Thiruvanamalai kovil visit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • THIRUVANAMALAI
    கிரிவலம்
    திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியன் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது. பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன. எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது. எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்……) உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது. மலைவலப்பாதையில் அஷ்டலிங்கங்கள், நந்திகள், 300 க்கும் மேற்பட்ட குலங்கள் உள்ளன
    அஷ்ட லிங்கங்கள்
    இந்திரலிங்கம் ( கிழக்கு திசை), கிரிவலத்தில் முதலாவது லிங்கம்
    அக்னிலிங்கம் ( தென்கிழக்கு), செங்கம் சாலையில் அமைந்துள்ள இரண்டாவது லிங்கம்.
    எமலிங்கம் (தெற்கு) கிரிவலப்பாதையில இராஜகோபுரத்தில் இருந்து 3 வது கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மூன்றாவது லிங்கம்.
    நிருதி லிங்கம் - (தென்மேற்கு) கிரிவலப்பாதையில் 4 வது லிங்கம்
    வருண லிங்கம் (மேற்கு) இராஜகோபுரத்திலிருந்து 8 வது கி.மீ. அமைந்துள்ள 5 வது லிங்கம்.
    வாயுலிங்கம் - (வடமேற்கு) கிரிவலப்பாதையில் ஆறாவது லிங்கம்
    குபேர லிங்கம் (வடக்கு) கிரிவலப்பாதையில் 7வதாக அமைந்துள்ள லிங்கம்.
    ஈசான்ய லிங்கம் - வடகிழக்கு) எட்டவாது மற்றும் கடைசி லிங்கம்.

ความคิดเห็น • 7

  • @pratheeshjv2728
    @pratheeshjv2728 ปีที่แล้ว +1

    Super 🎉

  • @selvakumar363v
    @selvakumar363v ปีที่แล้ว +1

    , 🙏🙏🙏super..

  • @shivarampaintings
    @shivarampaintings ปีที่แล้ว +1

    Nalla irukku makkale. Sivane potri

    • @Sivamlifestory
      @Sivamlifestory  ปีที่แล้ว

      Thanks anna😊❤shivane potri.alam avan sayal

  • @srisri5068
    @srisri5068 ปีที่แล้ว +1

    Semma video super unga number ollunga vaira கொரைக்க easy வழி இருக்கு one week la koranjidum promisa