கல்வி வணிகமயமாக்கப்படுவதால் கல்வியின் தரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுகிறது - ஜகதீப் தன்கர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • கல்வி வணிகமயமாக்கப்படுவது கல்வியின் தரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
    ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி வியாபாரமாவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றார்.
    கல்வியை வருமானத்திற்கான ஆதாரமாக ஒருபோதும் கருதக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், கல்வி என்பது ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான தியாகம் மற்றும் அறப்பணிகளுக்கான ஊடகமாக திகழவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
    ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மூலம் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பயன் அடையும் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இது உலக அரங்கில் நாட்டின் வல்லமையை உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.
    பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய கல்வி நிறுவனங்கள் அழிக்கப்பட்டதுடன், பண்டைக்கால இந்தியாவிலிருந்த அறிவாற்றல் மையங்களும் , அன்னிய படையெடுப்புகளால் சிதைக்கப்பட்டு விட்டதாக ஜெக்தீப் தன்கர் குறிப்பிட்டார்.

ความคิดเห็น •