பரலோக இராஜ்ஜிய வாசி பரன் இயேசுவின் மெய் விசுவாசி புவி யாத்திரை செய் பரதேசி பரன் பாதம் நீ மிக நேசி ஆபிரகாம் ஈசாக்குடனே ஆதிப் பிதாக்கள் யாவருமே தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே தேடியே நாடியே சென்றனரே அந்நியரே பரதேசிகளே - பரலோகமே திரும்பியே பாரோம் மறந்த தேசம் தீவிரம் செல்வோம் சுய தேசம் தூதர்கள் வாழும் பரமதேசம் துயப் பிதா ஒளி வீசும் தேசம் மேலாக பக்தரின் சொந்த தேசம் - பரலோகமே தனித்தனியே யாத்திரை செல்லுவோம் கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம் குடும்பம் குடும்பமாகச் செல்வோம் ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம் சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் - பரலோகமே நன்மையையும் மேன்மையுமாம் நகரம் நல அஸ்திபார புது நகரம் வாக்குத்தத்தத்தின் திட நகரம் விசுவாசத்தால் அடையும் நகரம் ஏறுகின்றோம் சீயோன் சிகரம் - பரலோகமே சாவு துக்கம் அங்கே இல்லையே சாத்தானின் சேனை அங்கில்லையே கண்ணீர் கவலை அங்கில்லையே காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே - பரலோகமே வெண் வஸ்திரம் பவனி நடக்க வெண் குருத்தோலை கொடி பறக்க பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க - பரலோகமே பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும் மண் ஆசை வேண்டாம் இயேசு போதும் பாவமே வேண்டாம் இயேசு போதும் லோகமே வேண்டாம் இயேசு போதும் ஆத்தும இரட்சகர் இயேசு போதும் - பரலோகமே நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன் நல மனச் சாட்சி நாடிடுவேன் இத்தரை யாத்திரை கடந்திடுவேன் அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன் அந்த தினம் என்று கண்டிடுவேன் - பரலோகமே
One of the unsung song written by the Late. Sis. Sarah Navaroji. Thanks for picking up this song. I recollect the days when sister created this song when I was a child in her church.
பரலோக இராஜ்ஜிய வாசி
பரன் இயேசுவின் மெய் விசுவாசி
புவி யாத்திரை செய் பரதேசி
பரன் பாதம் நீ மிக நேசி
ஆபிரகாம் ஈசாக்குடனே
ஆதிப் பிதாக்கள் யாவருமே
தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே
தேடியே நாடியே சென்றனரே
அந்நியரே பரதேசிகளே - பரலோகமே
திரும்பியே பாரோம் மறந்த தேசம்
தீவிரம் செல்வோம் சுய தேசம்
தூதர்கள் வாழும் பரமதேசம்
துயப் பிதா ஒளி வீசும் தேசம்
மேலாக பக்தரின் சொந்த தேசம் - பரலோகமே
தனித்தனியே யாத்திரை செல்லுவோம்
கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம்
குடும்பம் குடும்பமாகச் செல்வோம்
ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்
சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் - பரலோகமே
நன்மையையும் மேன்மையுமாம் நகரம்
நல அஸ்திபார புது நகரம்
வாக்குத்தத்தத்தின் திட நகரம்
விசுவாசத்தால் அடையும் நகரம்
ஏறுகின்றோம் சீயோன் சிகரம் - பரலோகமே
சாவு துக்கம் அங்கே இல்லையே
சாத்தானின் சேனை அங்கில்லையே
கண்ணீர் கவலை அங்கில்லையே
காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே
பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே - பரலோகமே
வெண் வஸ்திரம் பவனி நடக்க
வெண் குருத்தோலை கொடி பறக்க
பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க
பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க
கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க - பரலோகமே
பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்
மண் ஆசை வேண்டாம் இயேசு போதும்
பாவமே வேண்டாம் இயேசு போதும்
லோகமே வேண்டாம் இயேசு போதும்
ஆத்தும இரட்சகர் இயேசு போதும் - பரலோகமே
நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன்
நல மனச் சாட்சி நாடிடுவேன்
இத்தரை யாத்திரை கடந்திடுவேன்
அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன்
அந்த தினம் என்று கண்டிடுவேன் - பரலோகமே
Praise the Lord
மெய் ஸ்தலத்தை தேடிடவும் மேன்மையான உம் பாதத்தை நாடிடவும் மேலான கிருபை தாரும் எம் மேசியாவே!!! Meaningful song my dear Pastor...
Nice song pastor.
Awesome Pastor...thank you
One of the unsung song written by the Late. Sis. Sarah Navaroji. Thanks for picking up this song. I recollect the days when sister created this song when I was a child in her church.