அசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன் மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை திறம்பட வினைத்திறனுடன் நிர்வகித்து வருகின்றனர்.
    கொரோனா காலப்பகுதியான இப்போது மாடுகளுக்கான அடர்தீவனங்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் அதன் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தனது பண்ணையில் மாடுகளுக்கு பெருமளவில் அசோலா தீவனத்தை உற்பத்தி செய்து குறிப்பிடத்தக்களவு தீவனத் தேவையை ஈடு செய்து வருவதுடன் நிறைவான பால் உற்பத்தியையும் பெற்று வருகிறார்.
    அசோலா வளர்ப்பு மற்றும் தீவன முகாமைத்துவம் தொடர்பில் எம் பண்ணையாளர்களிடையே சரியான புரிதல் இல்லாத நிலையில், அசோலா தொடர்பிலான பல்வேறு விளக்கங்களையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
    அசோலா பாசி ஓர் அறிமுகம்
    அசோலா தொட்டி அமைப்பது எப்படி?
    அசோலா தொட்டி பராமரிப்பு முறைகள்
    அசோலா தீவன மேலாண்மை
    தொடர்புக்கு - 0770610698

ความคิดเห็น • 17