யுகங்களை கடந்த திருப்பதி மலை - ஆன்மீக புராண கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ஒரு முறை இந்திரன் புஷ்பக விமானத்தில் வரும் பொழுது மலையும் பறந்து கொண்டிருந்ததால் சரியாக கவனிக்காமல் இவனது புஷ்பக விமானம் மலையில் மோதி விட்டது.
    கோபமடைந்த இந்திரன் மலைகளின் இறக்கைகளை வெட்டி விட்டான் . அன்றிலிருந்து மலை பறக்கும் தன்மையை இழந்தது .
    இது ஒன்று இரண்டாவது நிலையாக பூமியில் இருக்கும் மலை பிறகு வளர ஆரம்பித்தது. உதாரணம் விந்திய மலை.
    விந்திய மலை வளர்வதை அகத்தியர் அடக்கினார்.
    பிறகு ஸ்ரீராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் மைந்நாகமலை. இது போன்ற மலைகள் பறப்பதும் வளர்வதும் அந்த காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்தது.
    கோகுலத்தில் இந்திர விழாவை தடை செய்த கிருஷ்ணன் கோவர்த்தன கிரி பூஜை செய்யலாம் என்று சொன்னதால் அது கேட்டு வெகுண்ட இந்திரன் வருணனை அழைத்து கோகுலத்தில் மழை பெய்வித்து கோகுலத்தையே அழித்து விடுமாறு உத்தரவிட்டான்.
    வருணனும் மிக ஆக்ரோஷமாக மழையை கோகுலத்தில் பொழி
    வித்தான்.உடனே கோவர்த்தனகிரியை தனது சுண்டு விரலால் தூக்கி அணைத்து யாதவர்களையும் ஆடுகளையும் மாடுகளையும் மக்களையும் கோவர்த்தன கிரியில் வர செய்து அனைவரையும் மழையிலிருந்து காப்பாற்றினார் கண்ணன்.
    தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.
    கொட்டித்தீர்த்தது .
    குழந்தைகள் ஆடு மாடுகள் அனைவரும் ஆனந்தமாய் கோவர்த்தன கிரியில் இருந்து மழை பொழிவதை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
    அப்போது கோவர்த்தன கிரியும் நகைத்தது.
    அதைக் கண்ட கண்ணன் கோவர்த்தன கிரியிடம் , "என்ன சிரிப்பு ? என் விரல் வலிக்குமே என்று உனக்கு வருத்தம் இல்லையா?? கவலை இல்லையா ?.. " என்று கேட்டான்.
    அதற்கு கோவர்த்தனகிரி, " வலியா, உனக்கா?
    உலகம் முழுதும் தாங்குபவன் நீ. வராக அவதாரத்தில் பூமி முழுவதையுமே தாங்கி ஆகாச த்ரவ்யம் என்ற கடலிலிருந்து மேலே கொண்டுவந்தவன் தானே நீ.... உன்னை நம்பினால் உலகம் மேலே வரும் என்பது உண்மைதானே.
    ஆனாலும், உனக்கு வலிக்க கூடாது என்ற காரணத்திற்காக என்னால் இயன்றவரை என்னை லேசாக்கி கொண்டு விட்டேன் தெரியுமா.." என்று மலை வினவியது.
    மேலும் கோவர்த்தனகிரி கூறியது.
    "இங்குள்ள மக்களின் முகங்களை பார்த்தாயா உன்னைச் சரண் அடைந்து உன் அருளில் நிழலில் ஒதுங்கும் அவர்களுக்கு முன் ஜென்மத்தில் செய்த முன்வினைப்பயன் என்ற ஒன்று கூட கிடையாது.
    அதற்கு நிரூபணம் நானே.." என்று கோவர்த்தனகிரி கூறியது.
    அதற்கு கிருஷ்ணன், "முன் ஜென்மம் பற்றி பேசுகிறாயே. இது துவாபரயுகம். திரேதாயுகத்தில் நீ யாராக இருந்தாய் என்று உனக்கு நினைவு உள்ளதா ?.." என்று கேட்டார்.
    அப்பொழுது மலையின் மனதில் போன ஜென்மத்து ஞாபகம் சிந்தனைகளோடு ஓடிற்று.த்ரேதாயுகமான ராமாயண காலத்தில் சேது பந்தனம் நடந்து கொண்டிருக்கிறது.
    சேது பந்தனத்திற்காக ஆஞ்சநேயர் வடக்கிலிருந்து பெரும் பெரும் மலைத் தொடரிலிருந்து ஒவ்வொரு மலையாக எடுத்துக் கொண்டு வந்து
    கொண்டிருக்கிறார்.
    அப்பொழுது மலைக் கூட்டத்தின் இடையே இருந்த சுமேரு என்ற மலையையும் கையில் எடுத்து வந்து கொண்டிருந்தார்.
