Vanavil programe - 14 simple experments

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มี.ค. 2023
  • 2022 - 2023ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் இலக்கிய மன்றம், திரைப்படங்கள் திரையிடுதல், வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடந்தது. தற்போது பிப்ரவரி மாதத்திற்கான வானவில் மன்ற போட்டிகள் பள்ளியளவில், ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் நடத்தி முடிக்கப்பட்டு அதில் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 2023 மார்ச் 20 முதல் 26 வரை மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
    மாநில அளவில் 8 மண்டலங்களில் இருந்து வந்த 150 மாணவர்கள் 7 நாட்களும் பிர்ல்லா கோளரங்கம், ஐ.எம்.எஸ்.சி, ஐ.ஐ.டி.மெட்ராஸ், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், வண்டலூர் விலங்கியல் பூங்கா, மெட்ரோ ர்யிலில் செல்ல வாய்ப்பு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மார்ச் 26 ல் ஏவப்பட்ட ராக்கெட்டை நேரில் பார்க்க வாய்ப்பு. இவ்வாறுபல இடங்களுக்கு சென்று அறிவியலில் ஆராய்ச்சி அறிவை பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் அறிவியல் பாடத்தை இன்னும் அதிகமாக விளக்கத்தோடு கற்றுக் கொள்வதற்கு மிக சிறப்பாக அமைந்தது.இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும், இந்நிகழ்வை மிகச் சிறப்பாக அமைய பாடுபட்ட அனைத்து கல்வித்துறை அதிகாரிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும், கருத்தாளர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் அரசு பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்
    தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து150 மாணவர்கள் மட்டுமே இந்த நிகழ்வை கண்டுகளிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இன்னும் எத்தனையோ மாணவர்கள் இதை பார்க்க ஆர்வத்தோடு இருப்பார்கள் என்று நினைத்து நிகழ்வை எல்லா மாணவர்களும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னையில் பார்த்த ஒவ்வொரு நாளுக்குரிய நிகழ்வை காணொளி காட்சியாக பதிவு செய்து, என் சொத்தாகிய மாணவ கண்மணிகளுக்காக யூ டூப்பில் பதிவு செய்திருக்கிறேன். இந்த பதிவு அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
    அனைத்து வீடியோக்களையும் பார்க்க கீழே உள்ள லிங்கை தொடுங்கள்
    • Vanavil Mandram 2022 -...
    Take Off and Shoot a Zero by Chris Zabriskie is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: chriszabriskie....
    Artist: chriszabriskie....

ความคิดเห็น •