உருளைக்கிழங்கு கட்லெட்/potato cutlets
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- உருளைக்கிழங்கு கட்லெட்
உலகெங்கும் வாழும் எனது அன்புச் சொந்தங்களுக்கு வணக்கம்!
நான் திருமதி மாலதி ஜெயக்குமார்:
எனக்கு மிகவும் பிடித்தமான சமையலில் நான் கற்றுக் கொண்ட பக்குவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. ஒவ்வொரு இனத்தவர்களும் தமக்கென சிறந்த உணவுக் கலாசாரத்தைக் கொண்டவர்கள்.
அவற்றின் தரத்தை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
அவ்வாறு நம் முன்னோர்கள் நமக்காக பாதுகாத்து விட்டுச்சென்ற உணவு சமைக்கும் முறைமையை அவற்றின் தரம், மணம், குணம் மாறாமல் உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதே எனது நோக்கம்.
எனது இந்தப் பக்கத்துடன் இணைந்து கொள்பவர்கள், ஒரு சமையல் வகுப்பறையில் கற்றுக்கொண்டதைப் போன்ற அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பாரம்பரிய உணவுப் பண்டங்கள், நவீனகால உணவுகள், சிறுதானிய உணவுகள், மூலிகை உணவுகள், ஏனைய இன மக்களின் உணவு சமைக்கும் முறைகள், சிற்றுண்டிகள், இனிப்பு பண்டங்கள், பலகார வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்புகள் என அனைத்தும் சரியான அளவுகளுடன் செய்முறை விளக்கத்துடன் இங்கே பதிவேற்றம் செய்யப்படும்.
உணவே மருந்து,
உணவுதான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நம் உடலுக்கு தேவையான அனைத்தையுமே இயற்கை நமக்கு அள்ளித் தந்துள்ளது. அவற்றைப் பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழுவோம்.
காலமாற்றத்தில் நம் பிள்ளைகள் மேல்நாட்டு உணவுகளுக்கு அடிமையாகி விட்டனர்.
அந்த உணவுகளில் காணப்படும் அதீத சுவை மற்றும் கண்ணைப் பறிக்கும் விளம்பரங்களால் அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். நமது உணவு முறைகளை மறந்து வருகின்றனர்.
இது ஆரோக்கியமான ஒன்றல்ல.
பிள்ளைகளை நோயிலிருந்து பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு அம்மாக்களினதும் கடமையாகும்.
வாருங்கள் சமைப்போம்!
ஆரோக்கியமாக சமைப்போம்!!
ஆனந்தமாக சுவைப்போம்!!!
எனது பக்கத்துடன் இணைந்திருங்கள்
நன்றி வணக்கம்!#jaffnafoods #easyrecipe # potato cutlets#
Veri nice
Super 👌
மிக்க நன்றி இணைந்திருங்கள்
பார்ப்பதற்கே அழகாக இருக்கு
மிக்க நன்றி இணைந்திருங்கள்