10 ஆண்டுகள் கலர் கோழி குஞ்சு வியாபாரம் | Color chicken Business | Hello Madurai | Tv | Fm | Web

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2021
  • சின்ன வயதில் கலர் குஞ்சு மீதான காதல் 80 ன் கிட்ஷ்கள் அனைவருக்கும் நிச்சயமாக இருந்திருக்கும். பிராய்லர் கோழிகள் வருகை காலம் அது. மதுரை தெருக்களில் அட்டை பெட்டிக்குள் கலர் கலராக கோழிக் குஞ்சுகள் ரூ.1க்கு வாங்கிய ஞாபகம் இன்னும் எனக்குள் இருக்கிறது. தாயில்லாமல் தானாக மின்னசாரத்தில் பொறித்த ஒரு நாள் குஞ்சு வீட்டுக்கு வாங்கி வந்து வளர்த்த சிறுவர்களில் நானும் ஒருவன்.
    அப்படிபட்ட கலர் குஞ்சுகளை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை பசுமலை தாஜ்ஹோட்டல் அருகில், அதாவது மதுரை மேற்கு நுழைவாயில் முன்பாக விற்பனை செய்துவ ருகின்றார் திரு. டேவிட் சாமுவேல் அவர்கள். இவரது முக்கியத் தொழில் கரும்புச்சாறு வியாபாரம். இருந்தபோதும், குழந்தைகளின் மகிழ்ச்சிகாகவும், கூடுதல் வருமானத்திற்காகவும் இன்று வரை வளர்த்து வருகின்றார்.
    ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும், நாமக்கல்லில் இருந்து இலட்சக் கணக்கில் ஒரு நாள் பொறித்த குஞ்சுகள் கொண்டு வரப்படுகின்றன. அவர்களிடம் இருந்து வாரம் 300 குஞ்சுகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார் டேவிட். சில நேரங்களில் 5 நாட்களில் அனைத்துமே விற்றுவிடுமாம். அப்போது பல குழந்தைகள் கலர் குஞ்சு கட்டு தரையில் உருண்டு அழுவதாக அவரது மனைவி நம்மிடம் தெரிவித்தார்.
    அந்த பிஞ்சு குழந்தைகளுக்காகவே கலர் கோழி குஞ்சு வாங்கி விற்பதாகவும், இந்த குஞ்சுகள் நன்றாக வளரும் என்றும் தெரிவித்தார். முக்கியமாக இந்த குஞ்சுகள் மீது வண்ணங்கள் அடிப்பதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் இதைதான் அதிகம் வரும்புகிறார்களாம். இந்த கலரால் குஞ்சுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்கிறார் டேவிட். வளர வளர அதாவது சில மாதங்களில் இந்த கலர் முழுமையாக மறைந்து பிராய்லர் கோழியின் தோற்றம், நிறமாக மாறிவிடும்.
    4 வாரங்கள் கூண்டில் அல்லது அட்டை பெட்டியில் வளர்க்க வேண்டும் என்றும் உணவாக அரிசி குறுனை மற்றும் கீரையை பொடியாக வெட்டி கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு பின்பாக வெளியில் விட்டு வளர்க்கலாம். அப்படி வளர்த்தால் நன்றாக வளர்க்கலாம் என்னிறார் டேவிட். அவர் ஆரம்பித்த காலத்தில் ஒரு கோழி குஞ்சு ரூ.5 க்கும், இன்றைக்கு விலை உயர்வால் ரூ.10க்கு விற்பனை செய்கின்றார். இங்கு விற்கப்படும் குஞ்சுகள் அனைத்தும் சேவல்கள் மட்டுமே. பொட்டை கோழிகள் 100ல் ஒன்று தவறி வந்தால் ஆச்சர்யம்.
    கலர் அடிக்காத குஞ்சுகளும் இங்கு கிடைக்கும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எப்பொழுது வேண்டுமானாலும் இவரிடம் வாங்கிக் கொள்ளலாம். மொத்தமாகவும், சில்லரையாகவும் பெற்றுக் கொள்ளலாம். சைடு வருமானத்திற்கு விற்பனை செய்ய விரும்புபவர்கள் இவரை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    கோழி குஞ்சு வாங்கிவிட்டு, கரும்புச்சாறு ஒன்றும் குடித்துவிட்டு மகிழ்ச்சியாய் பயணிக்கலாம். நாம் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அவனது பெற்றோர்களுடன் வந்து மகிழ்ச்சியாக கோழி குஞ்சுகளை வாங்கிச் சென்றதும், அவனது முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை பார்க்கும் பொழுதும், எனது பால்ய நினைவு அசைபோட ஆரம்பித்தது. இப்படி உங்களுக்கும் இதன் நினைவு வந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    கோழி குஞ்சு தேவைக்கு திரு. டேவிட் சாமுவேல்: 63744 57205.
    நன்றிகள் !!
    ________________________________________________________
    ஹலோ மதுரை சேனல்
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. ( Whats app )
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.com/store/apps/de...
    💓 Facebook : / maduraivideo
    💓web site : hellomaduraitv.com/
    💓web site : hellomadurai.in/
    💓web site : tamilvivasayam.com/
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________
    #கலர்கோழி #கலர்கோழிகுஞ்சு #கோழிகுஞ்சு #கோழி #பிராய்லர்கோழிகுஞ்சு #கோழிகுஞ்சு #நாட்டுகோழி #கலர்குஞ்சுவளர்ப்பு #கலர்கோழிகுஞ்சுவிற்பனை #கலர்கோழிகுஞ்சுதொழில் #கலர்கோழிகுஞ்சுவியாபாரம் #கலர்கோழிகுஞ்சுபயணம் #கலர்கோழிகுஞ்சுவளர்க்கும்முறை #கலர்கோழிகுஞ்சுவளர்க்கலாம் #கலர்கோழிகுஞ்சுவாங்க #கலர்கோழிகுஞ்சு #கலர்கோழிகுஞ்சுசிகப்பு #கலர்கோழிகுஞ்சுஉணவு #கலர்கோழிகுஞ்சுகிடைக்கும் #கலர்கோழிகுஞ்சுகூண்டு #நாட்டுக்கோழி #நாட்டுக்கோழிவளர்ப்பு #நாட்டுக்கோழிகுஞ்சு #நாட்டுக்கோழிகுஞ்சுவளர்ப்பு

