கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாஅத் புகார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • கன்னியாகுமரியில் 90 ஆண்டுகளாக இயங்கி வரும் #முஸ்லிம்ஜமாத் மற்றும் அதனுடன் இணைந்த மழலையர் தொடக்க பள்ளியையும் சிலர் கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு.
    #கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாத்தின் முன்னாள் தலைவர் ஹீசைன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.
    கன்னியாகுமரியில் உள்ள முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் கடந்த 90 ஆண்டுகளாக முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு 100 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.
    #பாபுள்ஜனாஇஸ்லாமியநலகழகம் என்ற அமைப்பின் சார்பில் அல்ஜன்னத் என்ற மழலையர் பள்ளி துவங்கப்பட்டு 94 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    இந்நிலையில் முஸ்லீம் ஜமாத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பேற்ற புதிய நிர்வாகி ஒருவர் ஜமாஅத் அமைப்பையும் மழலையர் பள்ளியையும் வெளி ஊரில் இருந்து வந்த புதியதாக துவக்கிய அமைப்பின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்.
    இதன்மூலம் பள்ளியில் உள்ள வருவாய் கணக்கு வழக்கில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ความคิดเห็น •