ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி எனும் திக்ரின் ஐந்து (05) சிறப்புகள் | tamil dua | tamil bayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2021
  • ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்ற திக்ரின் 5 சிறப்புகள்.
    Moulavi Azhar
    முதல் சிறப்பு:
    “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப்
    போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.”(புஹாரி 6405)
    இரண்டாவது சிறப்பு:
    அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்"(இறைவனைத்துதிக்கும்) சொற்களில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு, அவர்கள், "அல்லாஹ், "தன் வானவர்களுக்காக" அல்லது "தன் அடியார்களுக்காக" "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்பதையே தேர்ந்தெடுத்துள்ளான்" என்று பதிலளித்தார்கள். முஸ்லிம் 5277),
    மூன்றாவது சிறப்பு
    அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை நான் உமக்குத் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (அந்த) வார்த்தையை எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினேன். அதற்கு, "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தை "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்பதாகும்" என்று கூறினார்கள். முஸ்லிம் 5278
    நான்காவது சிறப்பு:
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; சுப்ஹானல்லாஹில் அழீம் (பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்;
    கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் புஹாரி 6682
    ஐந்தாவது சிறப்பு:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 5222)
    #tamilbayan #bayantamil #tamilbayannet #tbntamilbayan #tamildua

ความคิดเห็น • 31