    அப்போது ஆகாசத்திலிருந்து பார்த்த ஹனுமன் சேது பந்தனம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து அந்த மலையை அதே இடத்தில் வைத்தார். உடனே சுமேரு மிகவும் வருந்தி "பிரபு என் உற்றார் சுற்றம் உறவினர் சொந்தம் அண்ணன் தம்பி அனைவரும் சேது பந்தனத்திற்கு பயன்படுகிறது.
    நானும் அதற்கு பயன்படுவேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக
    இருந்தேனே..."
    " ஆனால் என்னை இப்படி பாதிவழியில் கீழே வைத்து விட்டீர்களே.." என்று கேட்டது. அது கேட்டு உடனே ஆஞ்சநேயர் ராமரிடம் சென்று இது போன்று கூற ராமர் அந்த மலையிடம் "அடுத்த ஜென்மத்தில் நீ கடவுளுக்கு பயன்படுவாய்.
    காலம் கனிந்து வரும். அதுவரை காத்திரு என்று கூறுவாயாக.." என்று கூறினார் . ஆஞ்சநேயரும் அதை அப்படியே வந்து சுமேரு விடம் கூறினார். இதுவே கோவர்த்தன கிரியின் முந்திய பிறப்பு.
    இரண்டாவது கோவர்த்தன கிரியின் அடுத்த பிறப்பு.
    ஏழுநாள் மழைக்குப் பிறகு இந்திரன் வந்து கண்ணனிடம் பணிந்து தான் செய்த தவறை மன்னித்து அருளுமாறு வேண்ட கண்ணனும் இந்திரனை மன்னித்தருளினான்.
    இந்திரா தான் என்ற அகம்பாவம் மட்டும் என்றும் கூடாது.
    என்றுமே உன்னுடைய நிலையை உணர்ந்து கொண்டு செயல்படு.
    என்று கூற, இந்திரன் சரணடைந்தவர்களை காக்கும் பக்தவச்சலா என்னை மன்னித்து விடுங்கள் என்று வேண்டி வணங்கி , இந்திரலோகம் சென்றான்.
    #கதைகள் #சிறுகதை #ஆன்மீககதைகள் #ஆன்மீககதைகள்தமிழில்
    #புத்தர்கதைகள் #புத்தர்ஆன்மீககதைககள் #புத்தர்கதைகள்
    #துறவிகதை #குழந்தைகளுக்கானகதை #தெய்வநம்பிக்கை #மகாபாரதம்
    #கதை#ஒருநிமிடகதை#ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகதகவல்கள்தமிழில்
    #படித்ததில்பிடித்தது #கதைகள்#ஒருநிமிடகதைகள் #தமிழ்ஆன்மீககதைகள்
    #மகாபாரதஆன்மீககதைகள் #தமிழ்கதைகள்சிறுகதைகள் #தமிழ்கதைகள்
    #புராணகதைகள் #நீதிக்கதைகள் #தன்னம்பிக்கைகதைகள்
    #ஆன்மீகசிறுகதைகள் #புராணகதைகள்தமிழில் #ஆன்மீககுட்டிகதை
    #இரவில்தூங்கஇதமானகதைகள் #படித்ததில்பிடித்தது #இராமாயணம்
    #ராமாயணம் #வேதம்
    #timepass #Buddhastory #tamil #MotivationalVideosinTamil #motivational #KuttyStory #godstory
    #squirrelstory #Orukuttykathai #littlestory,#iraivan, #Motivationstory #kannan, #bedtimestory #entertainment, #devotional, #puranakadhaigal #tamil, #god,#kadavul, #MotivationStoriesinTamilforStudents #newstory, #buddhastoryintamil #MonkStoryinTamil, #kidsstory, #storytime #MotivationStoriesinTamilforEmpolyees #arjunanandkrishnar, #TamilStory #Motivationalvideos #krishnanarjunan #mahabaratham, #TamilMotivationalVideos #story #inspirationalstory, #storyforchildren, #entertainmentstory, #Tamilkathaigal #TamilMotivationalThoughts #aanmeegakadhaigal #storyforkids, #story, #bakthikathaigal, #motivationalstory #devotionalstory #Zenstory #puranastories #MotivationalStories #tamilstory #TamilMotivationStory #Monkstory

ความคิดเห็น • 4

  • @rekas8274
    @rekas8274 11 หลายเดือนก่อน +1

    Hare Krishna ❤❤❤

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  11 หลายเดือนก่อน +1

      Hare Krishna...💕💕💕

  • @anus44
    @anus44 11 หลายเดือนก่อน +1

    Jai Sainath Maharaj ki Jai