட வர்கள் ஒன்று கூடி திருக்குளப் பணி யாற்றியது பெரும் பேறு.
இது போல், ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு திருக்குளங்களை, அன்பர்கள் ஒன்று கூடி தூர்வார வேண்டும் என்பதே பேரவா. - บันเทิง