நபித்தோழர் பிலால் (ரழி) வாழ்க்கை-யில் முக்கிய நிகழ்வுகள்-IslamkalviHD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • ரஸ்தநுரா (ரஹிமா) இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும்
    ரஹிமா 10-வது ஒரு நாள் மாநாடு
    இடம்: மஸ்ஜித் ரஹ்மா
    நாள்: 06-06-2014
    தலைப்பு: நபிகளார் (ஸல்) அவர்களும் நபித்தோழர் பிலால் (ரழி) அவர்களும்
    வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்க தாஃவா நிலையம்)
    வீடியோ: தென்காசி ஸித்திக்
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழராக, முஅத்தீனாக, மெய்காப்பளாராக இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட நீக்ரோ இனத்தில் பிறந்த அடிமையாக இருந்து அதிலிருந்து விடுதலைபெற்று உண்மையான சுதந்திர காற்றை சுவாசித்து, சுதந்திரத்தை முழுமையாக அனுபவித்து அல்லாஹ்விற்கு சிறந்த அடிமையாகவும் அல்லாஹ்-வின் தூதருக்கு மிக சிறந்த திண்ணைத் தோழராகவும் இருந்த பிலால் பின் ரஃப்ஆ (ரழி) அவர்களின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான சில நிகழ்வுகளை பதிவு செய்கின்றார் மவ்லவி முஜாஹித் அவர்கள். குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைவிற்கு பின் பிலால் (ரழி) அவர்கள் எப்படியான மன நிலையில் இருந்தார்கள் அவர்களின் கலீபாக்கள் பிலால் (ரழி) அவர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்ற செய்திகளை கேட்கும்போது உண்மையிலே கண்கலங்கத்தான் செய்கின்றது.
    நவீன காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக குரல் கொடுப்போர், சமூக விடுதலைக்காக போராட கூடியவர்கள், மற்றும் "உண்மையான விடுதலை அடைய முடியுமா?" என்ற வினாவோடு நிற்க கூடியவர்களுக்கு இந்த வீடியோ பதிவில் பயனுள்ள செய்திகள் பல உள்ளன.

ความคิดเห็น • 3