ความคิดเห็น • 17

  • @GPANDI-bd5nv
    @GPANDI-bd5nv 2 ปีที่แล้ว +3

    நண்பரே மாடு சேல்ஸ் வீடியோ பண்ணுங்க மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாடு ஆடுகளை பற்றி நம்ம மாவட்டத்தில் யாரும் அப்படி பண்ண மாட்றாங்க நீங்கள் புதிதாக ஆரம்பியுங்கள் நல்ல வரவேற்பு கிடைக்கும் நண்பரே 🙏

  • @PrakashPrakash-le6iv
    @PrakashPrakash-le6iv 8 หลายเดือนก่อน +2

    Sir erode lla vanga please

  • @user-mc9ul1uh1t
    @user-mc9ul1uh1t 2 ปีที่แล้ว +3

    வாவ்

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +1

    Nanba super........ varachanthaigall yeralam..... neenga athayum videos podunga ....

  • @manovanadar1384
    @manovanadar1384 2 ปีที่แล้ว

    Super

  • @dharanishkg5607
    @dharanishkg5607 11 หลายเดือนก่อน +1

    தாத்தா இளம்பிள்ளை ஏகாபுரம் Medical க்கு கொண்டு வாங்இக

  • @selviselvi7590
    @selviselvi7590 ปีที่แล้ว +1

    Madurai aga bro

  • @sridharg7361
    @sridharg7361 2 ปีที่แล้ว +1

    Hi sir Reza breed savel Patti oru video pannuinga sir.

  • @user-wr1nw4hj1p
    @user-wr1nw4hj1p ปีที่แล้ว

    குமரா பாளையத்துக்கு ராஜம்தியேட்டர் ஏரியாவிற்கு கலர் கோழி குஞ்சு கொண்டு வாங்க

  • @dogslover4720
    @dogslover4720 2 ปีที่แล้ว +1

    Bro naan pathu valarthen bro ellamey seval bro

    • @RAMACHANDRAN-jw3zl
      @RAMACHANDRAN-jw3zl 2 ปีที่แล้ว +1

      🙏Thapa nanagathinga bro ..... etha valatha nama nattu koli ....kuda etha seval setha nama koli aalychu poirum .....

    • @dogslover4720
      @dogslover4720 2 ปีที่แล้ว +2

      @@RAMACHANDRAN-jw3zl ok bro👍

    • @dogslover4720
      @dogslover4720 2 ปีที่แล้ว +1

      @@hellomadurai yes bro weekly ones kulipaanuga

  • @petsthamizha2314
    @petsthamizha2314 2 ปีที่แล้ว

    Anna siva sithu Anna kitta paruki niram patri oru kaanoli edunga.

  • @Fish_worl
    @Fish_worl 2 ปีที่แล้ว

    Nanba add kammi pannu

  • @eswaramoorthy1934
    @eswaramoorthy1934 ปีที่แล้ว

    அவங்க எங்க ஊருக்கு வருவார்களா

  • @kangatharamoorthi5163
    @kangatharamoorthi5163 2 ปีที่แล้ว

    It will grow up the colour will disappear