நண்பர் வீட்டு விஷேசம் கடல் கடந்து வந்த நண்பர்கள் l Kalitheertha ayyanar temple aykaranpulam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • வேதாரண்யம் அருகே தன்னுடன் பணிபுரியும் நண்பர் வீட்டு காதணி விழாவிற்கு கடல் கடந்து வந்த அயல்நாட்டு நண்பர்கள் .
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிபாரதி இவர் இந்தோனேசியாவில் ஒரு கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
    இந்த நிலையில் இவரது மகன்களுக்கு ஆயக்காரன்புரம் கிராமத்தில் உள்ள கலீதீர்த்த அய்யனார் கோவிலில் மொட்டை அடித்து ,காதுகுத்து விழா நடத்தினார் .
    அந்த விழாவிற்கு இந்தோனேசியா மற்றும் சிங்கபூரியில் தன்னுடன் பணியாற்றும் நண்பர்களுக்கு காதணி விழா பத்திரிக்கை அனுப்பி வைத்தார்.
    ரவிபாரதியின் நண்பர்கள் இந்தோனேசியா மற்றும் சிங்கபூரில் இருந்து குடும்பத்தினருடன் கடல் கடந்து விமான மூலம் நண்பர் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்து ஆயக்காரன்புலம் கிராமத்திற்கு வருகை தந்தனர்.
    அழைப்பை ஏற்று தனது ஊருக்கு வந்த வெளிநாட்டு நண்பர்களை அலங்கார வண்டியில் ஏற்றி மாலை மரியாதையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தார். இதை பார்த்த வெளிநாட்டு நண்பர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
    பின்பு காதணி விழா நடைபெற்று முடிந்தது. தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர் வீட்டில் நடக்கும் நிகழ்வுக்கு அழைத்தார் என்ற உடன் உடனடியாக விமான மூலம் குடும்பத்துடன் வந்த வெளிநாட்டவர்களை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

ความคิดเห็น •